ரெயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை

ரெயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகேயுள்ள தர்மாபுரி பகுதியில் ரெயில் தண்டவாளத்தில் ஒரு ஆணும், பெண்ணும் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தனர். இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடைரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் ரெயில்வே போலீசாரும், அம்மையநாயக்கனூர் போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் அந்த ஆண் மதுரை மாவட்டம் சோழவந்தானை சேர்ந்த ராஜகுரு மகன் சோலைகுருசாமி (வயது 25), என்றும், பிணமாக கிடந்த பெண் திருவேடகம் அருகே உள்ள தச்சம்பத்துவை சேர்ந்த ஜெயக்குமார் என்பவரின் மகள் கவுசல்யா (17) என்பதும் தெரியவந்தது. இதில் சோலை குருசாமி ஐ.டி.ஐ. படித்துவிட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.

கவுசல்யா சோழவந்தானில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவருக்கும், சோலைகுருசாமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது காதலாக மாறியது. இந்த காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தாக கூறப்படுகிறது.


இந்த நிலையில் 2 பேரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியே சென்றனர். அதன்பின்னர் அவர்கள் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதுகுறித்து சோழவந்தான் போலீஸ் நிலையத்தில் அவர்களின் பெற்றோர் புகார் செய்துள்ளனர்.

இந்நிலையில் காதல் ஜோடி 2 பேரும் நேற்று காலையில் கொடைரோடு அருகே மதுரையில் இருந்து சென்னை செல்லும் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.


இதுகுறித்து கொடைரோடு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரெயில்முன் பாய்ந்து காதல்ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
https://goo.gl/nqt3q3






19 Feb 2019

குடும்ப பிரச்சினை காரணமாக இரு மகன்களை கொன்று தாய் தற்கொலை

19 Feb 2019

அ.தி.மு.க.வுடன் கூட்டணி உடன்பாடுபா.ம.க.வுக்கு 7; பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள்தே.மு.தி.க.வுடன் இழுபறி

06 Feb 2019

குப்பைமேட்டில் கிடைத்த பெண்ணின் கை, கால்கள் அடையாளம் தெரிந்தது: திரைப்பட இயக்குநரான கணவர் கைது

03 Jan 2019

கருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை; சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிப்பு

02 Jan 2019

கூலிப்படை உதவியுடன் மகனை கொன்ற கள்ளக்காதலனை தீர்த்து கட்டிய பெண்

30 Dec 2018

சென்னையில் 15 ஆண்டுகளுக்குப்பின் மழையளவு 55 சதவீதம் குறைவு: கடும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

30 Dec 2018

அரசு நிர்வாகம் முற்றிலும் நிலை குலைந்துள்ளதற்கு எச்.ஐ.வி. ரத்த விவகாரமே சாட்சி - ஸ்டாலின்

27 Dec 2018

பொங்கல் பண்டிகைக்கு தமிழகம் முழுவதும் 24,708 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

27 Dec 2018

12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முக்கிய பாடங்களின் தேர்வு நேரத்தில் அரைமணி நேரம் குறைப்பு

25 Dec 2018

குற்றவாளிகளை சுட்டுக் கொல்லும்படி ஆவேசமாக பேசிய முதல் அமைச்சர் குமாரசாமி