ரிவர்ஸ் கியர் கொண்ட ராட்சத 'கன்பஸ் 410' பைக்

ரிவர்ஸ் கியர் கொண்ட  ராட்சத 'கன்பஸ் 410' பைக்
உலகில் இதுவரை கார்கள், மோட்டார் சைக்கிள்களில் பலவிதமான சாதனைகள் நிகழ்த்தப்பட்டிருக்கிறது.


சில சமயங்களில் புதிய வடிவமைப்புகளுக்காக கார் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் சாதனை படைத்ததுண்டு. அந்த வகையில் ஜெர்மனியை சேர்ந்த நிறுவனம் ஒன்று பழைய கின்னஸ் சாதனைகளை முறியடித்து புதிய மோட்டார்சைக்கிள் ஒன்றை உருவாக்கியுள்ளது. ஜெர்மனியை சேர்ந்த லியோன்ஹர்ட் என்ற நிறுவனம் இந்த ராட்சத மோட்டார் சைக்கிளை உருவாக்கி சாதனையை படைத்துள்ளது.

இந்த ராட்சத மோட்டார் சைக்கிளுக்கு அந்நிறுவனம் 'கன்பஸ் 410' என பெயர் சூட்டியுள்ளது. இதுவரை சாதனைக்காக மட்டுமே ராட்சத மோட்டார் சைக்கிள்கள் உருவாக்கப்பட்டு வந்தது. இதை வெளியில் பயன்படுத்த அனுமதிப்பதில்லை. இந்த கோட்பாடுகளையெல்லாம் உடைத்து எறிந்தது 'கன்பஸ் 410' புதிய ரக ராட்சத மோட்டார் சைக்கிள். முதல்கட்டமாக, லிமிடெட் எடிசனாக இந்த பைக் விற்பனை செய்யப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. 11 அடி நீளம், 30 இன்ச் உயரத்தில் இருக்கை ஆகியவை கொண்ட இந்த மோட்டார் சைக்கிளை சைடு கார் உதவியுடன் மட்டுமே எடுத்துச்செல்வது சாத்தியமாக இருக்கும் என தெரிகிறது.

இந்த 'கன்பஸ் 410' ரக பைக் 650 கிலோ எடை கொண்டது. இந்த மோட்டார் சைக்கிளில் மிகச்சிறந்த டிசைன் அதற்கு ஏற்ற பவர் கொண்டதாக சரியான கலவையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக டிசைனர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த மோட்டார் சைக்கிளில் கற்பனையிலும் எட்டாத அளவிற்கு 350 பிஎச்பி பவரையும், 691 என்எம் டார்க்கையும் அளிக்கும் 6,728 சிசி திறன்கொண்ட இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் சைக்கிளில் 3 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டு, ரிவர்ஸ் கியர் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மோட்டார் சைக்கிளுக்கு கம்பீரத்தை அள்ளி வழங்குவதற்கு இதன் டயர்கள் முக்கிய காரணம். முன்புறத்தில் 38 இஞ்ச் டயரும், பின்புறத்தில் 42 இஞ்ச் டயரும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் சைக்கிளை 3.50 லட்சம் டாலர் விலையில் (இந்திய ரூபாயில் 2.20 கோடி) விற்பனை செய்ய உள்ளதாக லியோன்ஹர்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. மோட்டார் சைக்கிளில் கற்பனையிலும் எட்டாத அளவிற்கு 350 பிஎச்பி பவரையும், 691 என்எம் டார்க்கையும் அளிக்கும் 6,728 சிசி திறன்கொண்ட இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது
https://goo.gl/Q1XouC


19 May 2017

வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு செயலியில் பின்டு சாட்ஸ் (Pinned Chats) எனும் புதிய வசதி அறிமுகம்

15 May 2017

வாட்ஸ் அப் மூலம் வீடியோ காலிங் செய்வதில் இந்தியா முதலிடம்:

18 Jul 2015

தகவல் தொழில்நுட்பத்தின் அடுத்த புரட்சி: யாஹூ வீடியோ மெசஞ்சர்

25 May 2015

ஐந்து ஆண்டுகளில் சாலையில் ஓடும் கூகுளின் தானியங்கி கார்

26 Jan 2015

கூகுள் கிளாஸை பின்னுக்குத் தள்ளும் சோனியின் ஸ்மார்ட் ஐ கிளாஸ் அறிமுகம்!

16 Oct 2014

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய அறிமுகம் ஐபேட் ஏர் 2 , ஐபேட் மினி 3

24 Jun 2014

ரிவர்ஸ் கியர் கொண்ட ராட்சத 'கன்பஸ் 410' பைக்

08 Apr 2014

புதிய தொழில்நுட்பம் மூலம் 30 வினாடிகளில் சார்ஜ் ஏறும் செல்போன் பேட்டரி

09 Mar 2014

வாட்ஸ்அப் செயல்பாட்டை ஆய்வு செய்ய சிசிஐ முடிவு

24 Feb 2014

மணிக்கு 435 கி.மீ வேகத்தில் பறக்கும் உலகின் அதி வேக கார்