tamilkurinji logo


 

முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம் அளித்த புகார் மனு தொடர்ச்சி,




முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம் அளித்த புகார் மனு தொடர்ச்சி

First Published : Saturday , 17th December 2011 01:08:48 PM
Last Updated : Saturday , 17th December 2011 02:38:43 PM


முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம்  அளித்த புகார் மனு தொடர்ச்சி,

இது சம்பந்தமாக என்னையும் அடிக்கடி தொலைபேசியில் பேசி இழப்பீட்டு தொகையை அதிகரித்துக் கொடுக்கச் சொல்லி நச்சரித்து வந்தார் இவர். இதைப்பற்றி விசாரித்த பொழுது இந்த விவசாயிகளிடத்தில் அதிகமான இழப்பீட்டை பெற்று தருகிறேன் என்று சொல்லி இவர் கனிசமான அளவில் நிதி ஆதாயம் பெற்றுக் கொண்டதாக  அலுவலர்கள் என்னிடம் தெரிவித்தனர். இதுவும் விசாரிக்கப்பட வேண்டிய ஒன்று  என்று தங்களுடைய மேலான கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.   

இன்னும் சில இனங்களில் எனது நடவடிக்கைகளில் இவர் தலையிட்டு பரிந்துரை செய்தார். விதிகளுக்குட்பட்டு எவையெல்லாம் செய்ய முடியுமோ அவைகளை நான் செய்தேன். விதிகளுக்கு மீறி நான் இவருக்கு உதவி செய்ய முடியாததற்கு இவர் ஆத்திரம் கொண்டு என்னை வசை பாடுகிறார். பொய் பரப்புரை செய்கிறார். கிராம நிர்வாக அலுவலர்களை தூண்டி எனக்கு எதிராக போராடச் செய்தார். என் களங்கமில்லாத நேர்மையை அங்கீகரிக்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை இவர் அவமானப்படுத்த எத்தனிக்கிறார் என்பதே எனது வருத்தமும் வேதனையும்.இவரது இந்த நிலைப்பாடு “A little sincerity is a dangerous thing, and a great deal of it is absolutely fatal” என்ற ஆஸ்கார் ஒயில்டின் வார்த்தை தான் என் நினைவிற்கு வருகிறது.

பொதுவாக இவர் சுற்றுலா மாளிகையிலும், இவர் தங்கி இருக்கக் கூடிய பிற இடங்களிலும் அரசியல் தலைவர்களையோ (ஆளும் கட்சியாக இருந்தாலும்) அலுவலர்களையோ குறிப்பிட்டு தரக் குறைவாக – ஆபாசமான கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தித்தான் பேசுவார் என்பதை நாமக்கல் அரசு அலுவலர்களும், பொதுமக்களும் நன்கு அறிவர்.  ஒரு பொறுப்பான உயர் பதவியில் இருக்கக் கூடிய இவர் இப்படி தரம் தாழ்ந்து பேசுவது நாகரீகம் அல்ல - ஏற்புடையது அல்ல என்று பொது மக்கள் அலுவலர்கள் பேச நான் கேட்டிருக்கிறேன்.  இன்னும் கண்ணியம் கருதி நான் சிலவற்றை தவிர்க்க விரும்புகிறேன்.  இப்படிப்பட்ட சூழலில் ஒரு மாவட்ட ஆட்சித் தலைவராகிய என்னைப் பற்றி மற்ற அரசு அலுவலர்களிடத்தில், கட்சிக்காரர்களிடத்தில் நக்கலாக, நையாண்டியாக, கெட்ட வார்த்தைகளைச் சொல்லி வசவு பாடிய நிலையிலும் நான் நாகரீகம் கருதி அமைதியாக இருந்தேன்.

ஒன்றை நான் மெத்த பணிவன்புடன் தங்களுடைய மேலான கவனத்திற்கு கொண்டு வர விரும்புவது நான் மாவட்ட ஆட்சித் தலைவர் பதவியிலிருந்து சரியாக அரசின் திட்டங்களை நிறைவேற்றவில்லை என்றால் என்னை பணி நீக்கம் செய்யலாம்.  நான் சார்ந்த ஒரு மதத்தினருக்கு ஏதாவது சலுகை காட்டி பிற மதத்தினரை புறக்கணித்திருந்தால் என்னை சிறையில் அடைக்கலாம்.  நான் என்னுடைய மாவட்ட ஆட்சித் தலைவர் பணி மட்டுமல்ல 20 ஆண்டு கால பணிக்காலத்தில் எங்காவது ஒரு சிறு ஊழல் செய்திருந்தாலோ, ஒரு ரூபாய் லஞ்சப் பணம் பெற்றிருந்தாலோ என்னை பொது மக்கள் முன்னிலையில் தூக்கிலிடலாம். ஆனால் முழு நேர்மையானவனாக திட்டங்களை திறம்பட செயல்படுத்தியவனாக எல்லா மக்களையும் நேசித்து பணியாற்றிய நிலையில் மாண்புமிகு சட்டப் பேரவை துணைத் தலைவரின் குற்றச்சாட்டுக்களும், எனக்கு எதிராக கிராம நிர்வாக அலுவலர்களை இவர் தூண்டியதும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்று தங்களின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.

