tamilkurinji logo


 

முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம் அளித்த புகார் மனு தொடர்ச்சி,




முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம் அளித்த புகார் மனு தொடர்ச்சி

First Published : Saturday , 17th December 2011 12:59:47 PM
Last Updated : Saturday , 17th December 2011 02:27:52 PM


முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம்  அளித்த புகார் மனு தொடர்ச்சி,

மாறாக உயர் அலுவலர்களில் சிலர் என்னை கடிந்து கொள்வதிலும், கட்டுப்படுத்துவதிலும் தீவிரம் காட்டினார்கள். இந்த நிலையில் நேர்மை மிகுந்த சுயமரியாதை நிரம்பிய எந்த அலுவலரும் அப்பதவியில் தொடர விரும்ப மாட்டான்;எனக்கும் அது பொருந்தும். அதனை உயர் அலுவலர்களுக்கும் சுட்டிக்காட்டியிருக் கிறேன்.  எனவே இந்த மாறுதலை தடுத்து நிறுத்த வேண்டிய எண்ணம் எள் முனையளவும் என் உள்ளத்தில் உதிக்கவில்லை.

என்னுடைய பணியில் கடந்த காலத்தில் என்றைக்கும் இந்தப் பதவிதான் வேண்டும் என்று ஒருபோதும் நான் எவரையும் கேட்டதில்லை – பெற்றதில்லை. எந்தப் பதவியையும் மனம் உவந்து ஏற்று எம் நாட்டு மக்களுக்கும் குறிப்பாக, ஏழைகளுக்கு சேவை செய்ய முடியுமா என்று உளமாற முயற்சிப்பவன் நான். வியட்நாமின் மகத்தான தலைவர் கோசிமினின் வார்த்தையே எனக்கு நினைவுக்கு வருகிறது. அவர் மரணத் தருவாயில் இருந்தபொழுது குறிப்பிடுகிறார்.  "என் வாழ்க்கை முழுவதும் இதயப்பூர்வமாகவும், முழுமனத்துடனும் நம் நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் பாடுபட்டுவந்திருக்கிறேன். இந்த உலகத்திலிருந்து நான் விடைபெற்றுக் கொள்ளும் வேளையில் இன்னும் அதிக மக்களுக்கு சேவை செய்ய முடியவில்லையே என்ற ஒரு ஏக்கத்தை தவிர வேறு எதற்காகவும் வருந்தத் தேவையில்லை" என்று.

இன்னும் ஒருபடி மேலே சென்று சொல்ல விரும்புவது அதிகாரம் மிகுந்த பதவிகளில் நான் அமர்த்தப்படுகின்ற பொழுது அந்த அதிகாரத்தை ஏழைகளின் நலனுக்காகவும், அரசின் நலனை பாதுகாக்கவும் முழுமையாக பயன்படுத்த எத்தனிப்பேன். இதற்கு தடையாக இருக்கக் கூடிய இலஞ்ச இலாவண்யத்தில் திளைத்த அலுவலர்கள் மீது நான் கடுமையான நடவடிக்கை எடுக்க முற்படுவேன். இந்த நியாயமான நடவடிக்கைகளை ஆதரிப்பதற்கு பதில் என்னையே பழி வாங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு தொடர்ந்து அதனை நான் சந்தித்து வருகிறேன். அதன் காரணமாக நான் அவமானப்பட்டதோடு மட்டுமல்ல, பல சிரமங்களை நானும் எனது குடும்பத்தினரும் சந்தித்து வந்திருக்கிறோம். எனவே எதிர்காலத்தில் மீதம் இருக்கிற எனது 12 ஆண்டு கால பணிக்காலத்தில் எந்த முக்கியத்துவமும், அதிகாரமும் இல்லாத ஒரு சாதாரண பதவியில் தொடர்ந்து நான் அமர்த்தப்பட்டால் உண்மையில் நான் பெருத்த மகிழ்வடைவேன் என்பதை தங்களுடைய கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.       

