tamilkurinji logo


 

முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம் அளித்த புகார் மனு தொடர்ச்சி,




முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம் அளித்த புகார் மனு தொடர்ச்சி

First Published : Saturday , 17th December 2011 01:05:32 PM
Last Updated : Saturday , 17th December 2011 02:34:57 PM


முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம்  அளித்த புகார் மனு தொடர்ச்சி,

இவர்கள் தங்களது ஊழலை எல்லாம் மறைத்து விட்டு, மாவட்ட நிர்வாகத்திற்கு - அரசுக்கு எதிராக போராடக் கூடிய அவல நிலையை கண்டு கோபம் கொண்ட விவசாயிகள், நுகர்வோர் அமைப்புகள் ஊழல் எதிர்ப்பு அமைப்பினர் ஒன்று சேர்ந்து 20.05.2010 அன்று நாமக்கல் நகரில் எனது வேண்டுகோளையும் மீறி இவர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  4000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டம் முழுக்க முழுக்க கிராமங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் செய்யக் கூடிய இலஞ்ச இலாவண்யத்திற்கு எதிரான - மக்களை அலட்சியமாக நடத்துகின்ற இவர்களின் ஆணவப் போக்கிற்கு எதிரான மக்களின் கொந்தளிப்பு தான்.இதனை இவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

இவ்வளவு எதிர்ப்பினையும் மீறி மீண்டும் 16.06.2010 அன்று தமிழகம் முழுவதுமிருந்து கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கப் பிரதிநிதிகளை அழைத்து வந்து எனக்கு எதிராக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பாக ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறார்கள். அந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க பிரதிநிதிகள் என்னை ஒரு மாவட்ட ஆட்சியர் என்று கூட பாராமல் கடுமையாக வசை பாடுகிறார்கள்.  

அதுவும் நீ என்ன பெரிய யோக்கியனா? என்றும் எச்சில் சோறு திண்ணு உடம்பை வளர்த்தவனே என்றும்,  தூ நாயே என்றும், மரியாதையாக லீவ் போட்டு ஓடி விடு,  உன்னை துரத்தி விடுவோம். நீ ஒரு மதம் மாறியவன் என்றும் பேசுகிறார்கள். ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கிரிமினல்களை உருவாக்குகிறார்கள் என்றும் அவர்கள் விபச்சாரிகளைப் போன்றவர்கள் என்றும் சேசன் குறிப்பிட்டிருக்கிறார், என்று என்னை இழிவு படுத்தி பேசியிருக்கிறார்கள். இது சம்பந்தமாக நான் அப்படியே இதனை வீடியோ எடுத்து வருவாய்த்துறைச் செயலர், வருவாய் நிர்வாக ஆணையர், தலைமைச் செயலர் உள்ளிட்டோர் அனைவருக்கும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி கடிதம் எழுதியிருக்கிறேன்.  இதுவரைக்கும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது என்னை வருத்தத்தில் ஆழ்த்துவது மட்டுமல்ல எனது நேர்மையை சிறுமைப்படுத்து வதாகவே கருதுகிறேன். மேலும் மிகுந்த வருத்தத்தோடு சொல்லிக் கொள்கிறேன், ஊழல் செய்யக்கூடிய மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடிய அலுவலர்களுக்கு சாதகமாகவே அரசு ஒரு நிலைப்பாடு எடுத்திருப்பதாகவே நான் கருதுகிறேன்.

அதற்குப் பிறகு தனியே கிராம நிர்வாக அலுவலர்கள் எனக்கு எதிராக வருவாய் நிர்வாக ஆணையரிடமும், அரசிடமும் புகார் அளித்திருக்கிறார்கள்.  அந்தப் புகாரில் நான் சார்ந்திருக்கக் கூடிய மதத்தைக் குறிப்பிட்டு அந்த மதத்தை பரப்புவதற்காக மத போதகர்களையும், கன்னியாஸ்திரிகளையும் அழைத்து செலவு செய்யச் சொன்னார் என்றும் அப்படி செலவு செய்யாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறேன் என்றும் முற்றிலும் கற்பனையான, பொய்யான, நயவஞ்சகமான - பிரச்சனையை திசை திருப்பக் கூடிய ஒரு குற்றச்சாட்டை இவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். இந்த குற்றச்சாட்டிற்கான எள்முனை அளவு ஆதாரத்தைக் கூட இவர்கள் இதுவரைக்கும் அளிக்க முன்வரவில்லை.

