tamilkurinji logo


 

முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம் அளித்த புகார் மனு தொடர்ச்சி,




முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம் அளித்த புகார் மனு தொடர்ச்சி

First Published : Saturday , 17th December 2011 12:56:29 PM
Last Updated : Saturday , 17th December 2011 02:13:19 PM


முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம் அளித்த புகார் மனு தொடர்ச்சி,

ஒரு தூய்மையான, ஏழை கிராம மக்கள் மீது உளமார்ந்த பரிவு கொண்ட நிர்வாகத்தை நான் நடத்தினேன். எந்த பவர் புரோக்கர்களும் என்னிடத்தில் பணியாற்றிய வட்டாட்சியர்களை மிரட்ட முடியாது. அதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். அப்படி யாருடைய பரிந்துரையின் படியும் நான் வட்டாட்சியர்களை பணிமாற்றம் செய்ததில்லை. என்னிடத்தில் பணியாற்றிய எல்லா வட்டாட்சியர்களையும் கடுமையான குற்றச்சாட்டுகள் இல்லாத வரை அவர்களது பதவி முழுக்காலமும் பணியாற்ற அனுமதித்து இருக்கிறேன். எந்த அலுவலர்களாவது அவர்களுடைய இலஞ்ச இலாவண்ய நடவடிக்கைகளால் பொதுமக்களால் மிரட்டப்பட்டால் அதற்கு நான் பொறுப்பாக இயலாது.

எனக்கு எதிராக அலுவலர்கள் போராட்டம் நடத்தினார்கள் என்கிறார் இவர். அவர்கள் போராட்டம் நடத்தியது ஊழலுக்கு எதிரான என்னுடைய நடவடிக்கையை கண்டித்துத்தானே ஒழிய அவர்களை மாறுதல் செய்ததால் அல்ல என்று தங்களின் கனிவான கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.

 கிராமத்தில் நான் இரவில் தங்கியதற்கு ரூ.50,000 செலவை கிராம நிர்வாக அலுவலர்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்று சொல்கிறார் இவர். கிராமத்தில் தங்குவதற்கு ஒரு வீட்டைப் பிடித்து புது மாதிரியாக வீட்டை மாற்றி ஏ.சி. போடு என்று நான் சொல்லியதாக இவர் கதை விடுகிறார். இது மாண்புமிகு சட்டப் பேரவை துணைத் தலைவர்  திரு.வி. பி.துரைசாமி அவர்களின் கற்பனைத் திறனுக்கு - பொய்யைப் போனியாக்கி மக்களை நம்ப வைத்துவிடலாம் என்கின்ற இவரது அசாத்திய நம்பிக்கைக்கு ஒரு சான்று. உண்மையில் 300க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ள நாமக்கல் மாவட்டத்தில் 20 கிராமங்களிலேயே நான் தங்கியிருக்கிறேன். அங்கெல்லாம் நான் எங்கும் தனியாக வீடு எடுக்கச் சொன்னதில்லை. என்றைக்கும் நான் ஏ.சி. போடச் சொன்னதில்லை. நான் தங்கியிருந்தது எல்லாம் கிராமத்து பள்ளிக்கூடங்களிலும், சாவடிகளிலும்தான்.  

கொல்லிமலையில் மலைவாழ் மக்கள் வாழக்கூடிய வேலிக்காடு என்கின்ற கிராமத்தில் 17.1.2009 அன்று நான் இரவில் தங்கினேன். இந்த கிராமம் சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகள் ஆகியும் இன்னும் மின்சாரம் வராத ஒரு இருண்ட கிராமம். இந்த கிராமத்து மக்களின் பிரச்சனைகளை நேரில் அறிந்திட - தீர்த்திட  நானே இரவில் அக்கிராமத்தில் தங்கினேன். என்னுடைய முயற்சியாலும், அலுவலர்களின் ஒத்துழைப்பாலும் இந்த கிராமத்திற்கு ஒரு 6 மாத காலத்திற்குள் மின்சாரம் வழங்கப்பட்டிருக்கிறது. நான் தங்கியபொழுது மின்சாரமே இல்லாத ஒரு கிராமத்தில் எப்படி ஏ.சி. இயந்திரத்தை பொருத்தி அவர்கள் வசதி செய்து கொடுத்திருக்க முடியும்? மாண்புமிகு சட்டப் பேரவை துணைத் தலைவர் திரு.வி.பி.துரைசாமி அவர்களின் பொய் சொல்லும் ஆற்றலுக்கு இது ஒரு இன்னொரு சான்று. இது பற்றிய பத்திரிக்கை செய்தியையும் தங்களின் மேலான பார்வைக்கு இணைத்துள்ளேன்.

