tamilkurinji logo
 

ராஜீவ் காந்தியை கொன்றது போல பிரதமர் மோடியை கொல்ல மாவோயிஸ்ட்டுகள் திட்டம்.,'Another Rajiv Gandhi-type incident': Maoist letter exposes plan to kill PM Moditamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

'Another,Rajiv,Gandhi-type,incident':,Maoist,letter,exposes,plan,to,kill,PM,Moditamil,news,india,news,tamil,seithiga,lindia,,seithigal,tamil,cinema,newsTamil,Movie,News,|,Tamil,Cinema,




செய்திகள் >>> இந்தியா

ராஜீவ் காந்தியை கொன்றது போல பிரதமர் மோடியை கொல்ல மாவோயிஸ்ட்டுகள் திட்டம்.

First Published : Friday , 8th June 2018 07:58:16 PM
Last Updated : Friday , 8th June 2018 07:58:16 PM


ராஜீவ் காந்தியை கொன்றது போல  பிரதமர் மோடியை கொல்ல மாவோயிஸ்ட்டுகள் திட்டம்.,'Another Rajiv Gandhi-type incident': Maoist letter exposes plan to kill PM Moditamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொன்றது போல, தற்போதைய பிரதமர் மோடியை கொல்ல மாவோயிஸ்ட்டுகள் திட்டம் தீட்டியிருக்கும் தகவல் வெளியாகியுள்ளதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இந்த கொடூர சதித்திட்டம் மாவோயிஸ்ட்டுகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட கடிதத்தால் அம்பலமாகியுள்ளது. இது தொடர்பாக தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய உளவு பிரிவு அதிகாரிகள் இந்த அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர். சமீபத்தில் மகாராஷ்டிராவில் நக்சல் இயக்கத்தை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் ரோனா ஜேக்கப் என்பவரிடம் இருந்து ஒரு கடிதம் கைப்பற்றப்பட்டது.

அக்கடிதத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி விடுதலை புலிகளால் கொலை செய்யப்பட்டது போல், தற்போதைய பிரதமர் மோடியை கொலை செய்ய இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்ததை கண்டு காவல்துறையினர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் கடித்தில் இந்த நிகழ்வை நடத்தி முடிக்க மக்களை சந்திக்கும் பேரணி மற்றும் சாலை வழியில் நடக்கும் கான்வாயில் குண்டு வைப்பதென்று முடிவு செய்திருப்பதாகவும் எழுதப்பட்டிருந்தது.

இக்கடிதத்தை புனே காவல்துறையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து பின் முறைப்படி, மத்திய உளவுத்துறையிடம் ஒப்படைக்க உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடிக்கான பாதுகாப்பை மேலும் பலப்படுத்தவும உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மோடி பிரதமராக பதவியேற்ற பின் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளார். சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் மாவோயிஸ்டுககளை முற்றிலுமாக ஒழித்துக் கட்ட மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனையடுத்து பிரதமர் மோடியை கொல்ல மாவோயிஸ்டுகள் திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.


ராஜீவ் காந்தியை கொன்றது போல  பிரதமர் மோடியை கொல்ல மாவோயிஸ்ட்டுகள் திட்டம்.,'Another Rajiv Gandhi-type incident': Maoist letter exposes plan to kill PM Moditamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema ராஜீவ் காந்தியை கொன்றது போல  பிரதமர் மோடியை கொல்ல மாவோயிஸ்ட்டுகள் திட்டம்.,'Another Rajiv Gandhi-type incident': Maoist letter exposes plan to kill PM Moditamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema ராஜீவ் காந்தியை கொன்றது போல  பிரதமர் மோடியை கொல்ல மாவோயிஸ்ட்டுகள் திட்டம்.,'Another Rajiv Gandhi-type incident': Maoist letter exposes plan to kill PM Moditamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்















Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in