tamilkurinji logo


 

முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம் அளித்த புகார் மனு தொடர்ச்சி,




முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம் அளித்த புகார் மனு தொடர்ச்சி

First Published : Saturday , 17th December 2011 01:04:18 PM
Last Updated : Saturday , 17th December 2011 02:33:38 PM


முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம்  அளித்த புகார் மனு தொடர்ச்சி,

நகர்புறங்களில் வாழும் நமக்கு உணவு அளித்து உயிர் அளிப்பவன் உழவன். நாம் நலமாக வாழ, அருந்துகிற பாலை அளிப்பவன் இந்த கிராமத்து மனிதன்தான். நாம் அழகாக ஆடைகள் அணிய பருத்தி விளைவிப்பவன் எங்கோ கோவணம் கட்டி நிலத்தில் உழைக்கும் அரை நிர்வாண விவசாயிதான், நகர்புறங்களில் மாட மாளிகைகள் எழுப்பப்பட கிராமத்து தொழிலாளியே செங்கல் சுமக்கிறான்.  எனவே இந்த கிராமத்து மனிதர்கள் எம்மைப் போன்ற மாவட்ட ஆட்சித் தலைவரின் தனிக்கவனத்திற்கும், கனிவுக்கும், கருணைக்கும் உரியவர்கள் என்று நான் உளமாரக் கருதினேன். அதோடு இந்த நாட்டின் முதுகெலும்பாக விளங்கக் கூடிய விவசாயிகளின் முன்னேற்றத்தை தேசத்தின் உண்மையான முன்னேற்றம் என்பதாக கருதினேன்.

உண்மையையும் - உழைப்பையும் நம்பிய ஒரு எளிய விவசாயியின் மகன் நான். கிராமத்தில் பிறந்து வளர்ந்த நான், எம் கிராமத்து எளிய விவசாயிகள், ஏழைத் தொழிலாளர்களின் பிரச்சனைகளை நன்கு அறிவேன். “உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்குக் கூட மிஞ்சாது,” என்ற பழமொழி அன்று மட்டுமல்ல, இன்றும்கூட பொருள் பொதிந்த ஒன்று என்று நான் உளமாற உணர்கிறேன். இன்றும் என் கிராமத்தில் விவசாயத்தை மட்டுமே நம்பி உழைத்த ஒரு உழவனின் வாழ்க்கையில் எந்தப் பொருளாதார மாற்றமும் ஏற்படவில்லை என்பதுதான் கசப்பான உண்மை. இது, இந்த நாட்டில் இருக்கும் கோடானு கோடி எளிய விவசாயிகளுக்கும் பொருந்தும் என்றே நான் நம்புகிறேன். எனவே ஒரு மாவட்ட ஆட்சித் தலைவர் என்கின்ற முறையில் இவர்கள் மீது உளமார்ந்த பரிவு காட்டினேன். அவர்களுக்கு உண்மையில் ஏதாவது உதவி செய்து ஒரு குறைந்த எண்ணிக்கையிலாவது சிரம‌த்திலிருந்து மீட்டு அவர்களை கரையேற்ற முடியுமா என்று எத்தனித்தேன். அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திலும், பிற அரசு அலுவலகங்களிலும் கௌரவமாக நடத்திடவும், அவர்களுடைய பிரச்சனைகளுக்கு முன்னுரிமை அளித்து தீர்த்திடவும் அலுவலர்களுக்கு உறுதியாக அறிவுறுத்தினேன்.

விவசாயிகளினுடைய குறைதீர் கூட்டங்களை அவர்களுடைய குறைகளைக் களைய அந்தந்த கிராமங்களிலேயே சிறப்பாக நடத்தினேன். அவர்களுடைய பிரச்சனைகள் தீர முன்னுரிமை அளித்து  நடவடிக்கை எடுத்தேன். கிராம மக்களின் சிறு சிறு பிரச்சனைகள் தீர கிராம குறைதீர் மன்றத்தை அமைத்தேன். இந்த குறைதீர்மன்றம் மூலமாக 400க்கும் மேற்பட்ட கிராம மக்களின் பிரச்சனைகளை தீர்த்து வைத்தேன்.

