tamilkurinji logo


 

முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம் அளித்த புகார் மனு தொடர்ச்சி,
முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம் அளித்த புகார் மனு தொடர்ச்சி

First Published : Saturday , 17th December 2011 01:10:48 PM
Last Updated : Saturday , 17th December 2011 02:40:10 PM


முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம்  அளித்த புகார் மனு தொடர்ச்சி,

மேலும் கிராம நிர்வாக அலுவலர்கள் எளிய கிராமத்து விவசாயிகளிடமும், ஏழைத் தொழிலாளர்களிடமும் கையூட்டு பெற வற்புறுத்துவதை தடுக்க முற்பட்டேன். அமெரிக்க ஐக்கிய நாட்டில் வெறுக்கத் தகுந்த வெள்ளை ஆதிக்கத்திற்கு எதிராக வெடித்துக் கிளம்பிய கருப்புரோஜா மார்ட்டின் லூதர்கிங் குறிப்பிடுவார் "இந்த உலகத்தில் நடக்கும் அநியாயங்களுக்கு காரணம் அதைச் செய்யக்கூடிய அக்கிரமக்காரர்கள் அல்ல.  அந்த அநியாயங்களை வெளியே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடிய பெரும்பாலான மக்கள்தான்" என்று. அந்த அடிப்படையில் எளிய மக்களை வாட்டி வதைக்கும் சில கிராம நிர்வாக அலுவலர்களை கண்டித்தேன், தண்டித்தேன். அதைப் பொறுக்காமல் எனக்கு எதிராக இவர்கள் போராட்டம் நடத்தினர். எனது விசாரணையில் தெரிய வந்தது என்னவென்றால் மாண்புமிகு சட்டப் பேரவை துணைத் தலைவர் திரு.வி.பி. துரைசாமி இவர்களை அழைத்து நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவரை அப்புறப்படுத்த நீங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்துங்கள், நான் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் செயலர் திரு.இராஜமாணிக்கம் அவர்களிடம்  சொல்லி அதற்கு ஆவண செய்கிறேன் என்று முடுக்கி விட்டார். இதற்காக கிராம நிர்வாக அலுவலர்கள் இவரிடம் நாமக்கல்லில் பேசியதும், சென்னையில் பேசியதும், தொலைபேசியில் தொடர்பு கொண்டதும் உண்மை.

அத்தோடு மட்டுமல்லாது மத அடிப்படையில் பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்துங்கள், நான் உங்களுக்கு துணை நிற்கிறேன் என்று தூண்டி விட்டவர் மாண்புமிகு சட்டப் பேரவை துணைத் தலைவர் திரு.வி.பி. துரைசாமி ஆவார். அந்த அடிப்படையில்தான் இவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவராகிய என்னை மிக கேவலமான வார்த்தைகளைப் பயன்படுத்தி ஏசினார்கள், பேசினார்கள்.  அது மட்டுமல்லாது முழுக்க முழுக்க பொய்யான, கற்பனையான, நயவஞ்சகமான குற்றச்சாட்டான மதம் பரப்ப முயற்சித்தேன் என்று தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் 15.06.2010 தேதியிட்ட கடிதத்தை வருவாய் நிர்வாக ஆணையருக்கு அனுப்பியிருக்கிறார்கள். அதற்கு முழுக்க முழுக்க காரணம் மாண்புமிகு சட்டப் பேரவை துணைத் தலைவர் திரு.வி.பி.துரைசாமி அவர்களே ஆவார்.  

மேலும், 11.10.2010 அன்று மேலவை தேர்தலில் ஆசிரியர் - பட்டதாரிகள் தொகுதி பற்றி நடைபெற்ற கூட்டத்திலும் என் மாறுதல் பற்றி குறிப்பிட்டு என்னை அவன், இவன் என்று தரக்குறைவாக கேவலமாக இவர் பேசியிருக்கிறார். அதோடு, கடந்த மாதத்தில் எலச்சிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மாண்புமிகு துணை சபாநாயகர் அரசு பள்ளிகளை புறக்கணித்தவன் நான் என்று தேவையில்லாமல் என் மீது குற்றச்சாட்டை எழுப்பி பேசியிருக்கிறார். இவ்வாறு, எனக்கு எதிராக தரக்குறைவாக இவர் தொடர்ந்து பேசி வருகிறார் என்பதை தங்களுடைய மேலான கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.

