tamilkurinji logo


 

முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம் அளித்த புகார் மனு தொடர்ச்சி,




முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம் அளித்த புகார் மனு தொடர்ச்சி

First Published : Saturday , 17th December 2011 12:58:16 PM
Last Updated : Saturday , 17th December 2011 02:26:40 PM


முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம்  அளித்த புகார் மனு தொடர்ச்சி,

அதுமட்டுமல்ல ஒரு 20 ஆண்டு காலமாக பல இளைஞர்கள், இளம்பெண்கள் UPSC தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று இந்திய வருவாய்ப்பணி, இந்திய காவல்பணி போன்றவற்றை பெறுபவர்கள் கூட அதிலே சேராமல் தொகுதி 1 தேர்வு எழுதி துணை கலெக்டராக பதவிக்கு  வந்திருக்கிறார்கள். சமீபத்தில் இந்திய ஆட்சிப் பணிக்கு (IAS) தேறியவர்கள் கூட அதை விட்டு விட்டு தொகுதி 1 தேர்வு எழுதி துணைக் கலெக்டர்களாக வந்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. எனவே எந்த வகையிலும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தகுதியற்றவர்களை தேர்வு செய்வதில்லை. எனவே என்னை வசை பாடுவதாக நினைத்துக் கொண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு முறையை குறைத்து மதிப்பிடவும், கேவலப்படுத்தவும் மாண்புமிகு சட்டப் பேரவை துணைத் தலைவர்; முயன்றிருக்கிறார் என்பதே உண்மை.

அது மட்டுமல்ல, இம்முறையில் தேர்வு பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஐ.ஏ.எஸ். அலுவலர்களை இவர் அவமானப்படுத்த முயன்றிருக்கிறார். எந்த வகையிலும் தமிழிலும், ஆங்கிலத்திலும்,  எழுத்தாற்றலிலோ, பேச்சாற்றலிலோ, தகவல் பரிமாற்றத்திலோ, முடிவெடுப்பதிலோ, நேர்மையாக நிற்பதிலோ, சட்டத்தை கடுமையாக அமல் படுத்துவதிலோ – கடுமையாக உழைப்பதிலோ எவருக்கும் நாங்கள் சளைத்தவர்கள் அல்ல. இன்னும் சொல்லப்போனால் ஒருபடி மேலாக இருக்கவே நாங்கள் முனைகிறோம்.

நான் எனது பணி மாற்றத்திற்கு எதிராக இவர் குறிப்பிடுவது போல எவரையும் தூண்டி விடவில்லை.  2000 கி.மீக்கு அப்பாலே உள்ள உத்தரகாண்ட் மாநிலம் மசூரியில் பயிற்சி பெறக்கூடிய நான் என் பயிற்சியில் கவனம் செலுத்தாமல் எப்படி மக்களை தூண்டி விடமுடியும். தூண்டி விடுவதற்கு நான் என்ன இயக்கமா நடத்துகிறேன், அல்லது அதற்கான நிதி வசதிதான் என்னிடத்தில் இருக்கிறதா? அதற்கான அவசியம் எனக்கு என்ன இருக்கிறது? ஆனால் இலஞ்ச இலாவண்யத்தில் புரையோடிப்போன நிர்வாக அமைப்பில் அதிகாரத் தோரணையும், ஆணவமும் மிக்க,  போலி சமூகப் பார்வை கொண்ட அலுவலர்கள் மத்தியில் அத்திபூத்தாற்போல் இருக்கக் கூடிய நேர்மையான – எளிமையான அலுவலர்கள் மாற்றப்படுகிற பொழுது மக்களினுடைய கோபத்தின் - எதிர்ப்பின் வெளிப்பாடாகவே அந்தப் போராட்டம் நடைபெற்றிருக்கலாம் என்று நான் கருதுகிறேன்.    

 ஊழலில் ஊறிப்போன கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ஆதரவாக இந்த மாற்றம் நடைபெற்றிருக்கிறது என்று ஒரு வேளை மக்கள் கருதிய  காரணத்தினால் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்திருக்கலாமே ஒழிய நான் தூண்டி அவர்கள் போராட வேண்டிய அவசியம் இல்லை. நாட்டில் எவரும் நேர்மையாயில்லை, எவருக்கும் சிந்திக்கக் கூடிய ஆற்றல் இல்லை என்று மாண்புமிகு துணை சபாநாயகர் கருதுகிறார் என்றே நான் நம்புகிறேன். எனவே இது முழுக்க முழுக்க மாண்புமிகு துணை சபாநாயகர் அவர்களின் கற்பனையான, நயவஞ்சகமான குற்றச்சாட்டு என்று நான் தங்களுடைய கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.  மேலும் என்னை மாறுதல் செய்யவும், என்னை எந்தப் பதவியில் சரியாக பயன்படுத்த முடியும் என்ற அடிப்படையிலும், ஒரு பதவியில் அமர்த்த தமிழக அரசுக்கு முழு அதிகாரம் இருக்கிறது என்று சட்டம் படித்த நான் நன்றாக அறிவேன். அதில் முரண்பட எனக்கு எந்த அடிப்படையும் இல்லை என்பதை உணர்ந்தவன் நான்.

