tamilkurinji logo


 

முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம் அளித்த புகார் மனு தொடர்ச்சி,




முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம் அளித்த புகார் மனு தொடர்ச்சி

First Published : Saturday , 17th December 2011 01:01:09 PM
Last Updated : Saturday , 17th December 2011 02:30:07 PM


முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம்  அளித்த புகார் மனு தொடர்ச்சி,

என்னுடைய சுய நலத்திற்காக நான் மாவட்ட ஆட்சியர் பதவியை ஒருக்காலும் பயன்படுத்திக் கொள்ளவில்லை. மாறாக தமிழக அரசு அறிவித்த அனைத்து திட்டங்களையும் எளிய மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பதில் மிகுந்த தீவிரத்தோடு பணியாற்றினேன். இதற்கான ஒன்று, இரண்டு உதாரணங்களை கீழே கண்டவாறு குறிப்பிட விரும்புகிறேன்.

மாண்புமிகு தமிழக முதல்வரின் சிறப்பு திட்டமான உழவர் சந்தையில் தமிழகத்திலேயே இல்லாத அளவில் வறுமையோடும், வெறுமையோடும் வாழும் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்து அவர்களை மதிப்பூட்டப்பட்ட பொருள்களை உற்பத்தி செய்யக்கூடியவர்களாக - விற்பனை செய்யக் கூடியவர்களாக எம்மாவட்டத்தில் மாற்றியிருக்கிறேன். அது மட்டுமல்லாமல் “உழவன் உணவகம்“என்கின்ற சிறப்புத் திட்டத்தை தமிழகத்திலேயே முதன்முதலாக 2009 செப்டம்பர் மாதத்தில் தொடங்கி அது இன்று மிகச் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.  நான் பதவியில் இருந்த வரை ஏறக்குறைய 1.5 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்து, இதில் எளிய விவசாயிகளுக்கு 40 சதவீதம் அளவில் இலாபம் கிடைக்கச் செய்திருப்பதே இதன் சிறப்பிற்கு சாட்சி. இது பற்றிய பத்திரிக்கை செய்தியையும் தங்களின் மேலான பார்வைக்கு இணைத்துள்ளேன்.

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் 18.09.2009 அன்று நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் பிற மாவட்ட ஆட்சியர்களும் இந்த திட்டத்தினை தங்கள் மாவட்டங்களில் செயல்படுத்த வேண்டுமென அறிவுறுத்தியதை இங்கு நான் குறிப்பிட விரும்புகிறேன்.

அதைப்போல மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் சிறப்புத் திட்டமான கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தை குறைந்த மக்கள் தொகையைக் கொண்ட மாவட்டங்களில் மாநிலத்திலேயே மிக அதிக எண்ணிக்கையில் ஏழை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கச் செய்திருப்பது எம்முடைய மாவட்டத்தில்தான் என்பது குறிப்பிடத்தகுந்தது.

அதைப்போல நாமக்கல் மாவட்டம் தொடர்ந்து நுகர்வோர் நலன் காக்கும் நடவடிக்கையில் மாநில அளவில் முதல் பரிசை பெற்று வருகிறது என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இதைப்போல பிற திட்டங்களையும் எம்முடைய மாவட்டத்தில் நான் சிறப்பாக நிறைவேற்றி வந்திருக்கிறேன்.

இந்த திட்டங்களை சிறப்பாக அமல்படுத்தியதிலிருந்து என்னுடைய உளமார்ந்த ஈடுபாட்டினை புரிந்து கொள்ளலாம். மிகுந்த அர்ப்பணிப்போடு நான் பணியாற்றினேன். அர்ப்பணிப்பு என்பது வெறும் அலங்காரமான வார்த்தை அல்ல.  அது ஆர்ப்பரித்து எழும் ஆடம்பர ஆசைகளை அடக்கும் அற வாழ்க்கை. தனக்கானதைத் தவிர்க்கும் தவம்.  விருப்பங்களை விட்டெறியும் வேள்வி.  சுற்றிச்சுற்றி வரும் சுயநல ஆசையெனும் விட்டில்களை சுட்டெரிக்கும் சுடர் ஏந்தல்.

தொடர்ச்சி....


முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம்  அளித்த புகார் மனு தொடர்ச்சி, முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம்  அளித்த புகார் மனு தொடர்ச்சி, முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம்  அளித்த புகார் மனு தொடர்ச்சி,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம் அளித்த புகார் மனு தொடர்ச்சி
மேலும் கிராம நிர்வாக அலுவலர்கள் எளிய கிராமத்து விவசாயிகளிடமும், ஏழைத் தொழிலாளர்களிடமும் கையூட்டு பெற வற்புறுத்துவதை தடுக்க முற்பட்டேன். அமெரிக்க ஐக்கிய நாட்டில் வெறுக்கத் தகுந்த வெள்ளை ஆதிக்கத்திற்கு எதிராக வெடித்துக் கிளம்பிய கருப்புரோஜா மார்ட்டின் லூதர்கிங் குறிப்பிடுவார் "இந்த உலகத்தில்

மேலும்...

 முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம் அளித்த புகார் மனு தொடர்ச்சி
இது சம்பந்தமாக என்னையும் அடிக்கடி தொலைபேசியில் பேசி இழப்பீட்டு தொகையை அதிகரித்துக் கொடுக்கச் சொல்லி நச்சரித்து வந்தார் இவர். இதைப்பற்றி விசாரித்த பொழுது இந்த விவசாயிகளிடத்தில் அதிகமான இழப்பீட்டை பெற்று தருகிறேன் என்று சொல்லி இவர் கனிசமான அளவில் நிதி ஆதாயம்

மேலும்...

 முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம் அளித்த புகார் மனு தொடர்ச்சி
திருச்செங்கோடு வட்டம், வையப்பமலை என்கின்ற இடத்தில் கல் குவாரி அடிப்பதற்கு தனியாருக்கு அனுமதி அளிக்கப்பட்டது.  அங்கே ஒவ்வொரு நடைக்கும் அரசுக்கு இவர்கள் பணம் கட்ட வேண்டும். ஆனால் கூடுதலாக கல் எடுத்து விட்டு குறைவாக பணம் கட்டியிருக்கிறார்கள் என்கின்ற புகாரின் அடிப்படையில்

மேலும்...

 முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம் அளித்த புகார் மனு தொடர்ச்சி
சாதி மதங்களைக் கடந்து மக்களை உளமாற நேசிப்பவன் நான். மக்களை நேசிப்பது என்பது அவர்களின் மரபுகளையும், மத உணர்வுகளையும் மதிக்கின்ற பொழுதுதான் முழுமை பெறுகிறது என்பதை உளமாற உணர்ந்தவன் நான். நான் நாமக்கல் மாவட்ட மக்களை மதங்களுக்கும், சாதிகளுக்கும் அப்பாற்பட்டு உளமாற

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in