ஸ்பெயினை பெடெலெடுத்த சிலி : வெளியேறியது ஸ்பெயின்

ஸ்பெயினை பெடெலெடுத்த சிலி : வெளியேறியது ஸ்பெயின்
சிலி அணிக்கு எதிரான உலக கோப்பை தொடரின் லீக் போட்டியில் தோல்வியடைந்த ஸ்பெயின் அணி தொடரில் இருந்து வெளியேறியது.

பிரேசிலில் 20வது உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. நெதர்லாந்துக்கு எதிரான முதல் லீக் போட்டியில் தோல்வியடைந்த 'நடப்பு சாம்பியன்' ஸ்பெயின் அணி, சிலி அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் கட்டாய வெற்றியை நோக்கி களமிறங்கியது.

ரியோ டி ஜெனிரோவின் மரகானா மைதானத்தில் நடந்த இப்போட்டியின் துவக்கம் முதல் சிலி வீரர்களின் ஆதிக்கமே அதிகம் இருந்தது.‌ ஸ்பெயின் வீரர்களின் தடுப்பு ஆட்டத்தை மீறி அசத்தல் ஆட்டத்த‌ை வெளிப்படுத்திய சிலி அணியின் வார்கஸ் (20வது நிமிடம்) முதல் கோல் அடித்தார்.

தொடர்ந்து போட்டியின் 43வது நிமிடத்தில் சிலி வீரர் அரான்கியூஸ் (43) அடித்த பந்தை ஸ்பெயின் கோல்கீப்பர் கேசிலாஸ் தடுக்க தவற சிலி அணிக்கு இரண்டாவது கோல் கிடைத்தது.

பின் பரபரப்பாக துவங்கிய இரண்டாவது பாதியில் ஸ்பெயினின் தியாகோ கோஸ்டா (52வது நிமிடம்) அடித்த பந்தை செர்ஜியோ கோலாக மாற்ற தவறினார். சிலி வீரர்கள் தங்கள் பங்கிற்கு ஸ்பெயின் வீரர்களின் கோல் முயற்சியை சிறப்பாக தடுத்தனர்.

கடைசி வரை போராடிய ஸ்பெயின் அணி வீரர்களால் கோல் எதுவும் அடிக்கமுடியவில்லை. சிலி அணியும் இரண்டாவது பாதியில் கோல் எதுவும் அடிக்கவில்லை. ஆட்டநேர முடிவில், சிலி அணி 2-0 என ஸ்பெயினை வீழ்த்தியது.

இந்த தோல்வியால் பங்கேற்ற இரண்டு லீக் போட்டியிலும் ‌தோல்வியை சந்தித்த ‌ஸ்பெயின் அணி உலக கோப்பை தொடரில் இருந்து முதல் அணியாக பரிதாபமாக வெளியேறியது.
https://goo.gl/Y4LcKD


15 May 2017

IPL கிரிக்கெட்டில் புனே அணிக்கு 9–வது வெற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது

14 May 2017

IPL கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது, ஐதராபாத் அணி

09 May 2017

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் ‌ஷரபோவா தோல்வி

09 May 2017

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி

17 Jan 2016

3-வது ஒருநாள் கிரிக்கெட்: விராட் கோலி சதம் வீண், இந்தியா மீண்டும் தோல்வி -ஆஸ்திரேலியா வெற்றி

12 Jul 2015

ஜிம்பாப்வேயை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

01 Jun 2015

கெய்ல் அதிரடி சதம் வீண்

28 May 2015

நீட்டா அம்பானி விருந்தில் திளைத்த மும்பை அணி வீரர்கள்

25 May 2015

இந்தியா-தென்னாப்பிரிக்கா மோதல் தயார்

25 May 2015

ஷரபோவா பிரெஞ்ச் ஓபன் தொடரை கைப்பற்றினார்