tamilkurinji logo
 

வீட்டில் தனியாக இருந்த கணவன்-மனைவி படுகொலை,tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news


செய்திகள் >>> தமிழகம்

வீட்டில் தனியாக இருந்த கணவன்-மனைவி படுகொலை

First Published : Friday , 29th December 2017 08:05:59 PM
Last Updated : Friday , 29th December 2017 08:05:59 PM


வீட்டில் தனியாக இருந்த  கணவன்-மனைவி படுகொலை,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

திருப்பூர் அவினாசி பாளையம் அருகே உள்ள நாச்சிபாளையம் நத்தகாட்டுதோட்டத்தை சேர்ந்தவர் முத்துக்குமாரசாமி (வயது 70). இவரது மனைவி தெய்வாத்தாள் (வயது 65). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

இவர்கள் தங்களுக்கு சொந்தமான 7 ஏக்கர் தோட்டத்தில் விவசாயம் செய்து கொண்டு தோட்டத்தில் உள்ள வீட்டிலேயே தங்கினர். நேற்று இரவும் கணவன்- மனைவி 2 பேரும் வழக்கம் போல் தூங்கினர்.

நள்ளிரவு 12 மணியளவில் இவர்களது வீட்டு கதவு திறந்தநிலையில் மின்விளக்குகள் எரிந்து கொண்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் அவர்களது வீட்டிற்கு சென்று பார்த்தனர்.

அப்போது தெய்வாத்தாள் வீட்டு வாசலிலும், முத்துக்குமாரசாமி வீட்டுக்குள்ளும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர்.

அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இதுகுறித்து அவினாசிபாளையம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உமா மற்றும் போலீசார் விரைந்து வந்தனர்.

அப்போது கணவன்-மனைவி 2 பேரும் உருட்டுக்கட்டையால் தாக்கி அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

மேலும் வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் வீட்டில் இருந்த பீரோக்கள் திறக்கப்படாத நிலையில் இருந்தது. அதோடு தெய்வாத்தாள் அணிந்திருந்த நகைகளும் அப்படியே இருந்தது.

எனவே நகை-பணத்துக்காக இந்த கொலை நடக்கவில்லை என்பது தெரியவந்தது. மேலும் இவர்களுக்கு சொந்தமான 7 ஏக்கர் விவசாய நிலத்தை அபகரிக்க யாராவது கூலிப்படையை ஏவி இவர்களை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் விரைந்து வந்து கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் துப்பறியும் மோப்பநாயும் கொண்டு வரப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.

பின்னர் அவர்கள் 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


வீட்டில் தனியாக இருந்த  கணவன்-மனைவி படுகொலை,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
வீட்டில் தனியாக இருந்த  கணவன்-மனைவி படுகொலை,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
வீட்டில் தனியாக இருந்த  கணவன்-மனைவி படுகொலை,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 ராணுவ மரியாதையுடன் தமிழக வீரர் சுரேஷின் உடல் சொந்த ஊரில் அடக்கம்
ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் சுரேஷ் உடல் அரசு மரியாதையுடன் இன்று சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.ஜம்மு காஷ்மீரின் ஆர்.எஸ்.புரா பகுதியில் எல்லைக்கு அப்பால் இருந்து பாகிஸ்தான் படையினர் நடத்திய தாக்குதலில்

மேலும்...

 மறைந்த பத்திரிகையாளர் ஞாநி உடல் மருத்துவக் கல்லூரியிடம் தானமாக ஒப்படைப்பு
மறைந்த பத்திகையாளர், அரசியல் விமர்சகர் ஞாநியின் உடல் அவரது விருப்பத்தின்படி சென்னை மருத்துவ கல்லூரிக்கு தானமாக வழங்க எடுத்து செல்லப்பட்டது.பத்திரிகையாளரும் எழுத்தாளரும் அரசியல் விமர்சகருமான ஞாநி சங்கரன் இன்று (ஜனவரி 15) அதிகாலை காலமானார். அவருக்கு வயது 64.கடந்த சில காலமாகவே

மேலும்...

 குட்கா வழக்கில் ஜெயலலிதாவுக்கு டிஜிபி எழுதிய ரகசியக் கடிதம்: போயஸ் கார்டனில் சிக்கியதாக தகவல்
குட்கா வழக்கில் புதிய திருப்பமாக அப்போதைய டிஜிபி, முதல்வர் ஜெயலலிதாவுக்கு எழுதிய டாப் சீக்ரெட் கடிதம் சசிகலா அறையிலிருந்து கைப்பற்றியதாக உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.தமிழகத்தை உலுக்கிய குட்கா வழக்கில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர் உள்ளிட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் மீது குற்றம்

மேலும்...

 மகள் கண்முன்னே பயங்கரம் தந்தை சரமாரியாக வெட்டி படுகொலை
மகளை கல்லூரியில் விட சென்ற ரியல் எஸ்டேட் அதிபரை ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் 4 ேபர் வழிமறித்து பொதுமக்கள் முன்னிலையில் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். இந்த சம்பவம் மேற்கு  மாம்பலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மேற்கு

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




















மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in