tamilkurinji logo
 

வங்கி கடன் மோசடி விவகாரம்: அருண் ஜெட்லி மகள் மீது ராகுல்காந்தி குற்றச்சாட்டு,Arun Jaitley silent on PNB fraud to protect daughter, says Rahul Gandhi tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

Arun,Jaitley,silent,on,PNB,fraud,to,protect,daughter,,says,Rahul,Gandhi,tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news


செய்திகள் >>> இந்தியா

வங்கி கடன் மோசடி விவகாரம்: அருண் ஜெட்லி மகள் மீது ராகுல்காந்தி குற்றச்சாட்டு

First Published : Tuesday , 13th March 2018 07:43:02 PM
Last Updated : Tuesday , 13th March 2018 07:44:50 PM


வங்கி கடன் மோசடி விவகாரம்: அருண் ஜெட்லி மகள் மீது ராகுல்காந்தி குற்றச்சாட்டு,Arun Jaitley silent on PNB fraud to protect daughter, says Rahul Gandhi tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

வங்கி கடன் மோசடியில் ஈடுபட்டவர்கள் வெளிநாடு தப்புவதற்கு முன் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லியின் மகள் சட்டஉதவி செய்திருப்பதாகவும் அதற்காக பெரும் பணம் பெற்றிருப்பதாகவும் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.


பஞ்சாப் நேஷனல் வங்கியில் மும்பை வைர வியாபாரி நீரவ் மோடி மற்றும் அவரது உறவினர் ரூ.13 ஆயிரம் கோடி வரை மோசடி செய்து விட்டு வெளிநாடு தப்பி விட்டனர்.

இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மோடி தலைமையிலான பாஜ அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்த நிலையில் அவர் நேற்று தனது டுவிட்டர் பதிவில் நிதியமைச்சர் அருண்ஜெட்லியை ஆவேசமாக தாக்கினார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: வங்கி முறைகேட்டில் ஈடுபட்ட  குற்றவாளிகள் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளனர். இவர்கள் வெளிநாடு தப்பிப்பதற்கு ஒரு மாதத்துக்கு முன்பாக அருண்ஜெட்லியின் மகளான வக்கீல், தனது சட்ட நிறுவனத்தின் பணிக்காக பெரும் தொகையை பெற்று இருக்கிறார்.

இதனால்தான் வங்கி மோசடி விவகாரத்தில் நிதியமைச்சர் மவுனம் காத்து வருகிறார். மோசடிக்கு துணை போகும் சட்ட நிறுவனங்களில் சி.பி.ஐ. சோதனை நடத்தி வரும் நிலையில், ஜெட்லியின் மகளின் சட்ட நிறுவனத்தில் சி.பி.ஐ. ஏன் சோதனை நடத்தக்கூடாது?. இவ்வாறு ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

வங்கி கடன் மோசடி விவகாரம்: அருண் ஜெட்லி மகள் மீது ராகுல்காந்தி குற்றச்சாட்டு,Arun Jaitley silent on PNB fraud to protect daughter, says Rahul Gandhi tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

வங்கி கடன் மோசடி விவகாரம்: அருண் ஜெட்லி மகள் மீது ராகுல்காந்தி குற்றச்சாட்டு,Arun Jaitley silent on PNB fraud to protect daughter, says Rahul Gandhi tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

வங்கி கடன் மோசடி விவகாரம்: அருண் ஜெட்லி மகள் மீது ராகுல்காந்தி குற்றச்சாட்டு,Arun Jaitley silent on PNB fraud to protect daughter, says Rahul Gandhi tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 பாலியல் தொல்லை கொடுத்த டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் கைது
டெல்லி ஜவர்ஹலால் நேரு பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் வாழ்க்கை அறிவியல் கல்லூரி பேராசிரியர் அடுல் ஜோஹ்ரி என்பவர் மீது மாணவியர் பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் அளித்தனர். இதுதொடர்பாக வசந்த் கஞ்ச் காவல் நிலையத்தில்  பேராசிரியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மேலும்...

 பிரதமர் மோடியும் ஊழல்வாதிதான் பா.ஜனதாவை தாக்கிய ராகுல் காந்தி
காங்கிரஸ் மாநாட்டில் 50 நிமிடங்கள் உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பேசினார்.   ராகுல் காந்தி பேசுகையில், ரபேல் போர் விமான ஒப்பந்தம், பிஎன்பி மோசடி, பொருளாதார நிலை, பண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் பிற விவகாரங்களில்

மேலும்...

 ஆண் நண்பருடன் பழகியதற்காக 13 வயது மகளை கழுத்தை அறுத்து கொன்ற தந்தை
கிழக்கு டெல்லி காரவால் பகுதியில், ஆண் நண்பருடன் சுற்றியதால் ஆத்திரமடைந்த சிறுமியின் தந்தை தனது  13 வயது மகளின் கழுத்தை அறுத்து கொலை செய்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு டெல்லியை சேர்ந்த 40 வயது சுதேஷ்குமார் என்பவர் தனது

மேலும்...

 நோயாளியின் துண்டிக்கப்பட்ட காலை தலையணையாக்கிய மருத்துவ ஊழியர்கள்! -உ.பி. மருத்துவமனையில் அதிர்ச்சி
உத்தரப்பிரதேச மாநிலத்தில், பள்ளிப் பேருந்தின் நடத்துனரின் கால் விபத்தில் துண்டிக்கப்பட்ட நிலையில், அதை எடுத்து அவருக்கே தலையனையாக்கிய கொடுமை மருத்துவமனையில் நடந்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதுஉத்தரப்பிரதேசம், ஹான்சி மாவட்டத்தில், மவுரியான்பூரில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தைச் சேர்ந்த பள்ளிப்பேருந்து, மாணவர்களை

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in