நான் மாவட்ட ஆட்சியர் பதவியை ஏற்றுக் கொண்டது கோடிக்கணக்கில் சம்பாதித்து என்னுடைய குடும்ப வளத்தை பெருக்கிக் கொள்ள அல்ல.  மாறாக இந்த நாட்டின் ஜீவனாக விளங்கக் கூடியது  கிராமங்கள் என்று சொன்னாரே தேசப்பிதா காந்தியடிகள், அத்தகைய கிராமங்களில் வாழும் இந்த தேசத்தினுடைய முதுகெலும்பாக விளங்கக் கூடிய உழைத்து உழைத்து உருக்குலைந்து போன எளிய விவசாயிகளுடைய வாழ்வில் ஒரு சிறு மாற்றத்தையும், ஏற்றத்தையும் உருவாக்கிடவும், சமூகத்தின் அடித்தளத்தில் இருக்கக் கூடிய ஏழை மக்கள், தாழ்த்தப்பட்டோர், ஊனமுற்றோர், முதியோர், விதவைகள் இவர்களுடைய வாழ்க்கை உயர்வுக்கு எள்முனையளவாவது  உதவ முடியுமா என்கின்ற அடிப்படையிலும்  மாவட்ட ஆட்சித் தலைவர் பதவியை நான் பயன்படுத்தினேன். அந்த அடிப்படையில் அலட்சியப்படுத்தாத இலட்சியத்துடன் என் கடமையை ஆற்றி வந்தேன்.

தொடர்ச்சி....

முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம்  அளித்த புகார் மனு தொடர்ச்சி, முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம்  அளித்த புகார் மனு தொடர்ச்சி, முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம்  அளித்த புகார் மனு தொடர்ச்சி,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம் அளித்த புகார் மனு தொடர்ச்சி
மேலும் கிராம நிர்வாக அலுவலர்கள் எளிய கிராமத்து விவசாயிகளிடமும், ஏழைத் தொழிலாளர்களிடமும் கையூட்டு பெற வற்புறுத்துவதை தடுக்க முற்பட்டேன். அமெரிக்க ஐக்கிய நாட்டில் வெறுக்கத் தகுந்த வெள்ளை ஆதிக்கத்திற்கு எதிராக வெடித்துக் கிளம்பிய கருப்புரோஜா மார்ட்டின் லூதர்கிங் குறிப்பிடுவார் "இந்த உலகத்தில்

மேலும்...

 முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம் அளித்த புகார் மனு தொடர்ச்சி
இது சம்பந்தமாக என்னையும் அடிக்கடி தொலைபேசியில் பேசி இழப்பீட்டு தொகையை அதிகரித்துக் கொடுக்கச் சொல்லி நச்சரித்து வந்தார் இவர். இதைப்பற்றி விசாரித்த பொழுது இந்த விவசாயிகளிடத்தில் அதிகமான இழப்பீட்டை பெற்று தருகிறேன் என்று சொல்லி இவர் கனிசமான அளவில் நிதி ஆதாயம்

மேலும்...

 முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம் அளித்த புகார் மனு தொடர்ச்சி
திருச்செங்கோடு வட்டம், வையப்பமலை என்கின்ற இடத்தில் கல் குவாரி அடிப்பதற்கு தனியாருக்கு அனுமதி அளிக்கப்பட்டது.  அங்கே ஒவ்வொரு நடைக்கும் அரசுக்கு இவர்கள் பணம் கட்ட வேண்டும். ஆனால் கூடுதலாக கல் எடுத்து விட்டு குறைவாக பணம் கட்டியிருக்கிறார்கள் என்கின்ற புகாரின் அடிப்படையில்

மேலும்...

 முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம் அளித்த புகார் மனு தொடர்ச்சி
சாதி மதங்களைக் கடந்து மக்களை உளமாற நேசிப்பவன் நான். மக்களை நேசிப்பது என்பது அவர்களின் மரபுகளையும், மத உணர்வுகளையும் மதிக்கின்ற பொழுதுதான் முழுமை பெறுகிறது என்பதை உளமாற உணர்ந்தவன் நான். நான் நாமக்கல் மாவட்ட மக்களை மதங்களுக்கும், சாதிகளுக்கும் அப்பாற்பட்டு உளமாற

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in