விரதம் என்றால் என்ன?விரதம் இருப்பதற்கான காரணம் என்ன?

விரதம் என்றால் என்ன?விரதம் இருப்பதற்கான காரணம் என்ன?
விரதம் என்றால் என்ன?

ஒவ்வொரு மாதமும் நம் இந்து சமயத்தில் ஏதாவது ஒரு விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.
விரதம் என்றால் நாம் நம் கடமைகளைக் குறைத்துக் கொண்டு, இன்றைக்கு இதைச் சாப்பிட மாட்டேன் – அதைச் சாப்பிட மாட்டேன் என்று கூறி மற்றவர்களை கஷ்டப்படுத்திக் கொண்டு, நமது ஆத்ம பலத்தை வீணாக்கிக் கொண்டு அவஸ்தைப்படுவது விரதம் இல்லை.

இந்திரியங்களை அடக்குவதே விரதத்தின் சிறப்பு. சோம்பேறியாக இருப்பவன் சதா படுத்துக் கொண்டே இருந்துவிட்டு நான் விரதம் இருக்கிறேன் என்று சொல்வதும் விரதம் இல்லை.
சிலர் முன்கோபிகளாக இருப்பார்கள். விரதம் இருக்கும் காலங்களில் “இங்கே ஒருத்தன் விரதம் இருக்கிறேன். கவனித்துப் பால், பழம் கொடுக்க யாருமில்லை” என்று கத்துவார்கள்.


கோபப்படுவதால் நம் ரத்தம் கொதிப்படைகிறது. அதை அடக்கவே நாம் விரதம் இருக்கிறோம்.
கோபப்பட்டு கத்திவிட்டு பால், பழம் அருந்துவது விரதம் இல்லை. அளவில்லாமல் எப்பொழுது வேண்டுமானாலும் உண்ணலாம். என்று உண்ணுபவர்களின் நலங்களைக் கருதியே உபவாசங்களும், விரதங்களும் ஏற்படுத்தப்பட்டன.

நாம் உண்ணும் உணவு நம் உடலுக்குச் சக்தியைக் கொடுக்கிறது. மனத்தையும் பண்படுத்தும் வகையில் உண்ண வேண்டும் என்றே நம் சாஸ்திரங்களும், மருத்துவமும் விஞ்ஞான சான்றுகளும் எடுத்துரைக்கின்றன.

நம்முடைய குண விஷேங்களை ரஜஸ்,ஸத்வம்,தமஸ் என்று மூன்று விதமாக பிரித்துப் சொல்லப்பட்டிருக்கிறது.


அதிகமான கோபத்தை உண்டு பண்ணும் குணம் ரஜோ குணம். சோம்பேறித்தனத்தை ஊக்குவிக்கும் குணம் தமோ குணம். இவை இரண்டையும் ஊக்குவிக்கும் ஆகாரங்களையும் நாம் ஒதுக்க வேண்டும்.


விரதம் என்று சொல்லப்படும் காலங்களில் சில உணவு வகைகளை நாம் ஒதுக்கிவிட வேண்டும். கொழுப்புச் சத்துக்கள் நிறைந்த மாமிசம், வெங்காயம், பூண்டு, மசாலா காரம் நிறைந்துள்ள உணவு வகைகளை நாம் விலக்கிவிட வேண்டும். இவை ரஜோ குணத்தைத் தூண்டி விடும்.
புளித்துப் போன நாட்பட்ட உணவு வகைகள் தமோ குணத்தையும் தூண்டுகின்றன.


மூன்றாவதாகச் சொல்லப்படுவது சாத்வீக உணவு வகைகள் ஆகும். சாத்வீக உணவு வகைகளுக்கு மாமிச கலப்பே ஆகாது. இந்த உணவு வகைகளை உட்கொள்பவர்களுக்கு எந்தெந்த குணங்கள் இருக்கும்?

ரஜோ, தமோ குணத்தையும் தூண்டாத உணவுகள் சாத்வீக உணவுகள் தான். வேகத்திற்கு பதிலாக விவேகத்தையும், கோப குணத்திற்கு பதிலாக சிந்தனையும் சோம்பலுக்குப் பதிலாக சுறுசுறுப்பான செயலாற்றும் திறனையும் கொடுக்கும் என்பது நிச்சயம்.


https://goo.gl/UWUeKd


21 Aug 2014

பணிவோம், உயர்வோம்!

19 Jun 2014

மனஅழுத்தத்தை விரட்டி எப்போதும் சந்தோஷமாக இருக்க சில டிப்ஸ்

23 Mar 2014

திருமணத்திற்கு பின் பெண்களின் உடல் குண்டாவது ஏன்

15 Mar 2014

முதுமை பற்றிய பொன் மொழிகள்

09 Mar 2014

சுவாமி விவேகானந்தர் பொன் மொழிகள்

09 Mar 2014

பொன் மொழிகள்

23 Jan 2014

விரதம் என்றால் என்ன?விரதம் இருப்பதற்கான காரணம் என்ன?

15 Dec 2013

முதுமையின் பொன் மொழிகள்

19 Nov 2013

யோகாசனம்( yogasana )

29 Oct 2013

தீபாவளி --- சிந்தனைக்குச் சில வினாக்கள்!!