tamilkurinji logo
 

ரூ.80 கோடி அன்னிய செலாவணி மோசடி மாஜி திமுக அமைச்சர் கோ.சி.மணி மகன் கைது,news , indianews , tamilnews, indianews, tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

news,,,indianews,,,tamilnews,,indianews,,,tamilseithigal,,indiaseithigal,,tamilcinemanews,,,seithigal,செய்திகள்,,தமிழ்செய்திகள்,,தமிழ்


செய்திகள் >>> தமிழகம்

ரூ.80 கோடி அன்னிய செலாவணி மோசடி மாஜி திமுக அமைச்சர் கோ.சி.மணி மகன் கைது

First Published : Tuesday , 8th August 2017 12:28:35 PM
Last Updated : Tuesday , 8th August 2017 12:28:35 PM


ரூ.80 கோடி அன்னிய செலாவணி மோசடி மாஜி திமுக அமைச்சர் கோ.சி.மணி மகன் கைது,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

தி.மு.க. முன்னாள் அமைச்சர் கோ.சி.மணியின் மகன் அன்பழகன் 4 மாதங்களுக்கு முன்னர் ரூ.80 கோடி அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சிக்கி இருந்தார். நேற்று இரவு அவர் திடீரென கைது செய்யப்பட்டுள்ளார்.


சென்னை மண்ணடியை சேர்ந்தவர் லியாகத் அலி. இவரது வங்கி கணக்கில் ரூ.8 கோடி பணம் இருந்ததை அமலாக்க பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்தனர். கடந்த மார்ச் மாதம் இது தொடர்பாக லியாகத் அலியிடம் விசாரணை நடத்தப்பட்டது.


அப்போது அவர் போலியாக பல்வேறு நிறுவனங்களை தொடங்கி அதன் மூலம் எலக்ட்ரானிக் பொருட்களை இறக்குமதி செய்ததாக கணக்கு காட்டி இருப்பது தெரிய வந்தது.


எலக்ட்ரானிக் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக ஹாங்காங் நாட்டிற்கு முறைகேடாக ரூ.80 கோடிக்கு ஹவாலா பணத்தை லியாகத் அலி அனுப்பி இருப்பதும் தெரியவந்தது.


இதையடுத்து அன்னிய செலாவணி மோசடி வழக்கில் அவர் கைதாகி சிறை சென்றார். இது தொடர்பாக அமலாக்க பிரிவினர் விசாரணை நடத்தினர்.


அப்போது ரூ.80 கோடி மோசடியில் கோ.சி.மணியின் மகன் அன்பழகனுக்கும் தொடர்பு இருப்பது உறுதியானது. இதையடுத்து திருவான்மியூரில் உள்ள வீட்டில் அன்பழகன் கைது செய்யப்பட்டார்.

லியாகத் அலி கைதானவுடன் அவரது வங்கி கணக்குகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்த போது 8 நிறுவனங் களை போலியாக தொடங்கி அதன் மூலம் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கணக்கு தொடங்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.


இது தொடர்பாக வங்கிகளில் உள்ள கேமராக்களை அமலாக்கத்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது கோ.சி.மணியின் மகன் அன்பழகன் அடிக்கடி வங்கிக்கு வந்து சென்றதும், ரூ.80 கோடி பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதும் உறுதியானது. இதையடுத்தே அமலாக்கத்துறை அதிகாரிகள் அன்பழகனை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.


கைதான அன்பழகன் நேற்று இரவு எழும்பூரில் உள்ள மாஜிஸ்திரேட்டு ரோஸ்லின் துரை வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். ரூ.80 கோடி ஹவாலா பணம் யாருடைய பணம் என்பது தெரியவில்லை. சென்னையை சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவரது பணம் என்றும் கூறப்படுகிறது.


ரூ.80 கோடி அன்னிய செலாவணி மோசடி மாஜி திமுக அமைச்சர் கோ.சி.மணி மகன் கைது,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
ரூ.80 கோடி அன்னிய செலாவணி மோசடி மாஜி திமுக அமைச்சர் கோ.சி.மணி மகன் கைது,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
ரூ.80 கோடி அன்னிய செலாவணி மோசடி மாஜி திமுக அமைச்சர் கோ.சி.மணி மகன் கைது,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 நாமக்கல் அருகே வடமாநில கொள்ளையர்கள் 5 பேர் கைது
கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் ரோடு, டைடல் பார்க் அருகே ஆக்சிஸ் வங்கி உள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்துக்குள் கடந்த 10-ந்தேதி அதிகாலையில் கொள்ளையர்கள் நுழைந்து ஏ.டி.எம். எந்திரத்தை கியாஸ் வெல்டிங் மூலம் உடைத்து ரூ. 26 லட்சத்து 70 ஆயிரத்து

மேலும்...

 திருச்செந்தூர் கோயில் மண்டபம் இடிந்து பெண் பலி
திருச்செந்தூர் முருகன் கோயிலில் வள்ளி குகை அருகே பிரகார மண்டபத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது.இதில் மோர் வியாபாரியான ரவி என்பவரது மனைவி பேச்சியம்மாள் என்பவர் மரணமடைந்தார்.2 பேர் காயமடைந்தனர். தொடர்ந்து தீயணைப்பு துறையினர், வருவாய் துறையினர், போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும்...

 அதிக அளவிலான காவலர்களை அனுப்பியிருந்தால் எனது கணவர் உயிரிழந்திருக்க மாட்டார் மனைவி பேட்டி
கொள்ளையர்களை பிடிக்க அதிக அளவிலான காவலர்களை அனுப்பியிருந்தால் எனது கணவர் உயிரிழந்திருக்க மாட்டார் என மனைவி பானுரேகா கூறினார்.சென்னை கொளத்தூரில்  புதிய லட்சுமிபுரத்தில் முகேஷ் குமார் என்பவருக்கு சொந்தமான நகைக்கடையில்  மேற்பகுதியில் துளையிட்டு நகைகள், ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டன. இதுகுறித்து வழக்குப்பதிவு

மேலும்...

 ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சென்னை இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொலை
நகைக்கடை கொள்ளையர்களை பிடிப்பதற்காக ராஜஸ்தான் சென்ற சென்னை மதுரவாயல் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டி சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.சென்னை கொளத்தூர் ஸ்ரீநகர் அனெக்ஸ் 2-வது தெருவைச் சேர்ந்தவர் முகேஷ்குமார் (வயது 37). ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இவர், கடந்த 15 வருடங்களாக

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in