ரஷிய காதலருடன் நடிகை ஸ்ரேயா திருமணம்

ரஷிய காதலருடன் நடிகை ஸ்ரேயா திருமணம்
நடிகை ஸ்ரேயாவுக்கும் ரஷியாவைச் சேர்ந்த காதலருக்கும் அடுத்த மாதம் திருமணம் நடக்க இருப்பதாக தெலுங்கு பட உலகில் தகவல் பரவி உள்ளது.

தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் ஸ்ரேயா. இவர் சினிமாவுக்கு வந்து 17 வருடங்கள் ஆகிறது. எனக்கு 20 உனக்கு 18 என்ற தமிழ் படத்தில் அறிமுகமாகி ரஜினிகாந்த், விஜய், விஷால், தனுஷ், ஜெயம் ரவி என்று முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ளார்.

ரஜினியுடன் நடித்த ‘சிவாஜி’ படம் வசூலில் சாதனை நிகழ்த்தியது. பாலகிருஷ்ணாவுடன் நடித்த கவுதமி புத்ர சாதகர்னி சரித்திர படமும் வெற்றிகரமாக ஓடியது. இந்த படத்தை தமிழிலும் டப்பிங் செய்து வெளியிட்டனர். கடைசியாக சிம்புவுடன் நடித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படம் திரைக்கு வந்தது.

தற்போது அரவிந்த்சாமியுடன் நரகாசுரன் என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார். நானே படேகருடன் தட்கா என்ற இந்தி படத்திலும் வீர போக வசந்த ராயலு என்ற தெலுங்கு படத்திலும் நடித்துக்கொண்டு இருக்கிறார். ஸ்ரேயாவுக்கு தற்போது 35 வயது ஆகிறது. எனவே அவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் அவசரப்படுகின்றனர்.

இந்த நிலையில் ஸ்ரேயாவுக்கும் ரஷியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் காதல் மலர்ந்துள்ளதாகவும் அடுத்த மாதம் (மார்ச்) இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருப்பதாகவும் தெலுங்கு பட உலகில் தகவல் பரவி உள்ளது. சமீபத்தில் ஸ்ரேயா ரஷியா சென்று காதலரின் பெற்றோர்களை சந்தித்து திரும்பி உள்ளார்.

இரு வீட்டு பெற்றோர்களும் இவர்கள் காதலை ஏற்றுக்கொண்டு விட்டதாக கூறப்படுகிறது. திருமணத்தை ராஜஸ்தான் மாநிலத்தில் நடத்த திட்டமிட்டு உள்ளனர். திருமணத்துக்கு பிறகும் சினிமாவில் தொடர்ந்து நடிக்க ஸ்ரேயா முடிவு செய்துள்ளார்.

இந்நிலையில் வரும் மார்ச் மாதம் ஸ்ரேயாவுக்கும் அவரது ரஷ்ய பாய்பிரண்டுக்கு உதய்பூரில் திருமணம் நடக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்களது திருமணம் 17, 18, 19 என மூன்று நாட்கள் நடைபெற இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://goo.gl/NQPfaH


18 Dec 2018

மாரியில் ரோபோ ஷங்கர் வேண்டாம் என்று ஒத்த காலில் நின்றேன்: தனுஷ்

18 Dec 2018

மகள் நினைவாக பாடகி சித்ரா கட்டிய கீமோ’ சிகிச்சை மையம்

13 Dec 2018

நடன இயக்குனரை மணந்தார் நடிகை சாந்தினி

13 Dec 2018

நடிகை சுருதி ஹரிகரன் மீ டூ’வால் பட வாய்ப்புகள் இழந்தேன்

11 Dec 2018

ரஜினிகாந்துடன் நடித்தது பெருமை” - நடிகை திரிஷா மகிழ்ச்சி

11 Dec 2018

புதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம்; மக்கள் தீர்ப்பு இது: கமல்ஹாசன்

10 Dec 2018

சாதி வெறியர்களின் முகத்தில் கரியைப் பூசிய கவுசல்யாவுக்கு வாழ்த்துகள்: நடிகர் சத்யராஜ்

01 Nov 2018

2.0 - ரஜினியுடன் நடிக்க மறுத்த கமல்

01 Nov 2018

மலையாள இயக்குனர் மீது லட்சுமி ராமகிருஷ்ணன் பாலியல் புகார்

31 Oct 2018

செருப்பால் தாக்கி சண்டையிட்ட பிரபல நடிகரின் 2 மனைவிகள்