ரபேல் ஊழல் விவகாரத்தில் பிரதமரை காப்பாற்ற அதிமுக எம்பிக்கள் முயற்சி - ராகுல் பகிரங்க குற்றச்சாட்டு

ரபேல் ஊழல் விவகாரத்தில் பிரதமரை காப்பாற்ற அதிமுக எம்பிக்கள் முயற்சி - ராகுல் பகிரங்க குற்றச்சாட்டு
புத்தாண்டு விடுமுறைக்கு பின்னர் இன்று பாராளுமன்றம் கூடியபோது ரபேல் போர் விமான பேர ஊழல் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் காரசாரமாக விவாதித்தார்.

 அவைக்கு வந்து எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு நேரடியாக பதில் சொல்ல தைரியம் இல்லாத பிரதமர் மோடி, தனது அறைக்குள் பதுங்கி கொண்டதாக ராகுல் குறிப்பிட்டார்.

சமீபத்தில் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த பிரதமர் மோடி, தன்மீது தனிப்பட்ட முறையில் இதுவரை எந்த குற்றச்சாட்டும் முன்வைக்கப்படவில்லை என கூறியதை இன்று சுட்டிக்காட்டிய ராகுல் காந்தி, ரபேல் விவகாரத்தில் இந்த நாடே அவரிடம் ஒரு நேரடியான கேள்வி கேட்டுவரும் நிலையில் மோடி இப்படி பொய் பேசி வருவதாக தெரிவித்தார்.

நொடிந்த நிலையில் இருக்கும் நண்பர் அனில் அம்பானிக்கு உதவி செய்வதற்காகவே ரபேல் கொள்முதலில் ரிலையன்ஸ் நிறுவனத்தை மோடி நுழைத்து விட்டார் என்றும் ராகுல் குற்றம் சுமத்தினார்.

ரபேல் கொள்முதல் விவகாரம் தொடர்பான பல முக்கிய கோப்புகள் இன்னும் தனது வீட்டில் இருப்பதாக முன்னாள் ராணுவ மந்திரியும், தற்போதைய கோவா முதல் மந்திரியுமான மனோகர் பாரிக்கர் பேசிய ஆடியோ ஆதாரம் தன்னிடம் உள்ளதாக தெரிவித்த ராகுல், அந்த பேச்சை மக்களவையில் ஒலிபரப்ப அனுமதிக்க வேண்டும் என சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் அனுமதி கோரினார்.

இதற்கு நிதிமந்திரி அருண் ஜெட்லி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். நீங்கள் அவையில் வெளியிடும் ஆடியோ முழுக்கமுழுக்க நம்பத்தன்மை மிக்கது என்று பொறுப்பேற்று கொள்கிறீர்களா? என ராகுலிடம் அருண் ஜெட்லி கேள்வி எழுப்பினார்.

அப்படி எல்லாம் பொறுப்பேற்க முடியாது என ராகுல் காந்தி தெரிவித்தபோது தொடர்ந்து பொய்களை பேசிவருவதே உங்களது வேலையாகி விட்டது என அருண் ஜெட்லி கோபமாக கூறினார். இதை தொடர்ந்து அந்த ஆடியோவை ஒலிபரப்ப சபாநாயகர் அனுமதி மறுத்து விட்டார்.

இந்த விவாதத்தின் இடையே காவிரி பிரச்சனையை மையமாக வைத்து அவையில் அமளியில் ஈடுபடும் அ.தி.மு.க.வினர் ரபேல் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சியினரை பேச விடாமல் இதிலிருந்து மோடியை காப்பாற்றும் நோக்கத்தில் இடையூறு செய்து வருவதாகவும் ராகுல் காந்தி நேரடியாக குற்றம்சாட்டினார்.
https://goo.gl/eJ9Bta


02 Jan 2019

ரபேல் ஊழல் விவகாரத்தில் பிரதமரை காப்பாற்ற அதிமுக எம்பிக்கள் முயற்சி - ராகுல் பகிரங்க குற்றச்சாட்டு

24 Dec 2018

தலித் இளைஞரை திருமணம் செய்த மகளை எரித்துக்கொன்ற தந்தை கைது

21 Dec 2018

ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட 6 வயது சிறுவன் எரித்துக் கொலை

21 Dec 2018

15 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் பீகார் எம்.எல்.ஏ.வுக்கு ஆயுள் தண்டனை

18 Dec 2018

ஐபிஎல் ஏலம் : அதிக விலை போன இந்திய பந்து வீச்சாளர்கள்

14 Dec 2018

4 வது மாடியில் இருந்து குதித்து பிரபல டிவி தொகுப்பாளினி தற்கொலை

13 Dec 2018

தெலங்கானா முதல்வராக தொடர்ந்து 2-வது முறையாக சந்திரசேகர் ராவ் பதவி ஏற்றார்

11 Dec 2018

பா.ஜனதா 5 ஆண்டுகளாக எதையும் செய்யவில்லை என்பதை மக்கள் உறுதியளித்துள்ளனர் -சந்திரபாபு நாயுடு

11 Dec 2018

பா.ஜ.க. செல்வாக்கு இழந்து விட்டதையே 5 மாநில தேர்தல் முடிவுகள் காட்டுகிறது - ரஜினி

10 Dec 2018

பா.ஜனதாவை வீழ்த்த 14 கட்சி கூட்டணி- டெல்லியில் இன்று முக்கிய ஆலோசனை