tamilkurinji logo
 

ஸ்டாலின் தலைமையில் திமுக எந்தத் தேர்தலிலும் வெற்றிபெறாது:மு.க.அழகிரி ,tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news M K Alagiri lashes out at M K Stalin, blames him for DMK's constant failure

tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news M,K,Alagiri,lashes,out,at,M,K,Stalin,,blames,him,for,DMK's,constant,failure



செய்திகள் >>> தமிழகம்

ஸ்டாலின் தலைமையில் திமுக எந்தத் தேர்தலிலும் வெற்றிபெறாது:மு.க.அழகிரி

First Published : Thursday , 28th December 2017 11:52:04 AM
Last Updated : Thursday , 28th December 2017 11:52:04 AM


ஸ்டாலின் தலைமையில் திமுக எந்தத் தேர்தலிலும் வெற்றிபெறாது:மு.க.அழகிரி ,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

M K Alagiri lashes out at M K Stalin, blames him for DMK's constant failure

ஸ்டாலின் தலைமையில் திமுக எந்தத் தேர்தலிலும் வெற்றிபெறாது என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூறியுள்ளார்.

தனியார் செய்தித் தொலைக்காட்சிக்கு அழகிரி இன்று அளித்த தொலைபேசிப் பேட்டியில் கூறுகையில், ''ஸ்டாலின் செயல் தலைவராக இருக்கும்வரை திமுக எந்தத் தேர்தலிலும் வெற்றிபெறாது.


ஸ்டாலினுடன் இருப்பவர்களின் செயல்பாடுகள் சரியில்லை. துரோகம் செய்தவர்களுக்கு பதவி கொடுப்பதை நிறுத்தினால் மட்டுமே திமுக முன்னேறும்.

திமுக தலைவர் கருணாநிதியைப் போன்று களப்பணி செய்தால்தான் தேர்தலில் திமுக வெற்றி பெறும். தலைவர் கருணாநிதி தலைமையில் கடந்த நான்கு ஆண்டுகளாக எல்லா தேர்தலிலும் திமுக வெற்றி பெற்றது.

இப்போது கருணாநிதி ஓய்வில் இருக்கும் இந்த சூழலில் ஸ்டாலின் தலைமையில் திமுக எதிர்கொண்ட ஆர்.கே.நகர் தேர்தலில் டெபாசிட் கூட பெற முடியவில்லை.

எந்தக் கட்சியும் தோல்வியை ஒப்புக்கொள்வதில்லை. திமுகவினர் பணத்துக்கு சோரம் போய்விட்டதாக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் கூறுகிறார். பணத்துக்காக திமுக தொண்டர்கள் விலை போய்விட்டதாக கூறுவது தவறு.

வெற்றிப்பாதையில் செல்ல வேண்டுமென்றால் திமுகவில் மாற்றம் தேவை. பணம் கொடுக்காமல் தேர்தலில் வெற்றி பெற முடியும். அதற்கு களப்பணி செய்ய வேண்டும்.


தினகரன் இரட்டை இலை, உதயசூரியன் தோற்கும் அளவுக்கு களப்பணி செய்திருக்கிறார். பணம் கொடுத்தால் மட்டுமே வெற்றிபெற முடியாது. பல்வேறு மாநிலங்களில் எதிர்பார்க்காத பலர் ஆட்சி அமைக்கிறார்கள்'' என்று அழகிரி கூறினார்.

ஸ்டாலின் தலைமையில் திமுக எந்தத் தேர்தலிலும் வெற்றிபெறாது:மு.க.அழகிரி ,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

M K Alagiri lashes out at M K Stalin, blames him for DMK's constant failure ஸ்டாலின் தலைமையில் திமுக எந்தத் தேர்தலிலும் வெற்றிபெறாது:மு.க.அழகிரி ,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

M K Alagiri lashes out at M K Stalin, blames him for DMK's constant failure ஸ்டாலின் தலைமையில் திமுக எந்தத் தேர்தலிலும் வெற்றிபெறாது:மு.க.அழகிரி ,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

M K Alagiri lashes out at M K Stalin, blames him for DMK's constant failure
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in