இந்த நிலையில் நான் அரசு திட்டங்களை தீவிரமாக கிராம மக்களிடத்திலே கொண்டு செல்ல விரும்பி நடவடிக்கை எடுத்தேன்.  அதனுடைய ஒரு அம்சமாக கிராம நிர்வாக அலுவலர்கள் கிராமத்திற்கே செல்வதில்லை என்கின்ற புகாரில் அவர்களை கிராமத்திற்கு செல்ல வலியுறுத்தினேன். கிராமத்தில் தங்க அறிவுறுத்தினேன். 23.03.2007 நாளிட்ட வருவாய் நிர்வாக ஆணையர் கடிதத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கிராம நிர்வாக அலுவலர்களை கிராமத்தில் தங்குவதை உறுதி செய்திட வேண்டுமென்று கடுமையாக அறிவுறுத்தப்பட்டது. அந்த அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலர்களை நான் கிராமத்தில் தங்க அறிவுறுத்தினேன். வருவாய் கோட்டாட்சியர்களுக்கும் நான் உத்தரவிட்டேன்.

தொடர்ச்சி....

முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம்  அளித்த புகார் மனு தொடர்ச்சி, முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம்  அளித்த புகார் மனு தொடர்ச்சி, முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம்  அளித்த புகார் மனு தொடர்ச்சி,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம் அளித்த புகார் மனு தொடர்ச்சி
மேலும் கிராம நிர்வாக அலுவலர்கள் எளிய கிராமத்து விவசாயிகளிடமும், ஏழைத் தொழிலாளர்களிடமும் கையூட்டு பெற வற்புறுத்துவதை தடுக்க முற்பட்டேன். அமெரிக்க ஐக்கிய நாட்டில் வெறுக்கத் தகுந்த வெள்ளை ஆதிக்கத்திற்கு எதிராக வெடித்துக் கிளம்பிய கருப்புரோஜா மார்ட்டின் லூதர்கிங் குறிப்பிடுவார் "இந்த உலகத்தில்

மேலும்...

 முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம் அளித்த புகார் மனு தொடர்ச்சி
திருச்செங்கோடு வட்டம், வையப்பமலை என்கின்ற இடத்தில் கல் குவாரி அடிப்பதற்கு தனியாருக்கு அனுமதி அளிக்கப்பட்டது.  அங்கே ஒவ்வொரு நடைக்கும் அரசுக்கு இவர்கள் பணம் கட்ட வேண்டும். ஆனால் கூடுதலாக கல் எடுத்து விட்டு குறைவாக பணம் கட்டியிருக்கிறார்கள் என்கின்ற புகாரின் அடிப்படையில்

மேலும்...

 முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம் அளித்த புகார் மனு தொடர்ச்சி
சாதி மதங்களைக் கடந்து மக்களை உளமாற நேசிப்பவன் நான். மக்களை நேசிப்பது என்பது அவர்களின் மரபுகளையும், மத உணர்வுகளையும் மதிக்கின்ற பொழுதுதான் முழுமை பெறுகிறது என்பதை உளமாற உணர்ந்தவன் நான். நான் நாமக்கல் மாவட்ட மக்களை மதங்களுக்கும், சாதிகளுக்கும் அப்பாற்பட்டு உளமாற

மேலும்...

 முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம் அளித்த புகார் மனு தொடர்ச்சி
இவர்கள் தங்களது ஊழலை எல்லாம் மறைத்து விட்டு, மாவட்ட நிர்வாகத்திற்கு - அரசுக்கு எதிராக போராடக் கூடிய அவல நிலையை கண்டு கோபம் கொண்ட விவசாயிகள், நுகர்வோர் அமைப்புகள் ஊழல் எதிர்ப்பு அமைப்பினர் ஒன்று சேர்ந்து 20.05.2010 அன்று நாமக்கல் நகரில்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in