tamilkurinji logo


 

முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம் அளித்த புகார் மனு தொடர்ச்சி,




முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம் அளித்த புகார் மனு தொடர்ச்சி

First Published : Saturday , 17th December 2011 01:07:56 PM
Last Updated : Saturday , 17th December 2011 02:37:28 PM


முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம்  அளித்த புகார் மனு தொடர்ச்சி,

திருச்செங்கோடு வட்டம், வையப்பமலை என்கின்ற இடத்தில் கல் குவாரி அடிப்பதற்கு தனியாருக்கு அனுமதி அளிக்கப்பட்டது.  அங்கே ஒவ்வொரு நடைக்கும் அரசுக்கு இவர்கள் பணம் கட்ட வேண்டும். ஆனால் கூடுதலாக கல் எடுத்து விட்டு குறைவாக பணம் கட்டியிருக்கிறார்கள் என்கின்ற புகாரின் அடிப்படையில் என்னுடைய உத்தரவுப்படி திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் அரசுக்கான இழப்புத் தொகை நிர்ணயம் செய்து வசூலிக்க நடவடிக்கை எடுத்தார். ஆனால் அபராதத்தை ரத்து செய்யக் கோரியும்,என்னுடைய முடிவை மாற்றக் கோரியும் கல் குவாரி உரிமையாளர்கள் சார்பாக இவர் 24.12.2008ல் தங்களுடைய செயலருக்கு ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறார். இவர் தொடர்ந்து என்னிடத்தில் தொலைபேசியில் பேசி அபராதத்தை ரத்து செய்ய நச்சரிக்கிறார். மீண்டும் 00-00-00 தேதியன்று அபராதத்தை ரத்து செய்யவேண்டிக் கடிதம் எழுதுகிறார். இவருக்கு இதில் என்ன அவ்வளவு ஆர்வம் என்று என்னுடைய அதிகாரிகளிடத்திலும், பிறரிடத்திலும் நான் விசாரித்த போது, அவர்கள் மாண்புமிகு சட்டப் பேரவை துணைத் தலைவர்; திரு.வி.பி.துரைசாமி கல் குவாரி உரிமையாளர்களிடம் சில லட்ச ரூபாயை லஞ்சமாக பெற்றதாக அப்பொழுதே எனக்கு தகவல் வந்தது. இது விசாரிக்கப்பட வேண்டியது என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.

இதில் அரசுக்கு இழப்பு ஏற்படக் கூடாது என்று உடனடியாக இந்த கல் குவாரியினுடைய உரிமம் புதுப்பிக்க   வருகின்ற பொழுது ரூ. 5 இலட்சத்தை வசூல் செய்து விட்டோம்.  மேற்கொண்டு தொகையை உரிமம் புதுப்பிக்க வருகின்ற பொழுது வசூல் செய்ய அறிவுறுத்தினேன். இந்த அபராதத்தை முழுமையாக நான் ரத்து செய்யவில்லை என்று மாண்புமிகு சட்டப் பேரவை துணைத் தலைவர்; திரு.வி.பி.துரைசாமிக்கு என் மீது தாங்க இயலா கோபம்.

பிறகு நிதி முறைகேடுகளில் ஈடுபட்ட நாமக்கல் ஊராட்சி ஒன்றியம், வசந்தபுரம் ஊராட்சி மன்றத்தலைவரை நீக்குவதற்காக அறிவிப்பு அனுப்பினேன்.  உடனே மாண்புமிகு சட்டப் பேரவை துணைத் தலைவர் திரு.வி. பி.துரைசாமி அவர்கள் இந்த முயற்சியை தடுத்து நிறுத்த முயன்றார்.  அதற்காக அவர் எழுதிய கடிதத்தில் வசந்தபுரம் ஊராட்சி மன்றத் தலைவரை  பதவி நீக்கம் செய்யும் என்னுடைய முயற்சியை கைவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இதனை நான் ஏற்கவில்லை. நிதி முறைகேடுகளை உறுதிப்படுத்தி இந்த ஊராட்சிமன்றத் தலைவரை ந.க.எண்: 4551/2007/ஊ.நி.3 /24-03-2010 நாளிட்ட உத்தரவுப் படி பதவி நீக்கம் செய்தேன். இதிலிருந்து ஒரு மாவட்ட ஆட்சித்தலைவர் பணியில் இவர் குறுக்கீடு செய்தது உறுதியாகிறது. இந்த முயற்சிக்கு இவர் ஆதாயம் அடைந்ததாக அப்பொழுதே குற்றசாட்டு எழுந்தது. இவரது இந்த ஆதாய முயற்சிக்கு நான் ஆதரவாக இல்லையென்று இவருக்கு என்மீது அப்படி ஒரு கோபம். அதுவே கிரிமினல் கதையாக கிளம்பி வந்திருக்கிறது.  