மேலும் ஒரு மாவட்ட ஆட்சியர், அந்த மாவட்டத்தின் மாவட்ட நிர்வாக நீதிபதி. மாவட்ட ஆட்சியர் பதவி என்பது மாவட்ட நிர்வாகத்திற்கு பொறுப்பான, கௌரவமான பாரம்பரிய அமைப்பு. அரசின் முகமான ஒரு மாவட்ட ஆட்சியரை, தன் பணிக்காலம் முழுமையும் நேர்மை தவம் புரிந்து எல்லையற்ற நியாயத்தை – உளமார்ந்த சமூகப் பரிவை வெளிப்படுத்திய அலுவலராகிய என்னை, “எச்சில் சோறு தின்று உடம்பை வளர்த்தவனே, நாயே லீவு போட்டு ஓடிவிடு” என்று இழிவு படுத்தி ஊழலில் திளைத்து ஊரைக் கொள்ளையடித்த கிராம நிர்வாக அலுவலக சங்கப் பிரதிநிதிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தரம் தாழ்ந்து பேசினார்கள். அதை அப்படியே வீடியோ எடுத்து உயர் அலுவலர்கள் அனைவருக்கும் அனுப்பி அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கடிதம் எழுதியிருந்தேன். ஆதாரத்துடன் கடிதம் எழுதியும் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

தொடர்ச்சி....

முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம்  அளித்த புகார் மனு தொடர்ச்சி, முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம்  அளித்த புகார் மனு தொடர்ச்சி, முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம்  அளித்த புகார் மனு தொடர்ச்சி,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம் அளித்த புகார் மனு தொடர்ச்சி
மேலும் கிராம நிர்வாக அலுவலர்கள் எளிய கிராமத்து விவசாயிகளிடமும், ஏழைத் தொழிலாளர்களிடமும் கையூட்டு பெற வற்புறுத்துவதை தடுக்க முற்பட்டேன். அமெரிக்க ஐக்கிய நாட்டில் வெறுக்கத் தகுந்த வெள்ளை ஆதிக்கத்திற்கு எதிராக வெடித்துக் கிளம்பிய கருப்புரோஜா மார்ட்டின் லூதர்கிங் குறிப்பிடுவார் "இந்த உலகத்தில்

மேலும்...

 முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம் அளித்த புகார் மனு தொடர்ச்சி
இது சம்பந்தமாக என்னையும் அடிக்கடி தொலைபேசியில் பேசி இழப்பீட்டு தொகையை அதிகரித்துக் கொடுக்கச் சொல்லி நச்சரித்து வந்தார் இவர். இதைப்பற்றி விசாரித்த பொழுது இந்த விவசாயிகளிடத்தில் அதிகமான இழப்பீட்டை பெற்று தருகிறேன் என்று சொல்லி இவர் கனிசமான அளவில் நிதி ஆதாயம்

மேலும்...

 முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம் அளித்த புகார் மனு தொடர்ச்சி
திருச்செங்கோடு வட்டம், வையப்பமலை என்கின்ற இடத்தில் கல் குவாரி அடிப்பதற்கு தனியாருக்கு அனுமதி அளிக்கப்பட்டது.  அங்கே ஒவ்வொரு நடைக்கும் அரசுக்கு இவர்கள் பணம் கட்ட வேண்டும். ஆனால் கூடுதலாக கல் எடுத்து விட்டு குறைவாக பணம் கட்டியிருக்கிறார்கள் என்கின்ற புகாரின் அடிப்படையில்

மேலும்...

 முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம் அளித்த புகார் மனு தொடர்ச்சி
சாதி மதங்களைக் கடந்து மக்களை உளமாற நேசிப்பவன் நான். மக்களை நேசிப்பது என்பது அவர்களின் மரபுகளையும், மத உணர்வுகளையும் மதிக்கின்ற பொழுதுதான் முழுமை பெறுகிறது என்பதை உளமாற உணர்ந்தவன் நான். நான் நாமக்கல் மாவட்ட மக்களை மதங்களுக்கும், சாதிகளுக்கும் அப்பாற்பட்டு உளமாற

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in