ரோகித்சர்மா ஆட்டம் குறித்து கவலை இல்லை: டோனி கருத்து

ரோகித்சர்மா ஆட்டம் குறித்து கவலை இல்லை: டோனி கருத்து
டோனி தலைமையிலான இந்திய அணி உலக கோப்பை போட்டியில் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறது. இந்திய அணி அனைத்து ‘லீக்’ ஆட்டங்களிலும் வென்று கால் இறுதிக்கு தகுதி பெற்றது. இந்திய அணி கால் இறுதி ஆட்டத்தில் வங்காள தேசத்தை 19–ந்தேதி சந்திக்கிறது.

ஒரு நாள் போட்டியில் இரண்டு முறை இரட்டை சதம் அடித்த ரோகித்சர்மா இந்த உலக கோப்பையில் குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு சிறப்பாக ஆடவில்லை. அவர் 6 ஆட்டத்தில் விளையாடி 159 ரன்களே எடுத்துள்ளார். சராசரி 31.80. அதிகபட்சமாக ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு எதிராக 64 ரன் எடுத்தார்.

இந்த நிலையில் ரோகித் சர்மா ஆட்டம் பற்றி அதிகம் கவலைப்பட தேவையில்லை என்று டோனி கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:–

ரோகித்சர்மா ஆட்டம் சிறப்பாகவே இருப்பதாக உணர்கிறேன். அவரது ஆட்டத்திறன் நன்றாக உள்ளது. அவரால் எப்போதுமே ரன்களை குவித்து விட முடிகிறது.

ரன்களை குவிக்கா விட்டாலும் அவரது பேட்டிங் நன்றாகத்தான் இருக்கிறது. மோசமான நிலையில் இல்லை. இதனால் நான் அதிகமாக கவலைப்படவில்லை. ரன்களை அதிரடியாக குவித்து அவர் நல்ல நிலைக்கு மீண்டும் திரும்புவார்.

ஜடேஜாவின் பேட்டிங் குறித்து சிறிது கவலைப்படுகிறேன். அதே நேரத்தில் அவருக்கு போதுமான அளவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அவரது பந்து வீச்சு நன்றாகவே இருக்கிறது. ஒட்டு மொத்தத்தில் அவர் இன்னும் மேம்படவேண்டும். இவ்வாறு டோனி கூறியுள்ளார்.
https://goo.gl/Poav4h


15 May 2017

IPL கிரிக்கெட்டில் புனே அணிக்கு 9–வது வெற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது

14 May 2017

IPL கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது, ஐதராபாத் அணி

09 May 2017

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் ‌ஷரபோவா தோல்வி

09 May 2017

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி

17 Jan 2016

3-வது ஒருநாள் கிரிக்கெட்: விராட் கோலி சதம் வீண், இந்தியா மீண்டும் தோல்வி -ஆஸ்திரேலியா வெற்றி

12 Jul 2015

ஜிம்பாப்வேயை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

01 Jun 2015

கெய்ல் அதிரடி சதம் வீண்

28 May 2015

நீட்டா அம்பானி விருந்தில் திளைத்த மும்பை அணி வீரர்கள்

25 May 2015

இந்தியா-தென்னாப்பிரிக்கா மோதல் தயார்

25 May 2015

ஷரபோவா பிரெஞ்ச் ஓபன் தொடரை கைப்பற்றினார்