முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி காலமானார்

முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி காலமானார்
முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி காலமானார். கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த கருணாநிதி சென்னையில் காலமானார். 95 வயதான கலைஞர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணிக்கு காலமானார்.


25ம் தேதி உடல்நிலை சரியில்லாமல் கோபாலபுர இல்லத்தில் தீவிர சிகிச்சை  அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் ரத்த அழுத்தம் காரணமாக 27 ம் தேதி அதிகாலை 1.30 மணி அளவில் காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 11 நாட்களுக்கு பிறகு சிகிச்சை பலனின்றி திமுக தலைவர் கருணாநிதி உயிரிழந்தார்.

திருவாரூர் மாவட்டம் அருகில் உள்ள திருக்குவளையில் முத்துவேல்- அஞ்சுகம் அம்மையாருக்கு மகனாக ஜூன் 3-ம் தேதி 1924-ம் ஆண்டு பிறந்தார்.


கருணாநிதியின் இயற்பெயர் தட்சிணாமூர்த்தி ஆகும். அவர் தன்னுடைய 14 வயதில் நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவரான அழகிரிசாமியின் பேச்சின்பால் ஈர்க்கப்பட்டு அதற்கு பிறகு அரசியலில் ஈடுபட்டார். அதன் பின்னர் இந்தி எதிர்ப்பு போரட்டத்தின் மூலம் கருணாநிதி தன் அரசியலில் தீவிரத்தைக் காட்டினார்.

தமிழகத்தில் திராவிடர் இயக்க மாணவர் அணியை முதல் முதலாக தொடங்கியவர் கருணாநிதி ஆவார். தன் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களில் வெற்றி பெற்றவர் என்ற பெருமைக்குரியவர் கருணாநிதி. 1957-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட முடிவெடுத்தார்.

பின்னர் குளித்தலையில் போட்டியிட்டு கருணாநிதி வெற்றி பெற்று முதல் முறையாக சட்டமன்றத்தில் திமுக அடியெடுத்து வைக்கவும், முதல் முறையாக தனது சட்டமன்ற வரலாற்றைத் துவக்கவும் வழிவகுத்தது.

1967-ம் ஆண்டு நடைபெற்றத் தேர்தலின் மூலம் திமுக முதல் முறையாக தமிழக ஆட்சியில் பங்குபெற்றது. கருணாநிதி பொருளாளராக கட்சியில் உயர்வு பெற்றார். மேலும் தி.மு.க.வின் தொடக்க கால உறுப்பினராக இருந்தவர் கருணாநிதி. அவர், 1957-ம் ஆண்டிலிருந்து தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும், கடந்த 50 ஆண்டுகளாக தி.மு.க.வின் தலைவராகவும் பதவி வகித்து வந்தார்.

தமிழகத்தின் முதல்வராக ஐந்துமுறை கருணாநிதி பதவி வகித்திருந்தார். ஒரு கட்சியின் தலைவாரக 50 ஆணடு தொடர்வது என்பது மிக பெரிய சாதனையாகும். அதை திமுக தலைவராக இருந்த கருணாநிதி நிகழ்த்தியுள்ளார். திமுக தலைவர் 50-ம் ஆண்டு பொன் விழாவை கடந்த மாதம் 27 ம் தேதி கொண்டாடினார்.

இந்நிலையில் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கருணாநிதியின் உடல் நிலை குறித்து தொலைபேசியல்  பிரதமர் மோடி, மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார்

. குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தமிழக ஆளுநர் ஆகியோர் நேரில் சென்று ஸ்டாலினிடம் கேட்டறிந்தனர். மேலும் தமிழக முதல்வர், துணை முதல்வர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், வெளி மாநில முதல்வர்கள் , நடிகர்கள் ஆகியோர் கருணாநிதியின் உடல் நிலை குறித்து நேரில் சென்று கேட்டறிந்தனர். இந்நிலையில் 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த கருணாநிதியின் உயிர் மண்ணைவிட்டு பிரிந்தது.


https://goo.gl/Lmo4s9






03 Jan 2019

கருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை; சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிப்பு

02 Jan 2019

கூலிப்படை உதவியுடன் மகனை கொன்ற கள்ளக்காதலனை தீர்த்து கட்டிய பெண்

30 Dec 2018

சென்னையில் 15 ஆண்டுகளுக்குப்பின் மழையளவு 55 சதவீதம் குறைவு: கடும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

30 Dec 2018

அரசு நிர்வாகம் முற்றிலும் நிலை குலைந்துள்ளதற்கு எச்.ஐ.வி. ரத்த விவகாரமே சாட்சி - ஸ்டாலின்

27 Dec 2018

பொங்கல் பண்டிகைக்கு தமிழகம் முழுவதும் 24,708 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

27 Dec 2018

12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முக்கிய பாடங்களின் தேர்வு நேரத்தில் அரைமணி நேரம் குறைப்பு

25 Dec 2018

குற்றவாளிகளை சுட்டுக் கொல்லும்படி ஆவேசமாக பேசிய முதல் அமைச்சர் குமாரசாமி

25 Dec 2018

வாட்ஸ்-அப் உரையாடல் ,இன்ஸ்பெக்டர் பிடியில் இருக்கும் மனைவியை மீட்டுத்தாருங்கள்” போலீசில் கணவர் புகார்

24 Dec 2018

கிளிஜோதிடர் நடுரோட்டில் வெட்டிக்கொலை தன்னுடன் வாழ்ந்த பெண்ணைப் பிரித்ததால் ஆத்திரம்: நோட்டீஸில் தகவல்

21 Dec 2018

தமிழக அமைச்சரவை கூட்டம் வருகிற 24ந்தேதி கூடுகிறது