tamilkurinji logo


 

லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் ‘ஹவுஸ் ஓனர்’,Lakshmy Ramakrishnan's next titled House Owner Lakshmy Ramakrishnan looks to wrap up work on House Owner ...

Lakshmy,Ramakrishnan's,next,titled,House,Owner,Lakshmy,Ramakrishnan,looks,to,wrap,up,work,on,House,Owner,...




லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் ‘ஹவுஸ் ஓனர்’

First Published : Tuesday , 17th July 2018 02:41:28 PM
Last Updated : Tuesday , 17th July 2018 02:41:28 PM


லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் ‘ஹவுஸ் ஓனர்’,Lakshmy Ramakrishnan's next titled House Owner Lakshmy Ramakrishnan looks to wrap up work on House Owner ...


லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கும் அடுத்த படத்துக்கு ‘ஹவுஸ் ஓனர்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

பிரபல நடிகையான லட்சுமி ராமகிருஷ்ணன், ‘ஆரோகணம்’, ‘நெருங்கி வா முத்தமிடாதே’ மற்றும் ‘அம்மணி’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். நான்காவது படமாக ‘ஹவுஸ் ஓனர்’ என்ற படத்தை தற்போது இயக்கி வருகிறார். ‘பசங்க’ கிஷோர் மற்றும் நடிகை விஜி சந்திரசேகர் மகள் லவ்லின் இருவரும் இந்தப் படத்தின் பிரதான பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

சென்னை வெள்ளத்தின்போது நடக்கும் காதல் கதையாக இந்தப் படத்தை எடுத்து வருகிறார் லட்சுமி ராமகிருஷ்ணன். ஆனால், இந்தப் படத்தில் சென்னை வெள்ளம் சம்பந்தப்பட்டக் காட்சிகளோ, பாடல்களோ இல்லாமல் வித்தியாசமான முறையில் இயக்கி வருகிறார்.

ஆரம்பத்தில் அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷை வைத்து இந்தப் படத்தைத் தொடங்கத் திட்டமிட்டிருந்தார் லட்சுமி ராமகிருஷ்ணன். ஆனால், அப்போது ஸ்கிரிப்ட் முழுவதுமாகத் தயாராகாததால், தொடங்கப்படவில்லை. தற்போது அவர்கள் வேறு படங்களில் பிஸியாகிவிட்டதால், ஹீரோ மற்றும் ஹீரோயினை மாற்றிவிட்டார்.

கிருஷ்ணா சேகர் ஒளிப்பதிவு செய்ய, பிரேம் எடிட் செய்கிறார். இந்தப் படத்துக்குப் பின்னணி இசை அதிமுக்கியம் என்பதால், ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடித்த பின்னரே இசையமைப்பாளர் குறித்து முடிவு செய்யப் போகிறார் லட்சுமி ராமகிருஷ்ணன். முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில், அடுத்த வாரம் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.


லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் ‘ஹவுஸ் ஓனர்’,Lakshmy Ramakrishnan's next titled House Owner Lakshmy Ramakrishnan looks to wrap up work on House Owner ... லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் ‘ஹவுஸ் ஓனர்’,Lakshmy Ramakrishnan's next titled House Owner Lakshmy Ramakrishnan looks to wrap up work on House Owner ... லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் ‘ஹவுஸ் ஓனர்’,Lakshmy Ramakrishnan's next titled House Owner Lakshmy Ramakrishnan looks to wrap up work on House Owner ...
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in