இதிலிருந்து ஒன்றை நான் தெளிவாக புரிந்து கொண்டேன். நான் விதி முறைகளுக்கு புறம்பாக இவருக்கு சலுகை காட்டவில்லை என்கின்ற காரணத்தினால் என் மீது இவர் கோபம் கொண்டார். என்னை அகற்றுவதற்காக கிராம நிர்வாக அலுவலர்களை போராடச் சொல்லி வழிகாட்டியிருக்கிறார். மத அடிப்படையை வைத்து பொய்யான புகாரை இவர் அனுப்பச் சொல்லி தூண்டியிருக்கிறார். அதன் மூலமாக இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக இவர் செயல்பட்டிருக்கிறார். எனவே, மாண்புமிகு சட்டப் பேரவை துணைத் தலைவர் திரு.வி.பி.துரைசாமி அவர்கள் மீது சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் நான் நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்து அரசு ஆணையை அமல்படுத்திய காரணத்திற்காக நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி  ஒரு மாவட்ட ஆட்சித் தலைவர் என்று கூட பார்க்காமல் மிகவும் தரக்குறைவாகவும், கேவலமாகவும், அரசு அமைப்புக்கு குந்தகம் விளைவிக்கக் கூடிய வகையிலும் பேசிய கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினரை பணியிடை நீக்கம் செய்து ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

தமிழர்தம் பேராசான் வள்ளுவர் பெருந்தகை கூட,
“அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
   நன்குடையான் கட்டே தெளிவு“
அரசன் தன் பணியாளர்களை தேர்ந்தெடுக்கிற பொழுது மேற்கண்ட தகுதிகளைக் கொண்டிருப்பவர்களை குறிப்பாக பொருள் கிட்டுமேயாயினும் ஆசைப்படாதவர் களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிறார். நான் இந்த குறள் கூறும் பண்புக்குத் தகுதியான நேர்மையானவன் என்றே கருதுகிறேன். நேர்மையான எனது கோரிக்கை மீது தாங்கள் நடவடிக்கை எடுப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.  அப்படி நடவடிக்கை எடுக்கிற பொழுதுதான் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தி யதாக அமையும். ஒரு வேளை அத்தகைய நடவடிக்கை எடுக்க முடியாத சூழல் உருவாகுமேயானால் எதிர்காலத்தில் சமூகப்பார்வையும், நிறைந்த நியாய உணர்வும், ஏழைகளின் மீது உண்மையான பரிவும் கொண்ட முழு நேர்மையான ஐ.ஏ.எஸ். அலுவலர் தமிழகத்தில் உருவாக மாட்டான் என மிகுந்த வலியோடும், வருத்தத்தோடும் சொல்லிக்கொள்கிறேன்.          
    
இவ்வாறு கலெக்டர் சகாயம் தனது புகார் மனுவில் குறிப்பிட்டுளார்.                                                                                                                       

முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம்  அளித்த புகார் மனு தொடர்ச்சி, முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம்  அளித்த புகார் மனு தொடர்ச்சி, முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம்  அளித்த புகார் மனு தொடர்ச்சி,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம் அளித்த புகார் மனு தொடர்ச்சி
இது சம்பந்தமாக என்னையும் அடிக்கடி தொலைபேசியில் பேசி இழப்பீட்டு தொகையை அதிகரித்துக் கொடுக்கச் சொல்லி நச்சரித்து வந்தார் இவர். இதைப்பற்றி விசாரித்த பொழுது இந்த விவசாயிகளிடத்தில் அதிகமான இழப்பீட்டை பெற்று தருகிறேன் என்று சொல்லி இவர் கனிசமான அளவில் நிதி ஆதாயம்

மேலும்...

 முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம் அளித்த புகார் மனு தொடர்ச்சி
திருச்செங்கோடு வட்டம், வையப்பமலை என்கின்ற இடத்தில் கல் குவாரி அடிப்பதற்கு தனியாருக்கு அனுமதி அளிக்கப்பட்டது.  அங்கே ஒவ்வொரு நடைக்கும் அரசுக்கு இவர்கள் பணம் கட்ட வேண்டும். ஆனால் கூடுதலாக கல் எடுத்து விட்டு குறைவாக பணம் கட்டியிருக்கிறார்கள் என்கின்ற புகாரின் அடிப்படையில்

மேலும்...

 முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம் அளித்த புகார் மனு தொடர்ச்சி
சாதி மதங்களைக் கடந்து மக்களை உளமாற நேசிப்பவன் நான். மக்களை நேசிப்பது என்பது அவர்களின் மரபுகளையும், மத உணர்வுகளையும் மதிக்கின்ற பொழுதுதான் முழுமை பெறுகிறது என்பதை உளமாற உணர்ந்தவன் நான். நான் நாமக்கல் மாவட்ட மக்களை மதங்களுக்கும், சாதிகளுக்கும் அப்பாற்பட்டு உளமாற

மேலும்...

 முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம் அளித்த புகார் மனு தொடர்ச்சி
இவர்கள் தங்களது ஊழலை எல்லாம் மறைத்து விட்டு, மாவட்ட நிர்வாகத்திற்கு - அரசுக்கு எதிராக போராடக் கூடிய அவல நிலையை கண்டு கோபம் கொண்ட விவசாயிகள், நுகர்வோர் அமைப்புகள் ஊழல் எதிர்ப்பு அமைப்பினர் ஒன்று சேர்ந்து 20.05.2010 அன்று நாமக்கல் நகரில்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in