வெஸ்ட்இண்டீஸ் டெஸ்ட்: வங்காளதேசம் திணறல்

வெஸ்ட்இண்டீஸ் டெஸ்ட்: வங்காளதேசம் திணறல்
வெஸ்ட்இண்டீஸ் – வங்காளதேச அணிகள் மோதும் 2–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செயிண்ட் லுசிகாவில் நடைபெற்று வருகிறது.

முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் முதல்நாள் ஆட்டத்தின் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 246 ரன் எடுத்து இருந்தது. பிராவோ 44 ரன்னும், சந்தர்பால் 34 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

நேற்று 2–வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து விளையாடிய வெஸ்ட்இண்டீஸ் 380 ரன் குவித்து ‘ஆல் அவுட்’ ஆனது. சந்தர்பால் 84 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். பிராத்வெயிட் 63 ரன்னும், ஜான்சன் 66 ரன்னும் எடுத்தனர்.

அல்அமின் ஹூனசன், 3 விக்கெட்டும், சைபுல் இஸ்லாம், தர்ஜில் இஸ்லாம், ரூபில் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் விளையாடிய வங்காளதேசம் அணி கேமர் ரோச்சின் அபாரமான பந்து வீச்சால் திணறியது. நேற்றைய ஆட்ட நேர முதலில் அந்த அணி 7 விக்கெட் இழப்புக்கு 104 ரன் எடுத்து பரிதாப நிலையில் இருந்தது.

தமிம்இக்பால் அதிகபட்சமாக 48 ரன் எடுத்தார். கேமர்ரோச் 33 ரன் கொடுத்து 5 விக்கெட் சாய்த்தார். டெய்லருக்கு 2 விக்கெட் கிடைத்தது.
https://goo.gl/Cxf5dh


15 May 2017

IPL கிரிக்கெட்டில் புனே அணிக்கு 9–வது வெற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது

14 May 2017

IPL கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது, ஐதராபாத் அணி

09 May 2017

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் ‌ஷரபோவா தோல்வி

09 May 2017

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி

17 Jan 2016

3-வது ஒருநாள் கிரிக்கெட்: விராட் கோலி சதம் வீண், இந்தியா மீண்டும் தோல்வி -ஆஸ்திரேலியா வெற்றி

12 Jul 2015

ஜிம்பாப்வேயை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

01 Jun 2015

கெய்ல் அதிரடி சதம் வீண்

28 May 2015

நீட்டா அம்பானி விருந்தில் திளைத்த மும்பை அணி வீரர்கள்

25 May 2015

இந்தியா-தென்னாப்பிரிக்கா மோதல் தயார்

25 May 2015

ஷரபோவா பிரெஞ்ச் ஓபன் தொடரை கைப்பற்றினார்