வரதட்சணைக் கொடுமையால் பெண் தற்கொலை: கணவரும், மாமியாரும் கைது

வரதட்சணைக் கொடுமையால்  பெண் தற்கொலை: கணவரும், மாமியாரும் கைது
பெங்களூருவில் வரதட்சணைக் கொடுமையின் காரணமாக பெண் பொறியாளர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவில் உள்ள ராமமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் சதீஷ் குமார் (31). இவர் தனது மனைவி ரேஷ்மி (28) மற்றும் 1 வயது ஆண் குழந்தையுடன் அங்குள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்தார்.

 மென்பொருள் பொறியாளர்களான சதீஷ் குமாரும், ரேஷ்மியும் மன்யதா டெக் பார்க்கில் உள்ள பன்னாட்டு நிறுவத்தில் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத போது, ரேஷ்மி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இது தொடர்பாக ரேஷ்மியின் தாய் பாக்யம்மா ராமமூர்த்தி காவல் நிலையத்தில் மருமகன் சதீஷ் குமாருக்கு எதிராக வரதட்சணை கொடுமை புகார் தெரிவித்தார்.

போலீஸார் சதீஷ் குமாரிடம் விசாரணை நடத்தியபோது, ''நான் வேலைக்கு சென்றுவிட்டேன். எனது தாயாரும் வீட்டில் இல்லாத நேரத்தில் ரேஷ்மி தற்கொலை செய்துகொண்டதால், எங்களுக்கு எதுவும் தெரியாது. நாங்கள் யாரும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தவில்லை'' என மறுத்துள்ளார்.

எனவே, போலீஸார் ரேஷ்மியின் குடும்பத்தாரிடம் விசாரித்த போது, ''சதீஷ் குமாரும், அவரது தாயாரும் ரேஷ்மியை ரூ. 20 லட்சம் வரதட்சணை கேட்டு தினமும் ரேஷ்மியை கொடுமைப்படுத்தினர்.

அவர் இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு அமெரிக்காவில் பணியாற்றி வரும் தனது தங்கை பூர்ணிமாவுக்கு ஃபேஸ்புக்கில் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.

அதில், ''வரதட்சணைக் கொடுமை தாங்கமுடியவில்லை. இன்றுதான் என்னுடைய கடைசி நாள். என் மகனை பத்திரமாக பார்த்துக் கொள்''என குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து போலீஸார் சதீஷ் குமாரையும் அவரது தாயையும் வரதட்சணைக் கொடுமை செய்து தற்கொலைக்குத் தூண்டியதற்காக இந்திய தண்டனை சட்டம் 304(பி)-ம் பிரிவின் கீழ் கைது செய்தனர்.

இதனிடையே பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு, ரேஷ்மியின் உடல் அவரது சொந்த ஊரான கோலாரின் நேற்று தகனம் செய்யப்பட்டது.

https://goo.gl/HN9XX5


18 Dec 2018

ஐபிஎல் ஏலம் : அதிக விலை போன இந்திய பந்து வீச்சாளர்கள்

14 Dec 2018

4 வது மாடியில் இருந்து குதித்து பிரபல டிவி தொகுப்பாளினி தற்கொலை

13 Dec 2018

தெலங்கானா முதல்வராக தொடர்ந்து 2-வது முறையாக சந்திரசேகர் ராவ் பதவி ஏற்றார்

11 Dec 2018

பா.ஜனதா 5 ஆண்டுகளாக எதையும் செய்யவில்லை என்பதை மக்கள் உறுதியளித்துள்ளனர் -சந்திரபாபு நாயுடு

11 Dec 2018

பா.ஜ.க. செல்வாக்கு இழந்து விட்டதையே 5 மாநில தேர்தல் முடிவுகள் காட்டுகிறது - ரஜினி

10 Dec 2018

பா.ஜனதாவை வீழ்த்த 14 கட்சி கூட்டணி- டெல்லியில் இன்று முக்கிய ஆலோசனை

10 Dec 2018

நாடு முழுவதும் செங்கல் மூலம் கட்டிடம் கட்டத் தடை: மத்திய அரசு திட்டம்

16 Oct 2018

நாளை நடைதிறப்பு - சபரிமலை கோவிலில் பலத்த பாதுகாப்பு

11 Oct 2018

மசூதியில் பெண்களை தொழுகைக்கு அனுமதிக்க வேண்டும்: கேரள முஸ்லிம் பெண்கள் கூட்டமைப்பு

10 Oct 2018

சிறுமி பலாத்காரம் “என்னுடைய மகனை தூக்கிலிடுங்கள், மற்றவர்களை தாக்காதீர்கள்