ஷரபோவா அசத்தல் வெற்றி

ஷரபோவா அசத்தல் வெற்றி
 பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றுக்கு, "நடப்பு சாம்பியன்' ரஷ்யாவின் மரியா ஷரபோவா, பெலாரசின் விக்டோரியா அசரன்கா உள்ளிட்ட முன்னணி வீராங்கனைகள் முன்னேறினர்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில், பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றில், ரஷ்யாவின் மரியா ஷரபோவா, சீனாவின் ஜீ ஜெங்கை சந்தித்தார். முதல் செட்டை 6-1 என எளிதாக வென்ற ஷரபோவா, 2வது செட்டை 7-5 என போராடி கைப்பற்றினார்.

இறுதியில் ஷரபோவா 6-1, 7-5 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு 3வது சுற்றுப் போட்டியில், பெலாரசின் விக்டோரியா அசரன்கா, பிரான்சின் அலைஸ் கார்னட்டை சந்தித்தார். முதல் செட்டை கார்னட் 6-4 எனக் கைப்பற்றினார். பின் எழுச்சி கண்ட அசரன்கா, 2வது செட்டை 6-3 எனக் கைப்பற்றி பதிலடி கொடுத்தார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் மீண்டும் அசத்திய பெலாரஸ் வீராங்கனை 6-1 என தன்வசப்படுத்தினார். இறுதியில் அசரன்கா 4-6, 6-3, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.

பெண்கள் பிரிவில் நடந்த மற்ற மூன்றாவது சுற்றுப் போட்டிகளில் செர்பியாவின் அனா இவானோவிச், அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸ், இத்தாலியின் பிரான்சஸ்கா ஷியவோன், அமெரிக்காவின் பெதானி மட்டக்-சாண்ட்ஸ் ஆகியோர் வெற்றி பெற்று நான்காவது சுற்றுக்குள் நுழைந்தனர்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றில் ஜப்பானின் கெய் நிஷிகோரி, பிரான்சின் பெனாய்ட் பய்ரி மோதினர். இதில் அபாரமாக ஆடிய நிஷிகோரி 6-3, 6-7, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, நான்காவது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

 ஆண்கள் இரட்டையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், ஆஸ்திரியாவின் ஜர்ஜன் மெல்சர் ஜோடி, உருகுவேயின் பாப்லோ, ஹோராசியோ ஜிபல்லோஸ் ஜோடியிடம் 7-5, 4-6, 6-7 என்ற செட் கணக்கில் போராடி தோல்வி அடைந்தது.
https://goo.gl/27kYUz


15 May 2017

IPL கிரிக்கெட்டில் புனே அணிக்கு 9–வது வெற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது

14 May 2017

IPL கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது, ஐதராபாத் அணி

09 May 2017

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் ‌ஷரபோவா தோல்வி

09 May 2017

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி

17 Jan 2016

3-வது ஒருநாள் கிரிக்கெட்: விராட் கோலி சதம் வீண், இந்தியா மீண்டும் தோல்வி -ஆஸ்திரேலியா வெற்றி

12 Jul 2015

ஜிம்பாப்வேயை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

01 Jun 2015

கெய்ல் அதிரடி சதம் வீண்

28 May 2015

நீட்டா அம்பானி விருந்தில் திளைத்த மும்பை அணி வீரர்கள்

25 May 2015

இந்தியா-தென்னாப்பிரிக்கா மோதல் தயார்

25 May 2015

ஷரபோவா பிரெஞ்ச் ஓபன் தொடரை கைப்பற்றினார்