tamilkurinji logo
 

வாடகை பிரச்னை:லதா ரஜினிகாந்த் கடையை காலி செய்ய நீதிமன்றம் உத்தரவு ,HC gives one month for Latha Rajinikanth to accept new rent for shop tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

HC,gives,one,month,for,Latha,Rajinikanth,to,accept,new,rent,for,shop,tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news




வாடகை பிரச்னை:லதா ரஜினிகாந்த் கடையை காலி செய்ய நீதிமன்றம் உத்தரவு

First Published : Friday , 29th December 2017 06:51:04 PM
Last Updated : Friday , 29th December 2017 06:51:04 PM


வாடகை பிரச்னை:லதா ரஜினிகாந்த் கடையை காலி செய்ய நீதிமன்றம் உத்தரவு ,HC gives one month for Latha Rajinikanth to accept new rent for shop tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

மாநகராட்சி உயர்த்திய கடையின் வாடகையை லதா ரஜினிகாந்த் ஏற்காவிட்டால், காவல்துறை உதவியுடன் கடையை காலி செய்யலாம் என சென்னை மாநகராட்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் சென்னை ஆழ்வார்பேட்டை, சி.பி. ராமசாமி சாலையில், மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளில் ஒன்றில், கடந்த 25 ஆண்டுளாக, ‘டிராவல் எக்சேஞ்ச் இந்தியா' தனியார் டிராவல் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

இந்த கடைக்கு வாடகையாக மாதம் 3702 ரூபாயை செலுத்தி வந்தனர். இந்நிலையில், திடீரென வாடகை தொகையை 21160 ரூபாயாக உயர்த்தி சென்னை மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து, லதா ரஜினிகாந்த் சார்பில் மோகன் மேனன் தொடர்ந்த வழக்கில், மாநகராட்சி அளித்த பதிலில், குறிப்பிட்ட கால இடைவெளியில் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை கடைவாடகை மாற்றியமைக்கப்படுவதாகவும், இதுவரை முறையாக செலுத்திவந்த லதா ரஜினிகாந்த் திடீரென எதிர்ப்பதாக தெரிவிக்கப்பட்டது.


மேலும், உயர்த்தபட்ட வாடகையை செலுத்த விருப்பமில்லாவிட்டால் கடையை காலி செய்துவிட்டு பொது ஏலத்தில் பங்கேற்று கடையை பெறும் முயற்சியில் லதா ரஜினிகாந்த் ஈடுபடலாம் எனவும் மாநகராட்சி தெரிவித்தது.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி எஸ்.வைத்தியநாதன், கடை வாடகை உயர்த்தப்பட்டதை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

பல ஆண்டுகளாக அந்த இடத்தில் தொழில்புரிந்து வருவதால், மாநகராட்சி வாடகையை ஏற்பதா வேண்டாமா என லதா ரஜினிகாந்த் முடிவு செய்துகொள்ளலாம். லதா ரஜினிகாந்துக்கு கடை தேவைப்படும்பட்சத்தில் ஒரு மாதத்தில் அதற்கான தொகையை செலுத்த வேண்டும்.

தவறும்பட்சத்தில் அந்த கடையை மாநகராட்சி ஏலத்தில் விடலாம். ஏல அறிவிப்பு வெளியிடப்பட்டால் அதனை எதிர்த்தும் லதா ரஜினிகாந்த் நீதிமன்றத்தை நாடலாம் என்பதால், ஏலம் அறிவிக்கப்பட்ட பின்னரும் கடையை காலி செய்யாவிட்டால், காவல் துறை உதவியுடன் லதா ரஜினிகாந்த் அனுபவித்து வரும் கடைக்குள் சென்று சென்னை மாநகராட்சி காலி செய்யலாம் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

வாடகை பிரச்னை:லதா ரஜினிகாந்த் கடையை காலி செய்ய நீதிமன்றம் உத்தரவு ,HC gives one month for Latha Rajinikanth to accept new rent for shop tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
வாடகை பிரச்னை:லதா ரஜினிகாந்த் கடையை காலி செய்ய நீதிமன்றம் உத்தரவு ,HC gives one month for Latha Rajinikanth to accept new rent for shop tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
வாடகை பிரச்னை:லதா ரஜினிகாந்த் கடையை காலி செய்ய நீதிமன்றம் உத்தரவு ,HC gives one month for Latha Rajinikanth to accept new rent for shop tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 கோவை அருகே பிரபல கன்னட நடிகர் துனியா விஜய் கைது
கடந்த வருடம் அக்டோபர் மாதம் படப்பிடிப்பின்போது 2 துணை நடிகர்கள் அணையில் இருந்து தவறி விழுந்து இறந்தனர். இது தொடர்பாக அந்த படத்தின் தயாரிப்பாளர் சுந்தர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.இந்த நிலையில் கோர்ட்டில் ஆஜராகாததால் தயாரிப்பாளர்

மேலும்...

 ஆறுதல் கூறுவது எப்படி என விஜயிடம் இருந்து ரஜினி கற்க வேண்டும் : அமீர் விமர்சனம்
பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்வது எப்படி என்பதை விஜயிடம் இருந்து ரஜினிகாந்த் கற்றுக்கொள்ள வேண்டும் என்று இயக்குநர் அமீர் குறிப்பிட்டுள்ளார். கடந்த மாதம் 22ம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது, நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர். மேலும்

மேலும்...

 காலா’ பட திரையரங்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் - முதல் அமைச்சர் குமாரசாமி
கர்நாடகாவில் புதிய மந்திரிகள் பதவி ஏற்புக்கு பின், மந்திரிசபை கூட்டம் முதல்–மந்திரி குமாரசாமி தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின் குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘காலா’ படத்திற்கு கர்நாடகத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதனால் அந்த படத்தை

மேலும்...

 மாணவி பிரதீபா தற்கொலை செய்தது வருத்தம் அளிக்கிறது - நடிகர் ரஜினிகாந்த்
மே 6-ல் நடந்த நீட் தோ்வை நாடு முழுவதும் சுமார் 13 லட்சம் பேர் எழுதினா். தமிழ் மொழியில் சுமார் 24,720 பேர் எழுதி  இருந்தனர். தமிழகத்தில் மொத்தம் 1.7 லட்சம் பேர் நீட் தேர்வு எழுதினர். இதனிடையே தேர்வு முடிவு

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in