tamilkurinji logo


 

முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம் அளித்த புகார் மனு தொடர்ச்சி,




முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம் அளித்த புகார் மனு தொடர்ச்சி

First Published : Saturday , 17th December 2011 01:03:01 PM
Last Updated : Saturday , 17th December 2011 02:32:14 PM


முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம்  அளித்த புகார் மனு தொடர்ச்சி,

என்னைப் பொறுத்தவரை ஒரு மக்களுக்கான நல் அரசு என்பது கவின்மிகு கட்டடங்களாலும், கணக்கற்ற திட்டங்களாலும், கடுமையான சட்டங்களாலும்  மட்டுமே உருவாக்கப்படுபவை அல்ல.  அத்தகைய திட்டங்களையும், சட்டங்களையும் நிறைவேற்றக்கூடிய நிரம்பிய நியாய உணர்வும் - நெஞ்சம் நிமிர்த்தும் நேர்மைத் தன்மையும், சார்பு இல்லாத சமூகப்பார்வையும், கடமையே கண்ணாகக் கருதும் பண்பு கொண்ட அலுவலர்களே அதன் உயிர்நாடி என்று கருதுகிறேன். இந்த அடிப்படையில்தான் எனக்கு கீழே பணியாற்றக் கூடிய அலுவலர்களை நோக்குகிறேன். இங்கே “மக்கள் நல்ல சட்டங்களால் ஆளப்படுவதைக் காட்டிலும் ஒரு நல்ல மனிதரால் ஆளப்படுவதே சிறப்புக்குரியது என்கிற கீர்த்தி மிகு கிரேக்க தத்துவ ஞானி அரிஸ்டாட்டிலின் வார்த்தையை நினைவு கூற விரும்புகிறேன்."

பல நேரங்களில் அரசின் திட்டங்களை நிறைவேற்றுவதில் எனக்குக் கீழே பணியாற்றக் கூடிய ஊழியர்களில் சிலர்  ஒத்துழைத்தாலும், பலர் எனக்கு ஒத்துழைக்காது தாமதம் செய்வதிலும் கருத்தாய் இருப்பார்கள். சிலர்  இலஞ்சப் புகார்களுக்கு இடம் கொடுப்பவர்களாகவும் இருப்பார்கள். அந்த நிலையில் எங்கெல்லாம் கண்டிக்க வேண்டுமோ அங்கெல்லாம் கண்டித்தும், எங்கெல்லாம் தண்டிக்க வேண்டுமோ அங்கெல்லாம் தண்டித்தும் நான் அவர்களை நெறிப்படுத்தி மிகச் சிறந்த நிர்வாகத்தை நடத்தி வந்திருக்கிறேன். பல நேரங்களில் ஏராளமான லஞ்சப் புகார்கள் கீழே பணியாற்றக் கூடிய அலுவலர்களைப் பற்றி என்னிடத்தில் வருகின்ற பொழுது குறிப்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றிய ஒரு மாவட்ட அளவிலான அலுவலர்  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே நான் இருக்கின்ற பொழுதே இலஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்ட போது நான்  மிகுந்த வருத்தம் அடைந்தேன்.  

இந்த நிலையில் எனக்கு கீழே பணியாற்றக் கூடிய அலுவலர்களுக்கு ஒரு முன் உதாரணமாக விளங்க வேண்டுமென்று விரும்பிய நான் என்னுடைய சொத்துக் கணக்கை 2009 அக்டோபரில் நாமக்கல் மாவட்ட இணையதளத்தில் வெளியிட்டேன்.  இந்த சொத்துக் கணக்கு விவரங்களை ஒருபோதும் பத்திரிக்கையாளர்களிடத்தில் நான் அறிவிக்கவில்லை. நான் எந்த பத்திரிக்கையாளரிடத்திலும் இந்த தகவலை சொல்லவில்லை. இதன் பிறகு பல நாள் கழித்து டைம்ஸ் ஆஃப் இண்டியா ஆங்கில இதழின் நிருபர் நாமக்கல் மாவட்ட இணையதளத்திற்குள் சென்றவர் எனது சொத்து பட்டியல் விவரத்தைப் பார்த்து அடுத்தநாள் அவரே தன்னுடைய பத்திரிக்கையில் இந்தச் செய்தியை வெளியிட்டதற்கு பிறகுதான் வெளியுலகத்திற்கு நான் சொத்துக் கணக்கு வெளியிட்ட விவரம் தெரியும்.

