விபத்துக்குள்ளான பாலஸ்தீன பெண்ணின் குழந்தைக்கு பாலூட்டி நெகிழ வைத்த யூத பெண்

விபத்துக்குள்ளான பாலஸ்தீன பெண்ணின் குழந்தைக்கு பாலூட்டி நெகிழ வைத்த யூத பெண்
விபத்துக்குள்ளான பாலஸ்தீன பெண்ணின் கைக்குழந்தைக்கு யூத பெண் ஒருவர் பாலூட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கைக்குழந்தையுடன் உள்ள அந்த பெண்ணுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.  

இஸ்ரேல் நாட்டில் உள்ள இன் கரீம் என்னும் பகுதியில் பாலஸ்தீன பெண் ஒருவர் கணவர் மற்றும் கைக்குழந்தையுடன் சென்ற கார் விபத்துக்குள்ளானது.


விபத்தில் அந்த பெண் படுகாயங்களுடன் உயிர் தப்பினார். அவரின் கணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர்களின் பச்சிளங் குழந்தை சிறிய காயங்களுடன் உயிர்தப்பியது.

படுகாயமடைந்த பாலஸ்தீன  பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரின் குழந்தையை அந்த மருத்துவமனையில் பணிபுரியும் நர்ஸ் உலா என்பவரிடம்  ஒப்படைத்துள்ளனர். இதனிடையே பசி தாங்க முடியாமல் அக்குழந்தை அழத் தொடங்கிவிட்டது.

குழந்தையின் தாய் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்ததால் அவரால் தாய்பால் கொடுக்க முடியவில்லை. இதனால் பசியில் துடிக்கும் குழந்தைக்கு நர்ஸ் பாட்டிலில் பால் கொடுக்க முயன்றுள்ளார்.

ஆனால் அதை குழந்தை குடிக்க மறுத்துவிட்டதால் அவரே அந்த குழந்தைக்கு பாலூட்டியுள்ளார். நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் இந்த காட்சியைப் பார்த்த குழந்தையின் உறவினர்கள் கண்கலங்கி நர்ஸ் உலாவுக்கு நன்றி தெரிவித்தனர்.

இஸ்ரேல் யூத இனத்தவரான உலா, பாலஸ்தீன பெண்ணின் குழந்தைக்கு பாலூட்டிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. அவரின் புகைப்படத்தைப் பகிர்ந்து வலைதளவாசிகள் பாராட்டி வருகின்றனர். 
https://goo.gl/9HoF6r


03 Aug 2018

1 டிரில்லியன் அமெரிக்க டாலர் வியாபார உலகில் புதிய உச்சம் தொட்டு சாதித்த ஆப்பிள்

11 Jul 2018

மருந்தில் வி‌ஷம் கலந்து 20 நோயாளிகளை கொன்ற செவிலியர்.

10 Jul 2018

தாய்லாந்து குகையிலிருந்து 13 பேரும் பத்திரமாக மீட்பு

06 Jul 2018

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசிய இலங்கை பெண் அமைச்சர் ராஜினாமா

02 Jul 2018

குகைக்குள் சிக்கிய கால்பந்து அணி சிறுவர்கள் 9 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு

24 Jun 2018

சவுதி அரேபியாவில் கார் ஓட்ட பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியது

19 Jun 2018

காரில் மேக்-அப் போட்டுக் கொண்டே சென்ற பெண்ணுக்கு நடந்த விபரிதம்

18 Jun 2018

டொனால்டு டிரம்பின் திட்டத்திற்கு அவருடைய மனைவி மெலானியா எதிர்ப்பு

29 May 2018

முன்னாள் காதலர்களுக்கு ஆந்தராக்ஸ் பவுடர் மிரட்டல் விடுத்த பெண்ணுக்கு 2 ஆண்டு தண்டனை

20 Apr 2018

டைம் இதழ் வெளியிட்ட செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலில் வீராட் கோலி - தீபிகா படுகோனே