tamilkurinji logo
 

வேலூர் அருகே கார்கள் தொடர் மோதல் : 6 பேர் பலி 10 பேர் படுகாயம்,வேலூர் அருகே கார்கள் தொடர் மோதல் : 6 பேர் பலி 10 பேர் படுகாயம்

வேலூர்,அருகே,கார்கள்,தொடர்,மோதல்,:,6,பேர்,பலி,10,பேர்,படுகாயம்


செய்திகள் >>> தமிழகம்

வேலூர் அருகே கார்கள் தொடர் மோதல் : 6 பேர் பலி 10 பேர் படுகாயம்

First Published : Monday , 7th August 2017 10:22:49 AM
Last Updated : Monday , 7th August 2017 10:22:49 AM


வேலூர் அருகே கார்கள் தொடர் மோதல் : 6 பேர் பலி 10 பேர் படுகாயம்,வேலூர் அருகே கார்கள் தொடர் மோதல் : 6 பேர் பலி 10 பேர் படுகாயம்

வேலூர் ஆற்காடு அருகே 3 கார்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட விபத்தில் 6 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். மேலும் 10 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: வேலூரை அடுத்த ரத்தினகிரி அருகே நந்தி யாலம் பகுதியில் இருந்து எதிர் திசையில் இருந்த தேசிய நெடுஞ் சாலையை அதே பகுதியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ரவிச்சந்திரன் (வயது 55) என்பவர்  இருசக்கர வாகனத்தில் கடக்க முயன்றார்.

அப்போது சென்னையில் இருந்து வேலூர் நோக்கி வந்து கொண்டிருந்த சொகுசு காரின் ஓட்டுநர், இரு சக்கர வாகனம் மீது மோதாமல் இருக்க பிரேக் பிடித்தார். இதனால் அதிவேகமாக வந்த அந்த கார், தேசிய நெடுஞ்சாலையில் இடது-வலது பக்கமாக சுழன்று சாலையின் பக்கவாட்டில் நின்றது. அப்போது பின்னால் வந்த மற்றொரு டாடா இண்டிகா கார், சொகுசு கார் மீது மோதியது. அடுத்த நொடி, டாடா இண்டிகா கார் பின்னே மற்றொரு கார் மோதியது.

3 கார்களும் அடுத்தடுத்து மோதிக் கொண்ட இந்த  விபத்தில், சம்பவ இடத்திலும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலும் 5 பேர் இறந்தனர். மேலும் மோட்டார்சைக்கிள் மீது கார் மோதியதில் காயம் அடைந்த முன்னாள் ராணுவ வீரர் ரவிச்சந்திரனும் இறந்து விட்டார். இதனால் சாவு எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது.இந்த விபத்தில் காயம் அடைந்த கஸ்தூரி (38), சரண் (10), மோகன் (45), காயத்ரி (15), ரூபஸ்ரீ (21), மற்றொரு கஸ்தூரி (24), கீர்த்தன் (25), நிஷாந்த் (25), பிரினித் (14) ஆகிய 9 பேர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் ஒருவர் வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தில் உருக்குலைந்த கார்களின் டீசல் டேங்க் உடைந்து சாலைகளில் டீசல் வழிந்தோடியது. ஆற்காடு தீயணைப்பு வீரர்கள் சாலையில் ஓடிய டீசல் மீது தண்ணீரைப் பாய்ச்சி அடித்தனர்.

இந்த விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் 3 மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்தில் சிக்கிய கார்களை போலீஸார் அப்புறப்படுத்தி போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர்.

வேலூர் மாவட்ட எஸ்பி பகலவன், ஆற்காடு எம்எல்ஏ ஈஸ்வரப்பன், ராணிப்பேட்டை எம்எல்ஏ காந்தி, ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் முனீர் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.


வேலூர் அருகே கார்கள் தொடர் மோதல் : 6 பேர் பலி 10 பேர் படுகாயம்,வேலூர் அருகே கார்கள் தொடர் மோதல் : 6 பேர் பலி 10 பேர் படுகாயம் வேலூர் அருகே கார்கள் தொடர் மோதல் : 6 பேர் பலி 10 பேர் படுகாயம்,வேலூர் அருகே கார்கள் தொடர் மோதல் : 6 பேர் பலி 10 பேர் படுகாயம் வேலூர் அருகே கார்கள் தொடர் மோதல் : 6 பேர் பலி 10 பேர் படுகாயம்,வேலூர் அருகே கார்கள் தொடர் மோதல் : 6 பேர் பலி 10 பேர் படுகாயம்
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 கள்ளக்காதலனுடன் சேர்ந்து அக்காவை கொலை செய்த இளம்பெண்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை சேர்ந்தவர் பூபாலன் (வயது 28). இவருடைய மனைவி நதியா (24), மகள் தக்‌ஷிதா (4), மகன் சுதர்சன் (2). பூபாலன் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூர் மாவட்டம் இடுவம்பாளையத்தில் சொந்தமாக வீடுகட்டி குடியிருந்து வருகிறார். பனியன் நிறுவனங்களில்

மேலும்...

 தங்கம் வென்ற தமிழக வீராங்கனை இளவேனில்
ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: தமிழக வீராங்கனை இளவேனில் தங்கம் வென்று அசத்தினார்.ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவின் இறுதி சுற்றில் இந்திய வீராங்கனை

மேலும்...

 ரூ.824 கோடி வங்கி மோசடி: கனிஷ்க் நிறுவன உரிமையாளர் பூபேஷ்குமாரிடம் சிபிஐ தீவிர விசாரணை
வருமானத்தை அதிகமாக காட்டி 14 வங்கிகளில் கடன் வாங்கி ரூ.824 கோடியை  திருப்பிக்கட்டாமல் மோசடி செய்த கனிஷ்க் நிறுவன உரிமையாளர் புபேஷ்குமார் சென்னையில் சிபிஐ வசம் சிக்கியுள்ளார். மோசடி வழக்கில் பூபேஷ்குமாரை சிபிஐ தீவிரமாக தேடி வந்தது. ஸ்டேட் வங்கி புகாரின்

மேலும்...

 இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருது வழங்கினார் ஜனாதிபதி
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருதை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார். கலை, அறிவியல், மருத்துவம், சமூகசேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை மத்திய அரசு ஆண்டு தோறும் தேர்ந்து எடுத்து பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ விருதுகளை

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in