வாஸ்து - கிருஷ்ணனின் போர்க்கள கீதோபதேச படத்தை வீட்டில் வைக்கலாமா?

வாஸ்து - கிருஷ்ணனின் போர்க்கள கீதோபதேச படத்தை வீட்டில் வைக்கலாமா?
வாஸ்து சாஸ்திரப்படி நம் வீட்டில் என்னென்ன படங்கள் பொருட்களை வைத்திருக்க கூடாது என்று நிபுணர்கள் தெளிவாகக் கூறியுள்ளனர்.

மகாபாரத படங்கள்

சிலரது மகாபாரத போர்க்களத்தில் வரும் கிருஷ்ணன், அர்ஜூனன் சேர்ந்திருக்கும் படத்தை வைத்திருப்பார்கள். இது போன்ற எந்த ஒரு நிகழ்ச்சியை குறிக்கும் படங்களை வீட்டில் வைத்திருக்க கூடாதாம். இது குடும்ப ஒற்றுமைக்கு எந்த விதத்திலும் நன்மை தரக்கூடியது அல்ல என்கின்றனர் நிபுணர்கள்.

தாஜ்மகால்

காதலின் பெருமையை உணர்த்துவதற்காக தன் மனைவி மும்தாஜின் நினைவாக ஷாஜகான் கட்டிய கல்லறைதான் தாஜ்மகால். இது இறப்பின் சோகத்தை வெளிப்படுத்தக்கூடியது. எனவே இதுபோன்ற படங்களையோ, உருவங்களையோ வீட்டில் வைத்திருக்க கூடாதாம். இதனால் வீட்டின் நிம்மதி குலைந்து போகுமாம்.

நடராஜர் சிலை

நடராஜரின் நடனம் உலக இயக்கத்திற்காகத்தான் என்று கூறுவார்கள். அனைத்து நடனக்கலைஞர்களின் வீடுகளிலும் நடராஜரின் உருவம் உள்ள சிலையோ, படமோ இருக்கும். ஆனால் ‘தாண்டவ நிருத்ய' எனப்படும் நடனம் ஊழிக்காலத்தை அதாவது அழிவினை உணர்த்தக்கூடியது என்கின்றனர் நிபுணர்கள். எனவே ஒரு காலை தூக்கி நடனமாடியபடி இருக்கும் நடராஜர் உருவத்தை வீட்டிற்கு வைப்பது நல்லதல்ல என்கின்றனர் நிபுணர்கள்.

மூழ்கும் கப்பல்

ஒரு சிலரது வீடுகளில் தண்ணீரில் கப்பல் மூழ்கியபடி இருக்கும் படங்களை வீட்டில் மாட்டி வைத்திருப்பார்கள். ஆனால் அது குடும்ப உறவுகளின் ஒற்றுமைக்கு வேட்டு வைத்து விடுமாம். எனவே இதுபோன்ற படங்கள் இருந்தால் உடனடியாக அதனை வெளியேற்றுங்கள் என்கின்றனர் நிபுணர்கள்.

நீர் வீழ்ச்சி

வீட்டிற்குள் அழகிற்காக நீர்வீழ்ச்சி போல் செட் செய்திருப்பார்கள். அல்லது அதுபோன்ற இயற்கை காட்சிகள் நிரம்பிய சுவர்படங்களை ஒட்டி வைத்திருப்பார்கள். ஆனால் அது வீட்டில் உள்ள செல்வம், வருமானத்தை வழிந்தோடச் செய்து விடுமாம். எனவே இதுபோன்ற படங்களை அழகிற்காக வைத்திருக்க வேண்டாம் என்கின்றனர் நிபுணர்கள்.

வன விலங்குகள்

சிங்கம், புலி, போன்ற வன்முறை நிரம்பிய காட்டு விலங்குகளின் படங்களை ஒரு சிலர் வீடுகளில் மாட்டி வைத்திருப்பார்கள். இது நல்லதல்ல என்கின்றனர் நிபுணர்கள். அந்த மிருகங்களின் குணங்கள் வீட்டில் உள்ள நம் குழந்தைகளுக்கு தொற்றிக்கொள்ளும் என்கின்றனர். எனவே வன விலங்குகளின் படங்களை கண்டிப்பாக மாட்டி வைக்கக் கூடாதாம்.

நம் வீட்டில் எப்பொழுதுமே எதிர்மறை எண்ணங்களை வெளிப்படுத்தக்கூடிய பொருட்களை வைத்திருக்கக் கூடாது. நேர்மறை எண்ணங்களை வெளிப்படுத்தக்கூடிய பொருட்களையோ, படங்களையோதான் மாட்டி வைக்க வேண்டும். அப்பொழுதுதான் குடும்பமானது ஒற்றுமையோடு மகிழ்ச்சிகரமாக அமையும் என்கின்றனர் நிபுணர்கள்.
https://goo.gl/4KqFH6


17 Jun 2014

அப்பார்ட்மெண்ட் கட்டுவதற்கான வாஸ்து

17 Jun 2014

மனை அடி சாஸ்திரம்

17 Jun 2014

கட்டிடவேலையில் கவனிக்க வேண்டிய வாஸ்து

05 Nov 2013

சுப காரியங்களுக்கு ஏன் வாழை மரம் கட்டுகிறோம்

05 Nov 2013

நிம்மதியான வாழ்வு நிலைத்திட

19 Aug 2013

மனையை தேர்வு செய்வது எப்படி வாஸ்து

19 Aug 2013

அலுவலக அறை வாஸ்து

25 Jul 2013

கடைகள் மற்றும் அலுவலகங்களுக்கு வாஸ்து

25 Jul 2013

கதவு, ஜன்னல் வைப்பதற்கான வாஸ்து

25 Jul 2013

வாஸ்து அமைப்பதற்கான சில முக்கிய குறிப்புகள்