லண்டன் ஒலிம்பிக் கோலாகல தொடக்கம்

லண்டன் ஒலிம்பிக் கோலாகல தொடக்கம்
உலகில் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த லண்டன் ஒலிம்பிக் போட்டி சனிக்கிழமை அதிகாலை 1.30 மணிக்கு கோலாகலமாகத் தொடங்கியது. பிரிட்டன் தலைநகர் லண்டனில் போட்டி நடைபெறும் இடமான ஒலிம்பிக் பார்க் பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது. லண்டன் நகரில் திரும்பும் திசையெல்லாம் கொடிகளும், பெரிய அளவிலான பலூன்களும் பறக்கவிடப்பட்டிருப்பதைக் காண முடிந்தது.
 
ஒலிம்பிக் போட்டியைக் காண 60,000-த்துக்கும் மேலானவர்கள் திரண்டுள்ளனர். அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷேல் ஒபாமா, பிரிட்டிஷ் அதிபர், பிரதமர், ஐரோப்பாவைச் சேர்ந்த மன்னர் குடும்பத்தினர், லண்டன் நகர மேயர் போரிஸ் ஜான்ஸன் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் தொடக்க விழாவில் பங்கேற்றனர். உலகம் முழுவதும் சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் இந்நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் கண்டுகளித்தனர். மொத்தம் 17 நாள் இப்போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் 204 நாடுகளைச் சேர்ந்த 10,000-த்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர்.
 
21 வயதான ரிபெக்கா சிம்ஸன் என்ற இளம் மங்கையின் நடனம் பார்வையாளர்களை பிரமிக்க வைத்தது. போட்டி தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாகவே பல்வேறு நாட்டின் தலைவர்கள், வீரர், வீராங்கனைகள், ரசிகர்கள் ஆகியோர் லண்டன் நகரை வந்தடைந்தனர். இவர்களின் வருகையால் லண்டன் நகரே ஸ்தம்பித்தது.
 
முன்னதாக கிரேக்கத்தில் இருந்து தொடங்கிய ஒலிம்பிக் ஜோதி ஓட்டம் லண்டனை சுற்றி வந்த பின்னர், தேம்ஸ் நதி வழியாக போட்டி நடைபெறும் ஒலிம்பிக் பார்க் மைதானத்துக்கு கொண்டு வரப்பட்டது.
 
ஒலிம்பிக் போட்டியை தொடங்கி வைத்த உடனேயே மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் வாணவேடிக்கை நடைபெற்றது. தரையிலிருந்து விண்ணில் சென்று கலர் கலராக வெடித்துச் சிதறிய பட்டாசுகள் பார்வையாளர்களை பிரமிக்க வைத்தது.
 
வாணவேடிக்கை நிகழ்ச்சிக்காக சீனாவின் லியாங் நகரில் இருந்து ரூ.1.75 கோடி செலவில் பட்டாசுகள் வரவழைக்கப்பட்டிருந்தன.
 
ஒலிம்பிக் போட்டியைக் காண ரசிகர்கள், தங்கள் நண்பர்கள் உறவினர்கள் சகிதம் லண்டன் மாநகர வீதிகளில் உற்சாக வலம் வந்தனர்.
 
பலத்த பாதுகாப்பு: போட்டிக்கு பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதால், லண்டனில் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான போலீஸôர் மைதானத்திலும், மைதானத்தைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் குவிக்கப்பட்டிருந்தனர். ஒவ்வொரு ரசிகரும் கடும் சோதனைக்குப் பின்னரே மைதானத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
 
மைதானத்தைச் சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில் ஏவுகணைகளை தயார் நிலையில் நிறுத்தி ராணுவ வீரர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். வான்வழி, நீர்வழியாக தாக்குதல் நடத்தினால் அதைச் சமாளிக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன.
 
தேம்ஸ் நதியிலும் பாதுகாப்புக்காக கடற்படை வீரர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். பல்லாயிரக்கணக்கான போலீசாரும், ராணுவ வீரர்களும் நகர் முழுவதும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
 
https://goo.gl/32yCjC


15 May 2017

IPL கிரிக்கெட்டில் புனே அணிக்கு 9–வது வெற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது

14 May 2017

IPL கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது, ஐதராபாத் அணி

09 May 2017

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் ‌ஷரபோவா தோல்வி

09 May 2017

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி

17 Jan 2016

3-வது ஒருநாள் கிரிக்கெட்: விராட் கோலி சதம் வீண், இந்தியா மீண்டும் தோல்வி -ஆஸ்திரேலியா வெற்றி

12 Jul 2015

ஜிம்பாப்வேயை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

01 Jun 2015

கெய்ல் அதிரடி சதம் வீண்

28 May 2015

நீட்டா அம்பானி விருந்தில் திளைத்த மும்பை அணி வீரர்கள்

25 May 2015

இந்தியா-தென்னாப்பிரிக்கா மோதல் தயார்

25 May 2015

ஷரபோவா பிரெஞ்ச் ஓபன் தொடரை கைப்பற்றினார்