மெரினாவில் நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கு இன்று திடீர் வாபஸ்

மெரினாவில் நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கு இன்று திடீர் வாபஸ்
மெரினாவில் நினைவிடங்கள் அமைக்க கூடாது என தொடரப்பட்ட வழக்கை திடீரென வழக்கறிஞர் காந்திமதி வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளார். எனவே ஹைகோர்ட் அந்த வழக்கை தள்ளுபடி செய்துவிட்டது. எனவே மெரினாவில் நினைவிடம் அமைக்க இருந்த தடை நீங்கிவிட்டது.

உலகிலேயே 2வது நீளமான கடற்கரை என்ற பெருமை பெற்றது, சென்னை மெரினா கடற்கரை. அண்ணா, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகிய முன்னாள் முதல்வர்கள் நினைவிடங்கள் இங்கு அமைந்துள்ளன.


ஆனால் மெரினாவில் இப்படி நினைவிடங்களை அமைப்பது சரியில்லை என்று டிராபிக் ராமசாமி, வழக்கறிஞர் எஸ்.துரைசாமி உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்து தனித்தனியாக வழக்குத் தொடந்தனர்.

இந்நிலையில் வழக்கறிஞர் காந்திமதி என்பவர் மெரினாவில் நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இன்று மனு நீதிபதி சுந்தர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, அந்த மனுவை திரும்பப் பெற்றார்.

இதையடுத்து அந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. திடீரென ஏன் அவர் மனுவை வாபஸ் பெற முடிவெடுத்தார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. ஆனால், அதற்கு அவர் தரப்பில் இன்னும் பதில் அளிக்கவில்லை.


https://goo.gl/UWkGiH






03 Jan 2019

கருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை; சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிப்பு

02 Jan 2019

கூலிப்படை உதவியுடன் மகனை கொன்ற கள்ளக்காதலனை தீர்த்து கட்டிய பெண்

30 Dec 2018

சென்னையில் 15 ஆண்டுகளுக்குப்பின் மழையளவு 55 சதவீதம் குறைவு: கடும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

30 Dec 2018

அரசு நிர்வாகம் முற்றிலும் நிலை குலைந்துள்ளதற்கு எச்.ஐ.வி. ரத்த விவகாரமே சாட்சி - ஸ்டாலின்

27 Dec 2018

பொங்கல் பண்டிகைக்கு தமிழகம் முழுவதும் 24,708 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

27 Dec 2018

12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முக்கிய பாடங்களின் தேர்வு நேரத்தில் அரைமணி நேரம் குறைப்பு

25 Dec 2018

குற்றவாளிகளை சுட்டுக் கொல்லும்படி ஆவேசமாக பேசிய முதல் அமைச்சர் குமாரசாமி

25 Dec 2018

வாட்ஸ்-அப் உரையாடல் ,இன்ஸ்பெக்டர் பிடியில் இருக்கும் மனைவியை மீட்டுத்தாருங்கள்” போலீசில் கணவர் புகார்

24 Dec 2018

கிளிஜோதிடர் நடுரோட்டில் வெட்டிக்கொலை தன்னுடன் வாழ்ந்த பெண்ணைப் பிரித்ததால் ஆத்திரம்: நோட்டீஸில் தகவல்

21 Dec 2018

தமிழக அமைச்சரவை கூட்டம் வருகிற 24ந்தேதி கூடுகிறது