ருத்ராட்சம் யார்-யார் அணியலாம்?

ருத்ராட்சம் யார்-யார் அணியலாம்?
சென்னை நந்தனத்தில் டெம்பிள் டவர் வளாகத்தில், ருத்ராட்ச கண்காட்சி நடக்கிறது. இங்கு, பெண்கள் அதிக அளவில் ருத்ராட்சம் வாங்கிச்செல்வதை காணமுடிகிறது.

இதற்கிடையே, ருத்ராட்சத்தை யார் அணிவது? சிறு குழந்தைகளும், பெண்களும் ருத்ராட்சம் அணியலாமா? கூடாதா? என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.

இது குறித்து, ருத்ராட்ச கண்காட்சி நடத்தும் ருத்ராலைப் நிறுவனர் தனய் சீதா கூறியதாவது:-

ருத்ராட்சம் சிவபெருமானின் அருட்கொடை என போற்றப்படுகிறது. நவரத்தினங்களின் அரசன் என்றும் ருத்ராட்சத்தை குறிப்பிடுவார்கள். புனிதமாக கருதப்படும் இந்த ருத்ராட்சம், ஆதிகாலத்தில் இருந்தே பயன்படுத்தப்பட்டு வருகிறது. ருத்ராட்சத்தின் மகிமை பற்றி சிவபுராணத்தில் சொல்லப்பட்டுள்ளது. தெய்வீகத்தன்மை கொண்ட ருத்ராட்சம், நோய் தீர்க்கும் தன்மையையும் கொண்டதாக கருதப்படுகிறது.

ருத்ராட்ச மர பழத்தில் இருந்து ருத்ராட்ச கொட்டைகள் கிடைக்கின்றன. இந்தியாவில் சில குறிப்பிட்ட பகுதிகளிலும், நேபாளம், ஜாவா தீவு என விரல்விட்டு எண்ணும் நாடுகளில் மட்டுமே ருத்ராட்ச மரங்கள் வளர்கின்றன.

ருத்ராட்சத்துக்கு, மனதை அடக்கி, மனக்கட்டுப்பாட்டை வளர்ப்பதற்கான அபூர்வ சக்தி உள்ளது. இதை அணிபவர்கள், உணர்வுப்பூர்வமாக அறியலாம். ருத்ராட்சத்துக்கு நினைவாற்றலை அதிகரிக்க செய்யும் அற்புத சக்தியும், சுய ஆற்றலை பெருக்கிக்கொள்ளும் திறனும் உண்டு. ருத்ராட்சத்துக்கு இருக்கும் இந்த சிறப்புகளை, சிலர் உடனடியாக உணரலாம். சிலர் படிப்படியாக உணர முடிகிறது.

ருத்ராட்சம், இயற்கையாகவே, ஒரு முகம் முதல் 21 முகங்களைக்கொண்டதாக அமைந்துள்ளது. ருத்ராட்சத்தின் ஒவ்வொரு முகத்துக்கும் ஒவ்வொரு தனிச்சிறப்பு உள்ளது. ருத்ராட்ச கொட்டையின் மேற்பகுதியில் உள்ள கோடுகளைக்கொண்டு அது எத்தனை முகம் கொண்டது? என்பதை அறியலாம்.

ஒரு முக ருத்ராட்சத்தைப்பற்றி குறிப்பிடும்போது, இது கடவுளால் ஆளப்படுகிறது. அனைத்து முக ருத்ராட்சங்களின் அரசனாக ஏக முகியாக ஒரு முக ருத்ராட்சம் கருதப்படுகிறது. இது, தூய மனித உணர்வுகளை பிரதிபலிக்கிறது. நினைத்த காரியம் கைகூடும். ஒரு முக ருத்ராட்சம் டாக்டர்களுக்கு ஏற்றது. நோயின் தன்மையை தெளிவாக அறியும் ஆற்றல் கிடைப்பதுடன் அறுவை சிகிச்சையில் வெற்றிபெறவும் உதவும்.

5 முக ருத்ராட்சம் பற்றி குறிப்பிடுகையில், இது வியாழன் கிரகத்தால் ஆளப்படுகிறது. ஐந்து முக ருத்ராட்ச மாலை அணிந்தால் உடல் நலம் மற்றும் அமைதி ஏற்படும். ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும், இதய நோயை குணப்படுத்தும். இப்படி ஒவ்வொரு முகத்துக்கும் ஒவ்வொரு தனிச்சிறப்பு உள்ளது.

இப்படி, ருத்ராட்சத்தின் மகிமை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். இந்த ருத்ராட்சத்தை பெண்கள் அணியலாமா? குழந்தைகளுக்கு அணிவிக்கலாமா? யார்-யார் அணியலாம் என்ற கேள்வி பலரிடம் எழுகிறது. ருத்ராட்சத்தை சிறு குழந்தைகளில் இருந்து வயதானவர்கள் வரையில் ஆண், பெண் இருபாலரும் அணியலாம். அதேபோல், சாதி, மத வேறுபாடின்றி எம்மதத்தை சேர்ந்தவரானாலும் ருத்ராட்சம் அணியலாம்.

முதல் முதலாக ருத்ராட்சம் அணிபவர்கள், திங்கட்கிழமைகளிலும், பிற நல்ல நாட்களிலும் சிவாலயங்களில் அபிஷேகம் செய்தபின்பு அணியலாம். ஈமச்சடங்குகளின் போது அணியக்கூடாது. இரவு படுக்கைக்கு முன் கழற்றிவிட்டு, காலை எழுந்து குளித்தபின் ஓம் நமசிவாய என்ற மந்திரத்தை உச்சரித்து அணியவேண்டும்.

ருத்ராட்சம் மிகவலிமையான மணியாகும். எனவே, தகுந்த முறையில் அதை பராமரித்து, பயன்படுத்தினால் எண்ணற்ற ஆண்டுகளுக்கு பயன்படுத்தலாம். ஒரு சில குடும்பங்களில் தலைமுறை தலைமுறையாக பராமரித்து பயன்படுத்துகிறார்கள்.

இவ்வாறு தனய் சீதா கூறினார்.
https://goo.gl/FQ5PhJ


21 Aug 2014

பணிவோம், உயர்வோம்!

19 Jun 2014

மனஅழுத்தத்தை விரட்டி எப்போதும் சந்தோஷமாக இருக்க சில டிப்ஸ்

23 Mar 2014

திருமணத்திற்கு பின் பெண்களின் உடல் குண்டாவது ஏன்

15 Mar 2014

முதுமை பற்றிய பொன் மொழிகள்

09 Mar 2014

சுவாமி விவேகானந்தர் பொன் மொழிகள்

09 Mar 2014

பொன் மொழிகள்

23 Jan 2014

விரதம் என்றால் என்ன?விரதம் இருப்பதற்கான காரணம் என்ன?

15 Dec 2013

முதுமையின் பொன் மொழிகள்

19 Nov 2013

யோகாசனம்( yogasana )

29 Oct 2013

தீபாவளி --- சிந்தனைக்குச் சில வினாக்கள்!!