tamilkurinji logo


 

விவாகரத்தான மனைவிக்கு மாதம் ரூ.4 லட்சம் தர வேண்டும். நீதிமன்ற உத்தரவு,news , indianews , tamilnews, indianews, tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

news,,,indianews,,,tamilnews,,indianews,,,tamilseithigal,,indiaseithigal,,tamilcinemanews,,,seithigal,செய்திகள்,,தமிழ்செய்திகள்,,தமிழ்




செய்திகள் >>> இந்தியா

விவாகரத்தான மனைவிக்கு மாதம் ரூ.4 லட்சம் தர வேண்டும். நீதிமன்ற உத்தரவு

First Published : Monday , 28th August 2017 08:04:49 PM
Last Updated : Monday , 28th August 2017 08:04:49 PM


விவாகரத்தான மனைவிக்கு மாதம் ரூ.4 லட்சம் தர வேண்டும். நீதிமன்ற உத்தரவு,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

டெல்லியைச் சேர்ந்த பணக்காரருக்கு அவர் விவாகரத்து செய்த மனைவிக்கு மாதம்தோறும் ரூ.4 லட்சம் தர வேண்டும் என்று டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர் தன்னை வீட்டில் இருந்து வெளியேற்றிவிட்டதாகக் கூறி 2008-ல் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்தப் பெண்ணுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இவ்வழக்கு நிலுவையில் இருந்தபோது விவாகரத்து நடந்துவிட்டதாக 2011-ல் அந்த பெண்ணின் கணவர் மனு தாக்கல் செய்தார்.


இதையடுத்து, தனக்கு பராமரிப்பு தொகை கோரி பெண் தாக்கல் செய்த மனுவை விசாரித்த டெல்லி பெருநகர நீதிமன்றம் அவருக்கு மாதம் ரூ.1.25 லட்சம் பராமரிப்பு தொகையாக வழங்க, கணவருக்கு 2013 பிப்ரவரியில் உத்தரவிட்டது. இதை எதிர்த்த மனு மீது மாதம் ரூ.75 ஆயிரம் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர், உச்ச நீதிமன்றத்துக்கு இவ்வழக்கு சென்றபோது விசாரணை நீதிமன்றம் விசாரிக்க உத்தரவிடப்பட்டது.

இவ்வழக்கை டெல்லியில் உள்ள விசாரணை நீதிமன்றம் விசாரித்தது. பெண்ணின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், பெண்ணின் கணவர் பெரும் பணக்காரர் என்றும் அவரது குடும்ப வியாபாரத்தின் மதிப்பு ரூ.921.28 கோடி என்றும் தெரிவிக்கப்பட்டது.


ஆனால், பல நிறுவனங்களில் இயக்குநராக இருந்தாலும் ஒரு நிறுவனத்திடம் இருந்து ரூ.90 ஆயிரம் மட்டுமே மாத சம்பளம் பெறுவதாக கணவர் தரப்பில் கூறப்பட்டது.

இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி நரோத்தம் கவுசல் வழங்கிய தீர்ப்பில், ‘‘விவாகரத்து செய்த கணவர் இந்தியாவின் பெரும் பணக்காரர் என்றும் அவரது நிறுவனங்களின் சொத்து மதிப்பு ரூ.921 கோடி என்றும் வணிகப் பத்திரிகை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.


எனவே, மனுதாரருக்கும் அவரது பெண் குழந்தைக்குமான பராமரிப்பு செலவுக்காக மாதம் ரூ.4 லட்சத்தை அவரது முன்னாள் கணவர் தர வேண்டும். மேலும், கணவரின் வருமானம் இரண்டு நிதி ஆண்டுகளில் இரு மடங்காக அதிகரித்துள்ளதால், பராமரிப்பு தொகையாக அளிக்கும் பணத்தில் ஆண்டுக்கு 15 சதவீதம் கூடுதலாக அளிக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டார்.

விவாகரத்தான மனைவிக்கு மாதம் ரூ.4 லட்சம் தர வேண்டும். நீதிமன்ற உத்தரவு,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

விவாகரத்தான மனைவிக்கு மாதம் ரூ.4 லட்சம் தர வேண்டும். நீதிமன்ற உத்தரவு,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

விவாகரத்தான மனைவிக்கு மாதம் ரூ.4 லட்சம் தர வேண்டும். நீதிமன்ற உத்தரவு,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 சாலை விபத்தில் உயிருக்கு போராடியவர்களுடன் செல்பி எடுத்த வாலிபர்
ராஜஸ்தான் மாநிலம், பார்மேர் மாவட்டம் சோடான் எனும் இடத்தில் 20 முதல் 30 வயது மதிக்கத்தக்க 3 பேர் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது எதிரே வந்த பள்ளி பேருந்து மோதி இன்று விபத்துக்குள்ளானது. இதில், இருசக்கர வாகனத்தில் பயணித்த மூன்று

மேலும்...

 கல்வி கட்டணம் செலுத்தாத 16 குழந்தைகள் பாதாள அறையில் சிறைவைப்பு : டெல்லியில் கொடூரம்
மத்திய டெல்லியில் கவுகாசி என்ற இடத்தில் தனியார் பள்ளிக்கூடம் ஒன்று உள்ளது.இங்கு யூ.கே.ஜி. படிக்கும் மாணவிகள் பலர் ஜூன் மாதத்துக்கான கல்வி கட்டணம் செலுத்தவில்லை. இதனால் கோபம் அடைந்த பள்ளி நிர்வாகத்தினர் கட்டணம் செலுத்தாத 16 மாணவிகளை மற்ற மாணவிகளிடம் இருந்து

மேலும்...

 பெண்களின் பங்களிப்பு இல்லாமல் வேளாண், பால்வளத் துறையில் உற்பத்தி சாத்தியமற்றது: பிரதமர் மோடி
அனைத்துத் துறைகளிலும் அடிமட்ட அளவில் பெண்களின் பங்களிப்பு உள்ளது என பிரதமர் மோடி கூறினார்.நரேந்திர மோடி (NaMo) வீடியோ கான்பரன்சிங் மூலம் நாடு முழுவதும் உள்ள சுய உதவி குழுப்  பெண்களுடன் மோடி பேசினார்.  அப்போது அவர் கூறியதாவது;-இன்று எந்தத் துறையை

மேலும்...

 மனைவியை பலாத்காரம் செய்ய எம்எல்வுக்கு உதவிய கணவன்
எம்எல்ஏ தன்னை 2 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அதற்கு தனது கணவரே உதவி செய்ததாகவும் போலீசில் மனைவி புகார் கொடுத்துள்ளார். அசாமின் அலகாபூர் தொகுதி எம்எல்ஏ நிஜாம் உத்தின் சவுத்ரி. இவர் மீது கடந்த 6ம் தேதி இளம்பெண் ஒருவர்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in