உண்மையில் நான் ஆடம்பரத்தை அறவே வெறுக்கும் ஒரு எளிய அரசு ஊழியன். உண்மையைச் சொல்லப் போனால் நானும் எனது குடும்பமும் மாவட்ட ஆட்சித் தலைவர் இல்லத்தில்தான் முதன்முறையாக ஏ.சி. பொருத்தப்பட்ட அறைகளில் வாழ்ந்தோம். அதற்கு முன்பு வரை சென்னையிலோ, பிற இடங்களிலோ நானோ, எனது குடும்பமோ ஏ.சி. பொருத்தப்பட்ட வீட்டில் ஒருபோதும் வாழ்ந்ததும் இல்லை, உபயோகப்படுத்தியதும் இல்லை. இதை எனது நெருங்கிய  நண்பர்களும், உறவினர்களும் அறிவார்கள்.

தொடர்ச்சி....

முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம் அளித்த புகார் மனு தொடர்ச்சி, முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம் அளித்த புகார் மனு தொடர்ச்சி, முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம் அளித்த புகார் மனு தொடர்ச்சி,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம் அளித்த புகார் மனு தொடர்ச்சி
மேலும் கிராம நிர்வாக அலுவலர்கள் எளிய கிராமத்து விவசாயிகளிடமும், ஏழைத் தொழிலாளர்களிடமும் கையூட்டு பெற வற்புறுத்துவதை தடுக்க முற்பட்டேன். அமெரிக்க ஐக்கிய நாட்டில் வெறுக்கத் தகுந்த வெள்ளை ஆதிக்கத்திற்கு எதிராக வெடித்துக் கிளம்பிய கருப்புரோஜா மார்ட்டின் லூதர்கிங் குறிப்பிடுவார் "இந்த உலகத்தில்

மேலும்...

 முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம் அளித்த புகார் மனு தொடர்ச்சி
இது சம்பந்தமாக என்னையும் அடிக்கடி தொலைபேசியில் பேசி இழப்பீட்டு தொகையை அதிகரித்துக் கொடுக்கச் சொல்லி நச்சரித்து வந்தார் இவர். இதைப்பற்றி விசாரித்த பொழுது இந்த விவசாயிகளிடத்தில் அதிகமான இழப்பீட்டை பெற்று தருகிறேன் என்று சொல்லி இவர் கனிசமான அளவில் நிதி ஆதாயம்

மேலும்...

 முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம் அளித்த புகார் மனு தொடர்ச்சி
திருச்செங்கோடு வட்டம், வையப்பமலை என்கின்ற இடத்தில் கல் குவாரி அடிப்பதற்கு தனியாருக்கு அனுமதி அளிக்கப்பட்டது.  அங்கே ஒவ்வொரு நடைக்கும் அரசுக்கு இவர்கள் பணம் கட்ட வேண்டும். ஆனால் கூடுதலாக கல் எடுத்து விட்டு குறைவாக பணம் கட்டியிருக்கிறார்கள் என்கின்ற புகாரின் அடிப்படையில்

மேலும்...

 முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம் அளித்த புகார் மனு தொடர்ச்சி
சாதி மதங்களைக் கடந்து மக்களை உளமாற நேசிப்பவன் நான். மக்களை நேசிப்பது என்பது அவர்களின் மரபுகளையும், மத உணர்வுகளையும் மதிக்கின்ற பொழுதுதான் முழுமை பெறுகிறது என்பதை உளமாற உணர்ந்தவன் நான். நான் நாமக்கல் மாவட்ட மக்களை மதங்களுக்கும், சாதிகளுக்கும் அப்பாற்பட்டு உளமாற

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in