tamilkurinji logo


 

வெஸ்ட் இண்டீசின் அதிரடி ஆட்டத்துக்கு பதிலடி கொடுக்க முடியாமல் வீழ்ந்தது ஜிம்பாப்வே,ta mil news cricket newsWest Indies win by 73 runs (D/L Method)

ta,mil,news,cricket,newsWest,Indies,win,by,73,runs,(D/L,Method)




செய்திகள் >>> விளையாட்டு

வெஸ்ட் இண்டீசின் அதிரடி ஆட்டத்துக்கு பதிலடி கொடுக்க முடியாமல் வீழ்ந்தது ஜிம்பாப்வே

First Published : Tuesday , 24th February 2015 07:09:57 AM
Last Updated : Tuesday , 24th February 2015 07:09:57 AM


வெஸ்ட் இண்டீசின் அதிரடி ஆட்டத்துக்கு பதிலடி கொடுக்க முடியாமல் வீழ்ந்தது ஜிம்பாப்வே,ta mil news cricket newsWest Indies win by 73 runs (D/L Method)

உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தியது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற  15-வது லீக் அட்டத்தில் ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ள வெஸ்ட் இண்டீஸ்-ஜிம்பாப்வே அணிகள்  மோதின. ஆஸ்திரேலியாவில் உள்ள கான்பெர்ராவில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ்வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்து  விளையாடியது.

இதில் தொடக்க வீரர் ஸ்மித் ரன் எதுவும் இன்றி வெளியேறினாலும் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் ருத்ர தாண்டவம் ஆடினார். 147 பந்துகளில் 215 ரன்களை குவித்த அவர் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். அவருக்கு உறுதுணையாக ஆடிய சாமுவேல்ஸ் 133 ரன்கள் குவித்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்களில் 372 ரன்கள் எடுத்து இருந்தது.

இதையடுத்து 373 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை துரத்திய ஜிம்பாவே அணி தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து கொண்டிருந்தது. இறுதியில் அந்த அணி 44.3 ஓவர்களில் 289 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் 73 (D/L) ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.  ஜிம்பாப்வே அணி தரப்பில் அதிகபட்சமாக வில்லியம்ஸ் 76 ரன்களும் எர்வின் 52 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.  வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் டெய்லர், ஹோல்டர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கெயில் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
இப்போட்டியில் ஆட்ட நாயகன் விருதை கிறிஸ் கெயில் பெற்றார்.

வெஸ்ட் இண்டீசின் அதிரடி ஆட்டத்துக்கு பதிலடி கொடுக்க முடியாமல் வீழ்ந்தது ஜிம்பாப்வே,ta mil news cricket newsWest Indies win by 73 runs (D/L Method) வெஸ்ட் இண்டீசின் அதிரடி ஆட்டத்துக்கு பதிலடி கொடுக்க முடியாமல் வீழ்ந்தது ஜிம்பாப்வே,ta mil news cricket newsWest Indies win by 73 runs (D/L Method) வெஸ்ட் இண்டீசின் அதிரடி ஆட்டத்துக்கு பதிலடி கொடுக்க முடியாமல் வீழ்ந்தது ஜிம்பாப்வே,ta mil news cricket newsWest Indies win by 73 runs (D/L Method)
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 IPL கிரிக்கெட்டில் புனே அணிக்கு 9–வது வெற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது
IPL 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் புனே அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பை தோற்கடித்து 9–வது வெற்றியை பெற்றதுடன், அடுத்த சுற்றுக்கும் முன்னேறியது. 10–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த ஏப்ரல்

மேலும்...

 3-வது ஒருநாள் கிரிக்கெட்: விராட் கோலி சதம் வீண், இந்தியா மீண்டும் தோல்வி -ஆஸ்திரேலியா வெற்றி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியிலும் இந்தியா தோல்வியடைந்தது. மேலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரையும் இழந்ததுஇந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3–வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில்

மேலும்...

 ஜிம்பாப்வேயை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி
ஜிம்பாப்வேக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. ஜிம்பாப்வே அணியை 62 ரன்கள் வித்தியாசத்தில்  வீழ்த்தியது. முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 271 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் ரஹானே

மேலும்...

 கெய்ல் அதிரடி சதம் வீண்
இங்கிலாந்தில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரில், வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கேல் அதிரடியாக 62 பந்தில் 151 ரன் விளாசியும்  சாமர்செட் அணி பரிதாபமாக தோல்வியைத் தழுவியது. டான்டன் கவுன்டி மைதானத்தில் நடந்த இந்த போட்டியில், டாசில் வென்று முதலில்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in