tamilkurinji logo


 

மும்பையில் வன்முறை தானேவில் 144 தடையுத்தரவு பிறப்பிப்பு ,Mumbai bandh: Mumbai, Maharashtra wary after bandh, rasta roko calls tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

Mumbai,bandh:,Mumbai,,Maharashtra,wary,after,bandh,,rasta,roko,calls,tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news
செய்திகள் >>> இந்தியா

மும்பையில் வன்முறை தானேவில் 144 தடையுத்தரவு பிறப்பிப்பு

First Published : Wednesday , 3rd January 2018 12:58:24 PM
Last Updated : Wednesday , 3rd January 2018 12:58:24 PM


மும்பையில் வன்முறை  தானேவில் 144 தடையுத்தரவு பிறப்பிப்பு ,Mumbai bandh: Mumbai, Maharashtra wary after bandh, rasta roko calls tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news


மஹாராஷ்டிரா மாநிலம் புனே அருகே உள்ள, பீமா கோரேகாவ்ன் என்ற பகுதியில், 1818 -ம் ஆண்டு நடந்த போரில், மகர் எனப்படும் தலித் இனத்தவர்கள் பங்கேற்றனர். அந்த போரின் 200-வது வெற்றி விழா கொண்டாட்டத்தின் போது, தலித்மக்களுக்கும், மராத்தா இன மக்களுக்கும் இடையே மோதல் வன்முறையாக மாறியது. ஓர் இளைஞர் உயிரிழந்தார். இந்த வன்முறை சம்பவம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவியது.

இந்த கலவரத்தில் போலீஸ் வேன் உள்பட 15 வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. பல வீடுகளும் சேதப்படுத்தப்பட்டன. இதனால், புனே நகரம் முழுவதும் போர்க்களம் போல் காட்சியளித்தது.


இந்த வன்முறை சம்பவத்தில் ராகுல் என்ற 28 வயது வாலிபர் பலியானார்.போலீசார் தடியடி நடத்தி கலவரக்காரர்களை கலைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து பதற்றம் நிலவியதால் ஏராளமான மாநில ரிசர்வ் படை போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.

இந்தநிலையில், மோதலில் வாலிபர் பலியான சம்பவத்தை கண்டித்து, நேற்று மாநிலம் முழுவதும் குறிப்பிட்ட சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மும்பையில் செம்பூர், கோவண்டி பகுதியில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் துறைமுக வழித்தடத்தில் ரெயில்சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.

புனேயில் ஏற்பட்ட இந்த மோதல் மும்பை மட்டுமின்றி மாநிலம் முழுவதும் பரவியது. நேற்று ஒரே நாளில் மாநிலம் முழுவதும் 134 அரசு பஸ்கள் போராட்டக்காரர்களால் அடித்து நொறுக்கப்பட்டன. இதனால், மராட்டியத்தின் பிரதான நகரங்களில் போலீசார் குவிக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வன்முறையைக் கண்டித்து, மகாராஷ்டிராவில் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டதையடுத்து, மராட்டிய மாநிலத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பல இடங்களில் சாலைகளில் அமர்ந்து போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடகா-மும்பை இடையேயான பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மும்பையில், ஆட்டோ ரிக்‌ஷாக்கள், ஓடாத காரணத்தால் பயணிகள் பரிதவித்தனர்.  நல்சோபரா ரயில் நிலையத்தில், போராட்டாக்காரர்கள் தண்டவாளத்தில் அமர்ந்து போராடியதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கிழக்கு எக்ஸ்பிரஸ்வே சாலையை போராட்டக்கார்கள் மறித்துள்ளதால், அங்கு போக்குவரத்து முடங்கியுள்ளது.

தானேவில்  ஜனவரி-4 ஆம் தேதி வரை  144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பதட்டமான பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். எதிக்கட்சிகள் போராட்டத்தை தூண்டி விடுவதாக ஆளும் பாஜகவும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் குற்றம் சாட்டியுள்ளன. 

மும்பையில் வன்முறை  தானேவில் 144 தடையுத்தரவு பிறப்பிப்பு ,Mumbai bandh: Mumbai, Maharashtra wary after bandh, rasta roko calls tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

மும்பையில் வன்முறை  தானேவில் 144 தடையுத்தரவு பிறப்பிப்பு ,Mumbai bandh: Mumbai, Maharashtra wary after bandh, rasta roko calls tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

மும்பையில் வன்முறை  தானேவில் 144 தடையுத்தரவு பிறப்பிப்பு ,Mumbai bandh: Mumbai, Maharashtra wary after bandh, rasta roko calls tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 சாலை விபத்தில் உயிருக்கு போராடியவர்களுடன் செல்பி எடுத்த வாலிபர்
ராஜஸ்தான் மாநிலம், பார்மேர் மாவட்டம் சோடான் எனும் இடத்தில் 20 முதல் 30 வயது மதிக்கத்தக்க 3 பேர் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது எதிரே வந்த பள்ளி பேருந்து மோதி இன்று விபத்துக்குள்ளானது. இதில், இருசக்கர வாகனத்தில் பயணித்த மூன்று

மேலும்...

 கல்வி கட்டணம் செலுத்தாத 16 குழந்தைகள் பாதாள அறையில் சிறைவைப்பு : டெல்லியில் கொடூரம்
மத்திய டெல்லியில் கவுகாசி என்ற இடத்தில் தனியார் பள்ளிக்கூடம் ஒன்று உள்ளது.இங்கு யூ.கே.ஜி. படிக்கும் மாணவிகள் பலர் ஜூன் மாதத்துக்கான கல்வி கட்டணம் செலுத்தவில்லை. இதனால் கோபம் அடைந்த பள்ளி நிர்வாகத்தினர் கட்டணம் செலுத்தாத 16 மாணவிகளை மற்ற மாணவிகளிடம் இருந்து

மேலும்...

 பெண்களின் பங்களிப்பு இல்லாமல் வேளாண், பால்வளத் துறையில் உற்பத்தி சாத்தியமற்றது: பிரதமர் மோடி
அனைத்துத் துறைகளிலும் அடிமட்ட அளவில் பெண்களின் பங்களிப்பு உள்ளது என பிரதமர் மோடி கூறினார்.நரேந்திர மோடி (NaMo) வீடியோ கான்பரன்சிங் மூலம் நாடு முழுவதும் உள்ள சுய உதவி குழுப்  பெண்களுடன் மோடி பேசினார்.  அப்போது அவர் கூறியதாவது;-இன்று எந்தத் துறையை

மேலும்...

 மனைவியை பலாத்காரம் செய்ய எம்எல்வுக்கு உதவிய கணவன்
எம்எல்ஏ தன்னை 2 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அதற்கு தனது கணவரே உதவி செய்ததாகவும் போலீசில் மனைவி புகார் கொடுத்துள்ளார். அசாமின் அலகாபூர் தொகுதி எம்எல்ஏ நிஜாம் உத்தின் சவுத்ரி. இவர் மீது கடந்த 6ம் தேதி இளம்பெண் ஒருவர்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in