கிராமங்களில் இருந்து தொலை தூரத்தில் இருக்கக்கூடிய மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு வந்து கிராம மக்கள் மனுக்களை கொடுப்பதற்கு சிரமப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு  ஒரு நாள் வருவாய்  இழப்போடு செலவும் ஏற்படுகிறது. இதனைப் போக்கிடக் கிராமங்களில் இருந்தே ஊராட்சி அலுவலகத்தில் இருக்கும் கணினியை பயன்படுத்தி வலைப்பூ மூலமாக மாவட்ட ஆட்சித் தலைவருக்கு மனுக்களை அனுப்பக்கூடிய “தொடுவானம்” திட்டத்தை அறிமுகப்படுத்தினேன். அதன் மூலம் மாவட்டத் தலைநகருக்கு வராமலே கிராமத்திலிருந்தே மனுக்களைக் கொடுத்த நூற்றுக் கணக்கான மக்களுக்கு நல திட்ட உதவிகளை வழங்கியிருக்கிறோம். இந்த திட்டத்தை 1.1.2010 அன்று தொடங்கி வைத்தவர் மாண்புமிகு மத்திய  சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திரு.செ.காந்திச்செல்வன் ஆவார்.

அதோடு, அரசு விதிகளின்படி கிராம நிர்வாக அலுவலர்களை கிராமங்களில் தங்க வேண்டுமென்று உத்தரவிட்டேன், நடைமுறைப்படுத்த முயன்றேன். ஆனால் இந்த சிறந்த நிர்வாகத்தை விரும்பாத கிராம நிர்வாக அலுவலர்கள் நான் கிராமத்தில் தங்கி பணியாற்ற வற்புறுத்திய காரணத்தினாலும் அவர்களில் சிலர் ஏழை எளிய மக்கள், விவசாயிகளுக்கு எதிராக இலஞ்ச இலாவண்யத்தில் ஈடுபட்ட காரணத்தினாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்ததினாலும் என் மீது கோபம் கொண்டார்கள்.  அரசுக்கு என் மீது புகார் செய்தார்கள்.  இந்த நிலையில் இவர்கள் எனக்கு எதிராக 16.4.2010 அன்று நான்கு வட்டாட்சியர்கள் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.  கடுமையாக என்னை வசை பாடினார்கள். மேலே குறிப்பிட்ட மக்கள் நலனுக்கான திட்டங்களை எனது சொந்த விளம்பர திட்டங்கள் என விம‌ர்ச‌ன‌ம் செய்தார்கள்.

தொடர்ச்சி....


முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம்  அளித்த புகார் மனு தொடர்ச்சி, முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம்  அளித்த புகார் மனு தொடர்ச்சி, முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம்  அளித்த புகார் மனு தொடர்ச்சி,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம் அளித்த புகார் மனு தொடர்ச்சி
மேலும் கிராம நிர்வாக அலுவலர்கள் எளிய கிராமத்து விவசாயிகளிடமும், ஏழைத் தொழிலாளர்களிடமும் கையூட்டு பெற வற்புறுத்துவதை தடுக்க முற்பட்டேன். அமெரிக்க ஐக்கிய நாட்டில் வெறுக்கத் தகுந்த வெள்ளை ஆதிக்கத்திற்கு எதிராக வெடித்துக் கிளம்பிய கருப்புரோஜா மார்ட்டின் லூதர்கிங் குறிப்பிடுவார் "இந்த உலகத்தில்

மேலும்...

 முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம் அளித்த புகார் மனு தொடர்ச்சி
இது சம்பந்தமாக என்னையும் அடிக்கடி தொலைபேசியில் பேசி இழப்பீட்டு தொகையை அதிகரித்துக் கொடுக்கச் சொல்லி நச்சரித்து வந்தார் இவர். இதைப்பற்றி விசாரித்த பொழுது இந்த விவசாயிகளிடத்தில் அதிகமான இழப்பீட்டை பெற்று தருகிறேன் என்று சொல்லி இவர் கனிசமான அளவில் நிதி ஆதாயம்

மேலும்...

 முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம் அளித்த புகார் மனு தொடர்ச்சி
திருச்செங்கோடு வட்டம், வையப்பமலை என்கின்ற இடத்தில் கல் குவாரி அடிப்பதற்கு தனியாருக்கு அனுமதி அளிக்கப்பட்டது.  அங்கே ஒவ்வொரு நடைக்கும் அரசுக்கு இவர்கள் பணம் கட்ட வேண்டும். ஆனால் கூடுதலாக கல் எடுத்து விட்டு குறைவாக பணம் கட்டியிருக்கிறார்கள் என்கின்ற புகாரின் அடிப்படையில்

மேலும்...

 முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம் அளித்த புகார் மனு தொடர்ச்சி
சாதி மதங்களைக் கடந்து மக்களை உளமாற நேசிப்பவன் நான். மக்களை நேசிப்பது என்பது அவர்களின் மரபுகளையும், மத உணர்வுகளையும் மதிக்கின்ற பொழுதுதான் முழுமை பெறுகிறது என்பதை உளமாற உணர்ந்தவன் நான். நான் நாமக்கல் மாவட்ட மக்களை மதங்களுக்கும், சாதிகளுக்கும் அப்பாற்பட்டு உளமாற

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in