மேலும் திருச்செங்கோடு வட்டம், படைவீடு வருவாய் கிராமம், தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பின் போது நிலம் அளித்தவர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட இழப்பீட்டு தொகை போதுமானதாக இல்லை என்று மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மேல் முறையீட்டு மனு செய்திருந்தார்கள். இந்நேர்வில்  ஆயிரக்கணக்கான வர்கள் வழக்கறிஞர்கள் மூலமாக மேல்முறையீடு செய்திருந்தார்கள். அந்த வழக்கறிஞர்கள் மேல்முறையீட்டின் போது ஒரு அளவிற்கு மேல் நீங்கள் இழப்பீட்டுத் தொகையை அதிகரித்துக் கொடுக்க முடியாது. எனவே நீங்கள் எந்த உத்தரவு போட்டாலும் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். பிறகு நீதிமன்றத்தில் உரியவாறு முறையிட்டு நியாயமான இழப்பீட்டை பெற முயற்சிக்கிறோம் என்று என்னிடத்தில் குறிப்பிட்டார்கள். அந்த ஆயிரக்கணக்கானவர்களில் ஒரு 40, 50 பேரை மாண்புமிகு துணை சபாநாயகர் அவர்கள் தனியாக மாவட்ட ஆட்சித் தலைவரிடத்தில் மேல் முறையீடு செய்யச் சொல்லி, அவ்வாறே அவர்கள் மேல் முறையீடு செய்தார்கள்.  இவர்களுக்கு ஒரு நியாயமான கூடுதல் இழப்பீட்டுத் தொகை விதிகளுக்குட்பட்டு உத்தரவிடலாம் என்று எண்ணியிருந்தேன். ஆனால் மாண்புமிகு சட்டப் பேரவை துணைத் தலைவர்  அவர்கள் விளைநிலங்களுக்கு சதுரடி கணக்கு போட்டு பல மடங்கு கூடுதலாக இழப்பீட்டு தொகை கொடுக்க வேண்டுமென்று கோரி என்னிடத்தில் அடிக்கடி வற்புறுத்தி வந்தார்.    
 
இதற்கிடையில் நாமக்கல்லில் மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றி வந்தார் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த திரு.கோவிந்தராஜன். மாண்புமிகு சட்டப் பேரவை துணைத் தலைவர் தான் கோரியவாறு பல மடங்கு இழப்பீட்டு தொகையை திரு.கோவிந்தராஜன் பரிந்துரைக்கவில்லை என்ற கோபத்தில் அவரை தொலைபேசியில் அழைத்து அவரது சாதியை குறிப்பிட்டு அந்த தொழிலை செய்வதற்கு தான் நீ லாயக்கு அதை போய் செய்யடா என்று தரக்குறைவாக பேசினார். உடன் அவர் பயந்து போய் என்னிடத்தில் வந்து கண்ணீரோடு சொல்லி விட்டு விடுப்பில் சென்றார். அதற்கு பிறகு அவர் மாறுதலில் சென்று விட்ட நிகழ்ச்சி நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தில் பலருக்குத் தெரியும்.

தொடர்ச்சி....

முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம்  அளித்த புகார் மனு தொடர்ச்சி, முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம்  அளித்த புகார் மனு தொடர்ச்சி, முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம்  அளித்த புகார் மனு தொடர்ச்சி,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம் அளித்த புகார் மனு தொடர்ச்சி
மேலும் கிராம நிர்வாக அலுவலர்கள் எளிய கிராமத்து விவசாயிகளிடமும், ஏழைத் தொழிலாளர்களிடமும் கையூட்டு பெற வற்புறுத்துவதை தடுக்க முற்பட்டேன். அமெரிக்க ஐக்கிய நாட்டில் வெறுக்கத் தகுந்த வெள்ளை ஆதிக்கத்திற்கு எதிராக வெடித்துக் கிளம்பிய கருப்புரோஜா மார்ட்டின் லூதர்கிங் குறிப்பிடுவார் "இந்த உலகத்தில்

மேலும்...

 முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம் அளித்த புகார் மனு தொடர்ச்சி
இது சம்பந்தமாக என்னையும் அடிக்கடி தொலைபேசியில் பேசி இழப்பீட்டு தொகையை அதிகரித்துக் கொடுக்கச் சொல்லி நச்சரித்து வந்தார் இவர். இதைப்பற்றி விசாரித்த பொழுது இந்த விவசாயிகளிடத்தில் அதிகமான இழப்பீட்டை பெற்று தருகிறேன் என்று சொல்லி இவர் கனிசமான அளவில் நிதி ஆதாயம்

மேலும்...

 முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம் அளித்த புகார் மனு தொடர்ச்சி
சாதி மதங்களைக் கடந்து மக்களை உளமாற நேசிப்பவன் நான். மக்களை நேசிப்பது என்பது அவர்களின் மரபுகளையும், மத உணர்வுகளையும் மதிக்கின்ற பொழுதுதான் முழுமை பெறுகிறது என்பதை உளமாற உணர்ந்தவன் நான். நான் நாமக்கல் மாவட்ட மக்களை மதங்களுக்கும், சாதிகளுக்கும் அப்பாற்பட்டு உளமாற

மேலும்...

 முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம் அளித்த புகார் மனு தொடர்ச்சி
இவர்கள் தங்களது ஊழலை எல்லாம் மறைத்து விட்டு, மாவட்ட நிர்வாகத்திற்கு - அரசுக்கு எதிராக போராடக் கூடிய அவல நிலையை கண்டு கோபம் கொண்ட விவசாயிகள், நுகர்வோர் அமைப்புகள் ஊழல் எதிர்ப்பு அமைப்பினர் ஒன்று சேர்ந்து 20.05.2010 அன்று நாமக்கல் நகரில்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in