நான் தங்களின் கனிவான கவனத்திற்கு கொண்டு வர விரும்புவது என்னவென்றால், நான் எந்தக் காலத்திலும் மத அடையாளங்களை முன் வைத்து செயல்பட்டதில்லை. மதம்  தனி மனிதரின் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட ஒன்று என்றும், அந்த மத நம்பிக்கை ஒரு அரசு அலுவலரின் செயல்பாட்டில் எள் முனையளவும் வெளிப்பட்டு விடக்கூடாது, குறுக்கிடக் கூடாது  என்பதில் உறுதியாய் இருப்பவன் நான். மேலும் மனிதர்களை மனிதர்களாக மட்டுமே பார்த்து நேசிக்கத் தெரிந்தவன் நான். ஆனால் மிக நயவஞ்சகமான இந்தக் குற்றச்சாட்டை கூறுவதற்கு காரணம் இந்தப் போராட்டத்திற்கு தூண்டுகோலாக இருந்த மாண்புமிகு சட்டப் பேரவை துணைத் தலைவர் திரு.வி.பி.துரைசாமி அவர்கள்தான் என்று நான் குறிப்பிட விரும்புகிறேன். காரணம் போராட்டம் நடந்து அடுத்த சில தினங்களில் இவர் நாமக்கல்லிற்கு வந்தவர் அன்றே வருவாய்த் துறை செயலரிடமும், இன்னும் ஒருசில உயர் அலுவலர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மாவட்ட நிர்வாகம் சீர் குலைந்து விட்டது, உடனடியாக மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை எடுங்கள் என்று சொல்லியிருக்கிறார். அதோடு நக்கீரனுக்கு அளித்த பேட்டியிலும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு சார்பாக கருத்து சொல்லியிருக்கிறார் என்பதை தங்களுடைய மேலான கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.

தொடர்ச்சி....


முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம்  அளித்த புகார் மனு தொடர்ச்சி, முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம்  அளித்த புகார் மனு தொடர்ச்சி, முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம்  அளித்த புகார் மனு தொடர்ச்சி,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம் அளித்த புகார் மனு தொடர்ச்சி
மேலும் கிராம நிர்வாக அலுவலர்கள் எளிய கிராமத்து விவசாயிகளிடமும், ஏழைத் தொழிலாளர்களிடமும் கையூட்டு பெற வற்புறுத்துவதை தடுக்க முற்பட்டேன். அமெரிக்க ஐக்கிய நாட்டில் வெறுக்கத் தகுந்த வெள்ளை ஆதிக்கத்திற்கு எதிராக வெடித்துக் கிளம்பிய கருப்புரோஜா மார்ட்டின் லூதர்கிங் குறிப்பிடுவார் "இந்த உலகத்தில்

மேலும்...

 முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம் அளித்த புகார் மனு தொடர்ச்சி
இது சம்பந்தமாக என்னையும் அடிக்கடி தொலைபேசியில் பேசி இழப்பீட்டு தொகையை அதிகரித்துக் கொடுக்கச் சொல்லி நச்சரித்து வந்தார் இவர். இதைப்பற்றி விசாரித்த பொழுது இந்த விவசாயிகளிடத்தில் அதிகமான இழப்பீட்டை பெற்று தருகிறேன் என்று சொல்லி இவர் கனிசமான அளவில் நிதி ஆதாயம்

மேலும்...

 முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம் அளித்த புகார் மனு தொடர்ச்சி
திருச்செங்கோடு வட்டம், வையப்பமலை என்கின்ற இடத்தில் கல் குவாரி அடிப்பதற்கு தனியாருக்கு அனுமதி அளிக்கப்பட்டது.  அங்கே ஒவ்வொரு நடைக்கும் அரசுக்கு இவர்கள் பணம் கட்ட வேண்டும். ஆனால் கூடுதலாக கல் எடுத்து விட்டு குறைவாக பணம் கட்டியிருக்கிறார்கள் என்கின்ற புகாரின் அடிப்படையில்

மேலும்...

 முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம் அளித்த புகார் மனு தொடர்ச்சி
சாதி மதங்களைக் கடந்து மக்களை உளமாற நேசிப்பவன் நான். மக்களை நேசிப்பது என்பது அவர்களின் மரபுகளையும், மத உணர்வுகளையும் மதிக்கின்ற பொழுதுதான் முழுமை பெறுகிறது என்பதை உளமாற உணர்ந்தவன் நான். நான் நாமக்கல் மாவட்ட மக்களை மதங்களுக்கும், சாதிகளுக்கும் அப்பாற்பட்டு உளமாற

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in