tamilkurinji logo


 

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய தடுமாற்றம்,tamil news cricket news

tamil,news,cricket,news




செய்திகள் >>> விளையாட்டு

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய தடுமாற்றம்

First Published : Friday , 6th March 2015 06:36:12 AM
Last Updated : Friday , 6th March 2015 06:36:12 AM


வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய  தடுமாற்றம்,tamil news cricket news

உலக கோப்பை கிரிக்கெட் திருவிழாவில், ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள நடப்பு சாம்பியன் இந்திய அணி,முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீசுடன் இன்று (வெள்ளிக்கிழமை) பெர்த்தில் மோதியது.


இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஹோல்டர் தங்கள் அணி முதலில் பேட் செய்யும் என்று தெரிவித்தார். இதன் படி முதலில் களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஸ்மித்தும், கெய்லும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர்.

தாறுமாறாக பவுன்ஸ் ஆகும் பெர்த் மைதானத்தில் எதிபார்த்தது போலவே இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆக்ரோஷம் காட்டினர். இதனால், வெஸ்ட் இண்டீஸ் அணி 44.2 ஓவர்களில்  இதனால் அந்த அணி 182 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் சமி 3 விக்கெட்டுகளையும் உமேஷ் யாதவ், ஜடேஜா  ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

 இதையடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணியில் தவானும், ரோகித் சர்மாவும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர்.  இந்திய அணியின் பந்து வீச்சுக்கு தக்க பதிலடி கொடுத்த வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சாளர்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான இந்த மைதானத்தில் துல்லியமாக பந்து வீசி இந்திய பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடி அளித்தனர்.  குறிப்பாக டெய்லர் கடும் ஆக்ரோஷம் காட்டினார்.

இதனால் , தவான்(9) ரோகித் சர்மா (7)  ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்னில்  வெளியேறி ஏமாற்றம் அளித்தனர். 20 ரன்களுக்குள் 2 முக்கிய விக்கெட்டுகளை இழந்ததால் ரசிகர்கள் பதட்டத்துக்குள்ளாயினர். இருப்பினும், ஓரளவு நம்பிக்கை காட்டிய விராட் கோலி 33 ரன்களில் ரஸ்சல் பந்தில் சாமுவேல்ஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பொறுமையுடன் விளையாடி வந்த ரகானேவும் 14 ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார்.  தோனியுடன் கைகோர்த்து ஓரளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சுரேஷ் ரெய்னா 22 ரன்களில் வெளியேறினார்.  

இந்திய அணி  23 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 4 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. கேப்டன் தோனி 5 ரன்னுடனும், ஜடேஜா ரன் எதுவும் இன்றியும் களத்தில் உள்ளனர். 5  விக்கெட்டுகள் கைவசம் உள்ள நிலையில் இந்திய அணி வெற்றி பெற இன்னும் 76  ரன்கள் தேவையுள்ளது. இதனால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றியுள்ளது

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய  தடுமாற்றம்,tamil news cricket news வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய  தடுமாற்றம்,tamil news cricket news வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய  தடுமாற்றம்,tamil news cricket news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 IPL கிரிக்கெட்டில் புனே அணிக்கு 9–வது வெற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது
IPL 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் புனே அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பை தோற்கடித்து 9–வது வெற்றியை பெற்றதுடன், அடுத்த சுற்றுக்கும் முன்னேறியது. 10–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த ஏப்ரல்

மேலும்...

 IPL கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது, ஐதராபாத் அணி
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்தை எளிதில் தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.10–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்தை எட்டி விட்டது. இதில் பங்கேற்றுள்ள

மேலும்...

 மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் ‌ஷரபோவா தோல்வி
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2–வது சுற்று ஆட்டத்தில் ரஷிய வீராங்கனை ‌ஷரபோவா, கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர்

மேலும்...

 ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை தோற்கடித்து 6–வது வெற்றியை பெற்றது.  10–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்தை நெருங்கி வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in