மும்பையில் ஸ்ரீதேவி மகளுக்கு ரஜினி - கமல் நேரில் ஆறுதல்

மும்பையில் ஸ்ரீதேவி மகளுக்கு ரஜினி - கமல் நேரில் ஆறுதல்
துபாயில் நடிகை ஸ்ரீதேவி மரணமடைந்த நிலையில், மும்பை விரைந்துள்ள நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரை உலகினர் பலரும் ஸ்ரீதேவியின் மகளுக்கு நேரில் ஆறுதல் அளித்துள்ளனர்.


மரணம் அடைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல் மும்பை வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களாக மும்பை அந்தேரியில் உள்ள ஸ்ரீதேவி வீட்டில் ஏராளமான ரசிகர்கள் சோகத்துடன் கூடி இருக்கிறார்கள்.


போனிகபூரின் தம்பியும், நடிகருமான அனில் கபூர் வீட்டில் ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி தங்கியுள்ளார்.


இதனால் நடிகர், நடிகைகள் அங்கு சென்று அனில்கபூர் அவரது மனைவி சுனிதா போனி கபூரின் தாயார். குடும்பத்தினர் மற்றும் ஜான்வி ஆகியோரை சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார்கள்.

ஸ்ரீதேவியுடன் அதிக படங்களில் ஜோடியாக நடித்த நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் ஆகியோர் மும்பை சென்று ஓட்டலில் தங்கி உள்ளனர்.

நேற்று இரவு அவர்கள் போனி கபூர் வீட்டுக்கு சென்று ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி மற்றும் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.

ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த், கமல்ஹாசனின் முன்னாள் மனைவி சரிகா, மகள்கள் சுருதிஹாசன், அக்சரா ஆகியோரும் போனி கபூர் வீட்டுக்கு சென்று ஜான்விக்கு ஆறுதல் தெரிவித்தனர்.


ஆனந்த் அம்பானி, பட அதிபர்கள் சேகர் கபூர், கரன் ஜோகர், டெலிவி‌ஷன் அகடமி நிர்வாகிகள் அனு, சஷிரஞ்சன், சதீஷ் கவுசிக், ஹர்ஷ்வர்தன் கபூர், ஜாவித் அக்தர், இஷான் கத்தர், பாராகான், சமாஜ்வாடி கட்சி முன்னாள் எம்.பி. அமர்சிங் உள்ளிட்டோர் ஜான்வியை சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.


https://goo.gl/wEscTg


18 Dec 2018

மாரியில் ரோபோ ஷங்கர் வேண்டாம் என்று ஒத்த காலில் நின்றேன்: தனுஷ்

18 Dec 2018

மகள் நினைவாக பாடகி சித்ரா கட்டிய கீமோ’ சிகிச்சை மையம்

13 Dec 2018

நடன இயக்குனரை மணந்தார் நடிகை சாந்தினி

13 Dec 2018

நடிகை சுருதி ஹரிகரன் மீ டூ’வால் பட வாய்ப்புகள் இழந்தேன்

11 Dec 2018

ரஜினிகாந்துடன் நடித்தது பெருமை” - நடிகை திரிஷா மகிழ்ச்சி

11 Dec 2018

புதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம்; மக்கள் தீர்ப்பு இது: கமல்ஹாசன்

10 Dec 2018

சாதி வெறியர்களின் முகத்தில் கரியைப் பூசிய கவுசல்யாவுக்கு வாழ்த்துகள்: நடிகர் சத்யராஜ்

01 Nov 2018

2.0 - ரஜினியுடன் நடிக்க மறுத்த கமல்

01 Nov 2018

மலையாள இயக்குனர் மீது லட்சுமி ராமகிருஷ்ணன் பாலியல் புகார்

31 Oct 2018

செருப்பால் தாக்கி சண்டையிட்ட பிரபல நடிகரின் 2 மனைவிகள்