tamilkurinji logo
 

மூன்றாவது வழக்கில் லாலுவுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை,Lalu Prasad Yadav sentenced to five years in jail in third fodder scam ..

Lalu,Prasad,Yadav,sentenced,to,five,years,in,jail,in,third,fodder,scam,..



செய்திகள் >>> இந்தியா

மூன்றாவது வழக்கில் லாலுவுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை

First Published : Wednesday , 24th January 2018 07:51:29 PM
Last Updated : Wednesday , 24th January 2018 07:51:29 PM


மூன்றாவது வழக்கில் லாலுவுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை,Lalu Prasad Yadav sentenced to five years in jail in third fodder scam ..

பீகார் மாநிலத்தில் நடைபெற்ற சுமார் 900 கோடி ரூபாய் மதிப்பிலான கால்நடை தீவன ஊழல் தொடர்பாக முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவ் மற்றும் மேலும் சிலருக்கு எதிராக மொத்தம் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ராஞ்சியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.  

இதில், இரண்டு வழக்குகளில் லாலு பிரசாத் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு 5 ஆண்டு மற்றும் மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டுள்ள நிலையில்,  சாய்பாஸா மாவட்டத்தில் உள்ள அரசு கருவூலத்தில் இருந்து ரூ.33.67 கோடி பணம் கையாடல் செய்த வழக்கு , டோரன்டா மாவட்ட அரசு கருவூலத்தில் இருந்து ரூ.184 கோடி கையாடல் செய்த  வழக்கு, தும்கா மாவட்ட அரசு கருவூலத்தில் இருந்து ரூ.3.97 கோடி பணம் கையாடல் செய்த வழக்கு ஆகிய மூன்று வழக்குகளில் விசாரணை நடைபெற்று வந்தது.

இவற்றில், சாய்பாஸா மாவட்டத்தில் உள்ள அரசு கருவூலத்தில் இருந்து ரூ.33.67 கோடி பணம் எடுத்த வழக்கில் வாதப் பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில், சி.பி.ஐ. சிறப்பு நீதிபதி எஸ்.எஸ். பிரசாத் இன்று தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கில் மொத்தம் 76 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. விசாரணை நடந்த காலத்தில் 14 பேர் உயிரிழந்தனர். 3 பேர் அரசுத் தரப்புசாட்சிகளாக மாறினர். இருவருக்கு ஏற்கனவே தண்டனை வழங்கப்பட்டுள்ளது.


ஒருவர் தலைமறைவாக உள்ளார்.  மீதமுள்ள 56 பேரில் இரு அரசு ஊழியர்கள் மற்றும் 4 கால்நடைத் தீவன வியாபாரிகள் என மொத்தம் 6 பேர் வழக்கில் இருந்து இன்று விடுவிக்கப்பட்டனர்.

லாலு பிரசாத் யாதவ், முன்னாள் முதல்வர் ஜெகன்நாத் மிஸ்ரா, முன்னாள் மந்திரி வித்யாசாகர் நிஷாத், சட்டசபை பொது கணக்கு குழு தலைவர் ஜெகதீஷ் சர்மா, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் துருவ் பகத், ஆர்.கே.ராணா, 3 முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உள்ளிட்ட 50 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.

அதன்பின்னர் தண்டனை தொடர்பான வாதங்கள் நடைபெற்றது. இந்த வாதம் முடிவடைந்த நிலையில், இன்று பிற்பகல் தீர்ப்பளித்த நீதிபதி, குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட லாலு மற்றும் ஜெகன்நாத் மிஸ்ரா ஆகியோருக்கு தலா 5 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் தலா 5 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

மூன்றாவது வழக்கில் லாலுவுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை,Lalu Prasad Yadav sentenced to five years in jail in third fodder scam .. மூன்றாவது வழக்கில் லாலுவுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை,Lalu Prasad Yadav sentenced to five years in jail in third fodder scam .. மூன்றாவது வழக்கில் லாலுவுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை,Lalu Prasad Yadav sentenced to five years in jail in third fodder scam ..
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 என்னை ஏலம் எடுத்து சேவாக் ஐபிஎல்-ஐக் காப்பாற்றியுள்ளார்: கிறிஸ் கெய்ல்
சன் ரைசர்ஸ் அணியின் பந்து வீச்சு பலத்தைக் குலைத்து அடித்து நொறுக்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாபின் கிங் கிறிஸ் கெய்ல் நேற்று ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். அப்போது அவர் தன்னுடைய ஆட்டம் பற்றி கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.கிறிஸ் கெய்லை ஏலம்

மேலும்...

 காதலி திருமணம் செய்ய மறுத்தலால் ரூ.5 லட்சத்தை தீயிட்டு எரித்த வாலிபர்
திருமணம் செய்வதற்காக ரூ. 6.74 லட்சத்தைத் திருடிய இளைஞரைத் திருமணம் செய்யக் காதலி மறுத்ததால், ஆத்திரத்தில் அந்த இளைஞர் ரூ. 5லட்சத்தை தீயிட்டு எரித்தார்.மத்தியப் பிரதேச மாநிலம், செஹோர் மாவட்டத்தில் ஒரு நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் ஜிதேந்திரகோயல்(22வயது). இவர் ஒரு

மேலும்...

 மீண்டும் பணத்தட்டுப்பாடு?: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு
நாட்டில் உள்ள பணப்பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில், 500 ரூபாய் அச்சடிப்பது குறித்து மத்திய அரசு முக்கிய முடிவு எடுத்துள்ளது.மத்திய அரசு கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் நாட்டில் பணப்புழக்கம் குறைந்தது. அதன்பின்

மேலும்...

 டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவராக நடித்த வாலிபர் கைது
டெல்லி ஏய்ம்ஸ் ஆஸ்பத்திரியானது இந்தியாவிலேயே முன்னணி மருத்துவமனையாக உள்ளது. இங்கு சுமார் 2 ஆயிரம் பயிற்சி டாக்டர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், கடந்த 5 மாதங்களாக மருத்துவ மாணவர் என்ற போர்வையில் அங்கு சுற்றிவந்த 19 வயது இளைஞர் அத்னான் குர்ராம்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in