இதில் எனக்கு எந்த விளம்பர நோக்கமும் இல்லை. மாறாக இலஞ்ச இலாவண்யத்தில் ஊறிப்போய் அரசு நலனுக்கும், மக்கள் நலனுக்கும் ஊறு விளைவிக்கின்ற ஊழியர்களுக்கு உதாரணமாக திகழ இதனை  நான் வெளியிட்டேன். அதன் மூலமாக அவர்கள் மத்தியில் ஒரு மனமாற்றத்தை ஏற்படுத்த முடியும். அதன் காரணமாக அரசு திட்டங்களை சிறப்பாக ஏழை மக்களுக்கு கொண்டு சேர்க்க முடியும் என்று நான் நம்பினேன். அந்த அடிப்படையிலேயே சொத்துக் கணக்கை வெளியிட்டேன். இந்த சொத்து கணக்கை வெளியிட்டதற்கு பிறகு இது விளம்பரத்திற்கான ஒரு நடவடிக்கை என்று சிலர் வியாக்கியானம் செய்தார்கள். அதைப் பற்றி  நான் கவலைப்படவில்லை. அப்படி வியாக்கினம் செய்து வெறுப்பை கக்கிய மனிதர்களில் மிக முக்கியமானவர் மாண்புமிகு துணை சபாநாயகர் ஆவார்.  

ஆனால் இந்த சொத்து கணக்கு வெளியிட்டதற்கு பிறகு சில உயர் அலுவலர்களால் நான் தனிமை படுத்தப் பட்டதை உணர்ந்தேன்.  சில உயர் அலுவலர்கள் நான் அனுப்பக் கூடிய கருத்துருக்களை நிராகரித்தனர். மாவட்டத்தில் நேர்மைக்கு புறம்பான, கடமை தவறிய  சில அலுவலர்களை மாறுதல் செய்யக் கோரி கடிதம் எழுதிய பொழுது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட்டனர். விளைவாக நிர்வாகத்தை நடத்த நான் மிகவும் சிரமப்பட்டேன்.  இருப்பினும் தளராமல் அதே நேர்மையோடும், நியாய உணர்வோடும் அரசு திட்டங்களை கடைக்கோடி ஏழை மக்களின் முன்னேற்றத்திற்கு கொண்டு சென்று நிறை வேற்றுவதில் தீவிரம் காட்டினேன். 

தொடர்ச்சி....

முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம்  அளித்த புகார் மனு தொடர்ச்சி, முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம்  அளித்த புகார் மனு தொடர்ச்சி, முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம்  அளித்த புகார் மனு தொடர்ச்சி,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம் அளித்த புகார் மனு தொடர்ச்சி
மேலும் கிராம நிர்வாக அலுவலர்கள் எளிய கிராமத்து விவசாயிகளிடமும், ஏழைத் தொழிலாளர்களிடமும் கையூட்டு பெற வற்புறுத்துவதை தடுக்க முற்பட்டேன். அமெரிக்க ஐக்கிய நாட்டில் வெறுக்கத் தகுந்த வெள்ளை ஆதிக்கத்திற்கு எதிராக வெடித்துக் கிளம்பிய கருப்புரோஜா மார்ட்டின் லூதர்கிங் குறிப்பிடுவார் "இந்த உலகத்தில்

மேலும்...

 முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம் அளித்த புகார் மனு தொடர்ச்சி
இது சம்பந்தமாக என்னையும் அடிக்கடி தொலைபேசியில் பேசி இழப்பீட்டு தொகையை அதிகரித்துக் கொடுக்கச் சொல்லி நச்சரித்து வந்தார் இவர். இதைப்பற்றி விசாரித்த பொழுது இந்த விவசாயிகளிடத்தில் அதிகமான இழப்பீட்டை பெற்று தருகிறேன் என்று சொல்லி இவர் கனிசமான அளவில் நிதி ஆதாயம்

மேலும்...

 முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம் அளித்த புகார் மனு தொடர்ச்சி
திருச்செங்கோடு வட்டம், வையப்பமலை என்கின்ற இடத்தில் கல் குவாரி அடிப்பதற்கு தனியாருக்கு அனுமதி அளிக்கப்பட்டது.  அங்கே ஒவ்வொரு நடைக்கும் அரசுக்கு இவர்கள் பணம் கட்ட வேண்டும். ஆனால் கூடுதலாக கல் எடுத்து விட்டு குறைவாக பணம் கட்டியிருக்கிறார்கள் என்கின்ற புகாரின் அடிப்படையில்

மேலும்...

 முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம் அளித்த புகார் மனு தொடர்ச்சி
சாதி மதங்களைக் கடந்து மக்களை உளமாற நேசிப்பவன் நான். மக்களை நேசிப்பது என்பது அவர்களின் மரபுகளையும், மத உணர்வுகளையும் மதிக்கின்ற பொழுதுதான் முழுமை பெறுகிறது என்பதை உளமாற உணர்ந்தவன் நான். நான் நாமக்கல் மாவட்ட மக்களை மதங்களுக்கும், சாதிகளுக்கும் அப்பாற்பட்டு உளமாற

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in