வாட்ஸேஎஅப்’பை 16 பில்லியன் டாலர்களுக்கு வாங்கும் ‘ஃபேஸ்புக்’ நிறுவனம்

வாட்ஸேஎஅப்’பை 16 பில்லியன் டாலர்களுக்கு    வாங்கும்  ‘ஃபேஸ்புக்’ நிறுவனம்

காலத்தின் நவீனமயத்துக்கு ஏற்ப இந்த பரந்த உலகின் தகவல் தொடர்பு சாதனங்கள் மிகவும் குறுகிப்போய் கைபேசியின் துணையால் உள்ளங்கையில் உலகம் என்ற அளவுக்கு சுருங்கி விட்டது.

’பேஜர்’, ’செல்போன்’, எதிர் முனையில் இருப்பவரின்  முகத்தை பார்த்தபடியே பேசும் திறன் கொண்ட ‘3-ஜி செல்போன்’ ஆகியவற்றின் மூலம் ‘இ-மெயில்’, ’ஃபேஸ்புக்’, ’ட்விட்டர்’ போன்ற இணையங்களின் வாயிலாக உலகின் கடைக்கோடியில் உள்ள செய்திகளையும் நாம் உடனுக்குடன் அறிந்து கொள்ள முடிகிறது.

இந்த நவீனமயத்தின் அடுத்தகட்ட பரிணாம வளர்ச்சியாக 'வாட்ஸேஎஅப்’ என்ற உபகரனம் இன்றைய இளைஞர்களுக்கு வாய்த்த வரப்பிரசாதமாக கருதப்படுகிறது. இதன் மூலம் புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவற்றை எவ்வித செலவுமின்றி, உலகின் எந்த மூலையில் உள்ள நபருக்கும் அரை நொடிக்குள் அனுப்பி விடலாம் என்பதால், இன்றைய இளைய தலைமுறையினரில் பெரும்பாலானோர் தங்களது செல்போன்களில் 'வாட்ஸேஎஅப்’ உபகரணத்தை பதிவிறக்கம் (டவுன்லோட்) செய்து வைத்துள்ளனர்.

இன்றைய நிலவரப்படி, உலகம் முழுவதும் சுமார் 40 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் இந்த உபகரணத்தை பயன்படுத்தி பலன் அடைந்து வருகின்றனர்.

நாளுக்கு நாள் 'வாட்ஸேஎஅப்’க்கு கூடி வரும் மவுசை கண்டு பலரும் வியந்து வரும் நிலையில், நட்புகளை உருவாக்கிக் கொள்ளவும், புதுப்பித்துக் கொள்ளவும் வாய்த்த புதிய தூதுவனாக கருதப்படும் ‘ஃபேஸ்புக்’ நிறுவனம் 'வாட்ஸேஎஅப்’ நிறுவனத்தை 16 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு (ஒரு பில்லியன் என்பது 100 கோடி) வாங்க முன்வந்துள்ளது.

இந்த தொகையில் 4 பில்லியன் டாலர்களை ரொக்கமாகவும், 12 பில்லியன் டாலர்களை பங்குகளாகவும் வழங்க ‘ஃபேஸ்புக்’ நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் நேற்று கையொப்பமாகியுள்ளதாக தெரிகிறது.
https://goo.gl/sLVRsY






19 May 2017

வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு செயலியில் பின்டு சாட்ஸ் (Pinned Chats) எனும் புதிய வசதி அறிமுகம்

15 May 2017

வாட்ஸ் அப் மூலம் வீடியோ காலிங் செய்வதில் இந்தியா முதலிடம்:

18 Jul 2015

தகவல் தொழில்நுட்பத்தின் அடுத்த புரட்சி: யாஹூ வீடியோ மெசஞ்சர்

25 May 2015

ஐந்து ஆண்டுகளில் சாலையில் ஓடும் கூகுளின் தானியங்கி கார்

26 Jan 2015

கூகுள் கிளாஸை பின்னுக்குத் தள்ளும் சோனியின் ஸ்மார்ட் ஐ கிளாஸ் அறிமுகம்!

16 Oct 2014

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய அறிமுகம் ஐபேட் ஏர் 2 , ஐபேட் மினி 3

24 Jun 2014

ரிவர்ஸ் கியர் கொண்ட ராட்சத 'கன்பஸ் 410' பைக்

08 Apr 2014

புதிய தொழில்நுட்பம் மூலம் 30 வினாடிகளில் சார்ஜ் ஏறும் செல்போன் பேட்டரி

09 Mar 2014

வாட்ஸ்அப் செயல்பாட்டை ஆய்வு செய்ய சிசிஐ முடிவு

24 Feb 2014

மணிக்கு 435 கி.மீ வேகத்தில் பறக்கும் உலகின் அதி வேக கார்