tamilkurinji logo


 

ஷரபோவா,செரீனா மோதல்,sports news

sports,news




செய்திகள் >>> விளையாட்டு

ஷரபோவா,செரீனா மோதல்

First Published : Saturday , 8th June 2013 12:04:43 AM
Last Updated : Saturday , 8th June 2013 12:04:43 AM


ஷரபோவா,செரீனா மோதல்,sports news

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று 'கிளைமேக்ஸ்' அரங்கேறுகிறது. சாம்பியன் மகுடத்திற்கான இறுதி ஆட்டத்தில் நம்பர் ஒன் வீராங்கனை அமெரிக்காவின் செரீனா வில்லியம்சும், நடப்பு சாம்பியனும் 2-ம் நிலை வீராங்கனையுமான ரஷியாவின் மரிய ஷரபோவாவும் கோதாவில் இறங்குகிறார்கள்.

சமீப காலமாக வீறுநடை போட்டு வரும் 31 வயதான செரீனாவுக்கே கோப்பையை வெல்ல பிரகாசமான வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் கணித்துள்ளனர். இந்த சீசனில் தொடர்ச்சியாக 30 ஆட்டங்களில் வெற்றிகளை பதிவு செய்துள்ள செரீனா, 2004-ம் ஆண்டுக்கு பிறகு ஷரபோவாவிடம் தோற்றதில்லை.

அவருக்கு எதிராக இதுவரை 15 ஆட்டங்களில் மோதியுள்ள செரீனா அதில் 13-ல் வெற்றி கண்டிருக்கிறார். செரீனா, பிரெஞ்ச் ஓபனை 2002-ம் ஆண்டு மட்டுமே வென்றுள்ளார். தனது 11 ஆண்டு கால பிரெஞ்ச் ஓபன் தாகத்தை தணிக்க அவருக்கு அருமையான வாய்ப்பு கிட்டியுள்ளது. இந்த பட்டத்தையும் வென்றால் இது அவரது 16வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாக அமையும்.

செரீனாவை வீழ்த்த நீண்ட காலமாக போராடி வரும் 26 வயதான மரிய ஷரபோவா, இந்த முறை கடுமையான சவால் அளிப்பார் என்று நம்பலாம்.  களத்தில் இருவரும் ஆக்ரோஷமாக ஆடக்கூடியவர்கள் என்பதால் ரசிகர்களுக்கு விருந்து காத்திருக்கிறது. பட்டம் வெல்லும் வீராங்கனைக்கு ரூ.10 3/4 கோடி பரிசுத்தொகையாக வழங்கப்படும்.

ஷரபோவா,செரீனா மோதல்,sports news ஷரபோவா,செரீனா மோதல்,sports news ஷரபோவா,செரீனா மோதல்,sports news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் ‌ஷரபோவா தோல்வி
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2–வது சுற்று ஆட்டத்தில் ரஷிய வீராங்கனை ‌ஷரபோவா, கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர்

மேலும்...

 இந்தியா-தென்னாப்பிரிக்கா மோதல் தயார்
இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி சென்னையில் வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் நடக்கவுள்ளது.வரும் அக்டோபர் மாதம் இந்தியா வரவுள்ள தென் ஆப்ரிக்க அணி நான்கு டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்றும் மூன்று சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டிகள்

மேலும்...

 ஷரபோவா பிரெஞ்ச் ஓபன் தொடரை கைப்பற்றினார்
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ரஷ்யாவின் ஷரபோவா, ஜெர்மனியின் கெர்பர், ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசர் உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.பிரான்ஸ் தலைநகர் பாரிசில், பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு

மேலும்...

 7-வது ஐ.பி.எல். கிரிக்கெட் இன்று தொடக்கம்: மும்பை-கொல்கத்தா மோதல்
7-வது ஐ.பி.எல். கிரிக்கெட் கொண்டாட்டம் அபுதாபியில் இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது.

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in