tamilkurinji logo
 

வைரமுத்து தனி மனிதர் அல்ல; இயக்குனர் பாரதிராஜா அறிக்கை,Vairamuthu-is-not-a-single-person tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

Vairamuthu-is-not-a-single-person,tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news




வைரமுத்து தனி மனிதர் அல்ல; இயக்குனர் பாரதிராஜா அறிக்கை

First Published : Friday , 12th January 2018 08:22:07 PM
Last Updated : Friday , 12th January 2018 08:22:07 PM


வைரமுத்து தனி மனிதர் அல்ல; இயக்குனர் பாரதிராஜா அறிக்கை,Vairamuthu-is-not-a-single-person tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news


தமிழகத்தில் எழுத்து, பேச்சு, கருத்து சுதந்திரம் எல்லாம் இல்லாமல் போய்விட்டது என்றும் வைரமுத்து என்பவர் தனி மனிதர் அல்ல, தமிழகத்தின் பெரு அடையாளம் என்றும் திரைப்பட இயக்குனர் பாரதிராஜா கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில், தனிமனித உரிமை பறிக்கப்பட்டு, எவ்வளவோ நாட்களாகி விட்டன. எழுத்துச் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் இல்லாமல் போய்விட்டது.

சமீபத்தில் நிகழ்ந்த ஒரு கசப்பான சம்பவம் என்னை இரவெல்லாம் தூங்கவிடாமல் செய்தது. தமிழகத்தில் வரலாற்றில் புலவர்கள், எழுத்தாளர்கள் கவிஞர்கள் தோன்றி இறவாப்புகழ் அடைந்திருக்கிறார்கள்.

இன்று, நம் கொடுப்பினை நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் பெருங்கவிஞன், கவிப்பேரரசு வைரமுத்து, தமிழைத் திசைகள் தோறும் தெரியப் படுத்தியவர்.

மணிமேகலையும், சிலப்பதிகாரமும் இரட்டைக்காப்பியங்கள் என்றால், வைரமுத்து படைத்த கள்ளிக்காட்டு இதிகாசமும், கருவாச்சி காவியமும் எளிய மனிதர்களின் இரட்டைக் காப்பியமில்லையா? அந்த அளவில் தமிழை எளிமைப்படுத்திய கவிஞனை இழிசொற்களால் எப்படிப் பேசலாம்?

வைரமுத்து என்பவர் தனிமனிதரல்ல, தமிழினத்தின் பெருஅடையாளம் என்பதை விமர்சிப்பவர்களே, உணர்ந்து கொள்ள வேண்டும். ஒரு படைப்பாளன் தன் கருத்துகளைச் சொல்லலாம். இல்லை மேற்கோள் காட்டலாம் அதை அட்சர சுத்தமாக தவறென்று தட்டிக் கேட்க எவனுக்கும் அதிகாரமில்லை.

சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், சமகால இலக்கியம் என்ற பாகுபாடில்லாமல் மறைந்த கவிஞர்களை, எழுத்தாளர்களை மேடை தோறும், முழங்கி அவர்களின் பெருமைகளைப் பட்டியலிடும் கவிஞனை எப்படி நாக்கில் நரம்பில்லாமல் ஒருவர் பேசுவது? எச்.ராஜா பேசியது அநாகரீகத்தின் உச்சம். ‘தமிழை ஆண்டாள்’ என்ற தலைப்பில், ஆண்டாளை எளிய மனிதனுக்கும் புரியும் விதத்தில் பேசிய கவிஞனின் பிறப்பை இழிசொல்லால் இழிவுபடுத்தி விட்டார்.

வைணவத்தைத் தமிழாக்கிய திருப்பாவையை, கருவறையிலிருந்து தெருவுக்குக் கொண்டு வந்து சாதாரண மனிதர்களின் காதுகளில் ஊற்றிய கவிஞனைத் தரம் தாழ்த்திப் பேசுவதா? திருப்பாவை சமஸ்கிருதமல்ல, தமிழ் என்பதை எச்.ராஜா உணர்ந்து கொள்ளவேண்டும்.

நிறைய மனிதர்களின் வாழ்வுக்கு ஒரு வழிகாட்டியாய் வாழும் ஒரு மனிதனை நாக்கில் நரம்பில்லாமல் எப்படி பேச முடியும்? கவனமாகப் பேசுங்கள். எச்.ராஜா போல நிறைய மனிதர்கள் இந்த நாட்டில் இருக்கிறார்கள். ஆனால், வைரமுத்து போல சில நல்ல அடையாளங்கள் தான் இருக்கின்றன.

எச்.ராஜா பேச்சு எங்கள் தமிழர்களைப் பழித்தது. தமிழ் உணர்வுகளைச் சிதைத்தது. தமிழனாக இருந்தால் அப்படிப் பேசியிருக்கமாட்டார். நாங்கள் தன்மானத்தையும், வீரத்தையும், விவேகத்தையும் இழக்கவில்லை என்பதை எச்சரிக்கை செய்கிறேன். இவ்வாறு பாரதிராஜா கூறியுள்ளார்.

வைரமுத்து தனி மனிதர் அல்ல; இயக்குனர் பாரதிராஜா அறிக்கை,Vairamuthu-is-not-a-single-person tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
வைரமுத்து தனி மனிதர் அல்ல; இயக்குனர் பாரதிராஜா அறிக்கை,Vairamuthu-is-not-a-single-person tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
வைரமுத்து தனி மனிதர் அல்ல; இயக்குனர் பாரதிராஜா அறிக்கை,Vairamuthu-is-not-a-single-person tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 கோவை அருகே பிரபல கன்னட நடிகர் துனியா விஜய் கைது
கடந்த வருடம் அக்டோபர் மாதம் படப்பிடிப்பின்போது 2 துணை நடிகர்கள் அணையில் இருந்து தவறி விழுந்து இறந்தனர். இது தொடர்பாக அந்த படத்தின் தயாரிப்பாளர் சுந்தர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.இந்த நிலையில் கோர்ட்டில் ஆஜராகாததால் தயாரிப்பாளர்

மேலும்...

 காலா’ பட திரையரங்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் - முதல் அமைச்சர் குமாரசாமி
கர்நாடகாவில் புதிய மந்திரிகள் பதவி ஏற்புக்கு பின், மந்திரிசபை கூட்டம் முதல்–மந்திரி குமாரசாமி தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின் குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘காலா’ படத்திற்கு கர்நாடகத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதனால் அந்த படத்தை

மேலும்...

 ஜோதிகா நடிப்பில் உருவாகும் `காற்றின் மொழி' படப்பிடிப்பு பூஜையுடன் துவக்கம்
 ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகும் `காற்றின் மொழி' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியிருக்கிறது. ஜோதிகா நடிப்பில் கடைசியாக வெளியான `நாச்சியார்' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் `செக்கச் சிவந்த வானம்' படத்திலும்

மேலும்...

 யார் நீங்க " என்று கேட்ட இளைஞர்; அதிர்ச்சியில் ரஜினிகாந்த் தூத்துக்குடி சுவாரஸ்யம்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டக்காரர்கள்மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டின்போது ஏற்பட்ட கலவரத்தில் படுகாயமடைந்தவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக நடிகர் ரஜினிகாந்த் இன்று, தூத்துக்குடி சென்றார். அப்போது, துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நபர் ஒருவர், ``நீங்கள் யார்? இப்போது

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்















Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in