விற்பணைக்கு வந்தது எல்.ஜி பி 715

விற்பணைக்கு வந்தது எல்.ஜி பி 715
எல்.ஜி. நிறுவனம், சென்ற பிப்ரவரியில் அறிவித்த தன் 3ஜி மொபைல் போனை, தற்போது விற்பனைக்கு அறிமுகப் படுத்தியுள்ளது. பி 715 என அழைக்கப்படும் இந்த போனின் அதிக பட்ச சில்லரை விலை ரூ. 14,999. நான்கு அலைவரிசைகளில் இயங்கும் இந்த போனில் இரண்டு ஜி.எஸ்.எம். சிம்களைப் பயன்படுத்தலாம்.

இதன் பரிமாணம் 122.2 x 66.6x9.7 மிமீ. எடை 115.5 கிராம். பார் டைப் வடிவில் அமைந்துள்ள இதில், எல்.சி.டி. கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் தரப்பட்டுள்ளது. இதன் திரை 4.3 அங்குல அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மல்ட்டி டச் செயல்பாட்டினை ஏற்றுக் கொள்கிறது. லவுட் ஸ்பீக்கர், 3.5 மிமீ ஆடியோ ஜாக், 32 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்த மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட், 768 எம்பி ராம், 4 ஜிபி ஸ்டோரேஜ் ஆகியன இதன் சிறப்பம்சங்களாகும்.

நெட்வொர்க் இணைப்பிற்கு, ஜி.பி.ஆர்.எஸ்., எட்ஜ், 3ஜி, வை-பி, A2DP இணைந்த புளுடூத் ஆகிய தொழில் நுட்பங்கள் செயல்படுகின்றன. ஆட்டோ போகஸ் மற்றும் எல்.இ.டி. பிளாஷ் கொண்ட 8 எம்.பி.கேமரா இயங்குகிறது. வீடியோ பதிவு நல்ல வேகத்தில் கிடைக்கிறது. டூயல் கோர் கோர்டெக்ஸ் ஏ 5 சிப் 1 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்குகிறது.

குவால்காம் ஸ்நாப் ட்ரேகன் சிப்செட் தரப்பட்டுள்ளது. எப்.எம். ரேடியோ, அக்ஸிலரோமீட்டர் சென்சார் உள்ளன. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 4.1.2. ஜெல்லி பீன் ஆகும். எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., புஷ்மெயில், இன்ஸ்டன்ட் மெசஞ்சர் வசதிகள் கிடைக்கின்றன. எம்பி3 பிளேயர், டாகுமெண்ட் எடிட்டர், ஜி.பி.எஸ். ஆகியனவும் உள்ளன.

ஆர்கனைசர், கூகுள் சர்ச், மேப்ஸ், ஜிமெயில், யு ட்யூப், கூகுள் டாக், வாய்ஸ் மெமோ, டயல் ஆகிய விட்ஜெட்டுகள் தரப்பட்டுள்ளன. இதன் லித்தியம் அயன் பேட்டரி 2460mAh திறன் கொண்டதாக உள்ளது.
https://goo.gl/cbnez1


19 May 2017

வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு செயலியில் பின்டு சாட்ஸ் (Pinned Chats) எனும் புதிய வசதி அறிமுகம்

15 May 2017

வாட்ஸ் அப் மூலம் வீடியோ காலிங் செய்வதில் இந்தியா முதலிடம்:

18 Jul 2015

தகவல் தொழில்நுட்பத்தின் அடுத்த புரட்சி: யாஹூ வீடியோ மெசஞ்சர்

25 May 2015

ஐந்து ஆண்டுகளில் சாலையில் ஓடும் கூகுளின் தானியங்கி கார்

26 Jan 2015

கூகுள் கிளாஸை பின்னுக்குத் தள்ளும் சோனியின் ஸ்மார்ட் ஐ கிளாஸ் அறிமுகம்!

16 Oct 2014

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய அறிமுகம் ஐபேட் ஏர் 2 , ஐபேட் மினி 3

24 Jun 2014

ரிவர்ஸ் கியர் கொண்ட ராட்சத 'கன்பஸ் 410' பைக்

08 Apr 2014

புதிய தொழில்நுட்பம் மூலம் 30 வினாடிகளில் சார்ஜ் ஏறும் செல்போன் பேட்டரி

09 Mar 2014

வாட்ஸ்அப் செயல்பாட்டை ஆய்வு செய்ய சிசிஐ முடிவு

24 Feb 2014

மணிக்கு 435 கி.மீ வேகத்தில் பறக்கும் உலகின் அதி வேக கார்