விராட்கோலி-ரகானே அதிரடி-வங்கதேசத்தை எளிதில் வென்றது இந்தியா

விராட்கோலி-ரகானே அதிரடி-வங்கதேசத்தை எளிதில் வென்றது இந்தியா
ஆசிய கோப்பை லீக் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக சதம் அடித்து தனி ஆளாக போராடி வெற்றி தேடித்தந்தார் கேப்டன் விராத் கோஹ்லி. ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் வங்கதேசத்தில் நடக்கிறது. பதுல்லாவில் நேற்று நடந்த லீக் போட்டியில் இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதின.

 டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராத் கோஹ்லி, பந்துவீச்சை தேர்வு செய்தார். ஆரம்பத்தில் புவனேஸ் வரும், முகமது ஷமியும் ஓரளவுக்கு நன்றாக பந்து வீசினர். சம்சுர் ரஹ்மானை (7) முகமது ஷமியும், மொமினுல் ஹக்கை (23) அஸ்வினும் வெளியேற்றினர்.


ஆனால், 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் முஷ்பிகுர் ரஹ்மானும், அனாமுல் ஹக்கும் அபாரமாக விளையாடினர். இந்த ஜோடிக்கு இந்திய பந்துவீச்சாளர்களால் எந்த நெருக்கடியும் தர முடியவில்லை. இந்திய பந்துவீச்சு படுமோசமாக இருந்ததால், இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 133 ரன்களை சேர்த்தது. அனாமுல் ஹக் (77) ஆரோன் பந்தில் வெளியேறினார்.

மறுமுனையில் அட்டகாசமாக ஆடிய கேப்டன் முஷ்பிகுர் ரஹ்மான் ஒருநாள் அரங்கில் தனது 2வது சதத்தை பூர்த்தி செய்தார். அதிரடியாக ஆடிய இவர் 113 பந்தில் 117 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் 50 ஓவரில் வங்கதேச அணி 7 விக்கெட் இழப்புக்கு 279 ரன் குவித்தது.


 இந்திய தரப்பில் முகமது ஷமி 10 ஓவரில் 50 ரன் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார். 280 ரன் என்ற கடின இலக்கை சேஸ் செய்த இந்திய அணி பேட்டிங்கிலும் சொதப்பியது. துவக்க ஆட்டக்காரர்களான தவானும், ரோகித் சர்மாவும் ரன் எடுக்கவே திணறினர். தவான் 28, சர்மா 21 ரன்னில் வெளியேறினர்.

இக்கட்டான நிலையில் களமிறங்கிய கேப்டன் விராத் கோஹ்லி, ரகானேவுடன் இணைந்து பொறுப்புடன் ஆடினர். தனி ஆளாக போராடிய கோஹ்லி, வங்கதேசத்தின் பந்துவீச்சை துல்லியமாக கணித்து பவுண்டரி, சிக்சர் விளாசி சதம் அடித்து அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றார்.

ஒருநாள் போட்டியில் அவர் அடித்த 19வது சதம் இது. மறுமுனையில் ரகானேவும் அரைசதத்தை கடந்தார். இந்த ஜோடி 213 ரன் சேர்த்த போது கோஹ்லி 136 ரன்னில் வெளியேறினார்.  ரகானே 73 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்திய அணி 49 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 280 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
https://goo.gl/uKvGcL


15 May 2017

IPL கிரிக்கெட்டில் புனே அணிக்கு 9–வது வெற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது

14 May 2017

IPL கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது, ஐதராபாத் அணி

09 May 2017

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் ‌ஷரபோவா தோல்வி

09 May 2017

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி

17 Jan 2016

3-வது ஒருநாள் கிரிக்கெட்: விராட் கோலி சதம் வீண், இந்தியா மீண்டும் தோல்வி -ஆஸ்திரேலியா வெற்றி

12 Jul 2015

ஜிம்பாப்வேயை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

01 Jun 2015

கெய்ல் அதிரடி சதம் வீண்

28 May 2015

நீட்டா அம்பானி விருந்தில் திளைத்த மும்பை அணி வீரர்கள்

25 May 2015

இந்தியா-தென்னாப்பிரிக்கா மோதல் தயார்

25 May 2015

ஷரபோவா பிரெஞ்ச் ஓபன் தொடரை கைப்பற்றினார்