ஸ்ரீதேவி உடல் தகனம்: அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

ஸ்ரீதேவி உடல் தகனம்: அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு
துபாயில் உயிரிழந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல் மும்பை வில்லேபார்லே மேற்கு பவன்ஹன்ஸ் அருகே உள்ள மின் மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது.

இந்திய திரையுலகின் கனவுக்கன்னி என்று வர்ணிக்கப்பட்ட நடிகை ஸ்ரீதேவி, உறவினர் திருமணத்தில் கலந்துகொள்ள துபாய் சென்றபோது கடந்த 24-ந் தேதி மரணம் அடைந்தார்.


ஓட்டலில் தங்கி இருந்த அவர் குளியலறைக்கு சென்றபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து இறந்ததாக கூறப்பட்டது.

உடற்கூறு ஆய்வுக்கு பிறகு, ஸ்ரீதேவி மாரடைப்பால் இறக்கவில்லை. 

அவர் மது போதையில், குளியல் தொட்டியில் விழுந்து, மூச்சு விடமுடியாமல் மரணமடைந்தார் என அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக ஸ்ரீதேவி உடலை உறவினர்களிடம் ஒப்படைப்பதில் தாமதம் ஏற்பட்டது.

ஸ்ரீதேவியின் மரணம் தொடர்பாக விசாரணையை துபாய் காவல்துறை மேற்கொண்டது. ஸ்ரீதேவியின் மரணத்தில் குற்ற நோக்கம் எதுவும் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்ததையடுத்து இந்த வழக்கை துபாய் போலீஸ் முடித்து வைத்தது.

இதன்பிறகு, உரிய நடைமுறைகளுக்கு பிறகு ஸ்ரீதேவியின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதை தொடர்ந்து நடிகை ஸ்ரீதேவி உடல் பதப்படுத்தும் பணி தொடங்கியது.

உடலை பதப்படுத்தும் பணி முடிந்ததும்  துபாய் சுகாதார அதிகாரிகளால்  உடலை பதப்படுத்திய சான்றிதழ் வழங்கபட்டது , உடனடியாக அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் துபாய் விமான நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.  

துபாய் விமான நிலையத்திலிருந்து, ஸ்ரீதேவி உடல் தனி விமானம் மூலம் இந்தியா எடுத்துவரப்பட்டது. ஸ்ரீதேவியின் உடல் நேற்று இரவு சுமார் 9.35 மணியளவில் மும்பை கொண்டு வரப்பட்டது.

நடிகை ஸ்ரீதேவியின் உடல் தனி விமானம் மூலம் நேற்று இரவு மும்பை விமான நிலையம் வந்தடைந்தது. அங்கிருந்து உடல் ஆம்புலன்ஸ் மூலம் அந்தேரி மேற்கு லோகண்ட்வாலா கிரீன் ஏக்கர்ஸ் அடுக்குமாடி கட்டிடத்தில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்து வரப்பட்டது.

 உடலை பார்த்த ஸ்ரீதேவியின் மகள்கள் ஜான்வி, குஷி ஆகியோர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். அவர்களை உறவினர்கள் தேற்றினர். ஸ்ரீதேவியின் உடலுக்கு குடும்பத்தினர் சடங்குகளை செய்தனர்.

நடிகை ஸ்ரீதேவியின் உடல் இன்று (புதன்கிழமை) காலை அந்த பகுதியில் உள்ள செலிபிரேஷன் ஸ்போர்ட்ஸ் கிளப் வளாகத்திற்கு கொண்டுவரப்பட்டது. 

ஸ்ரீதேவியின் உடலுக்கு தேசிய கொடி போர்த்தப்பட்டு மகாராஷ்டிர அரசு சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.  ஸ்ரீதேவியின் உடல் காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

 திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் திரண்டு வந்து ஸ்ரீதேவியின் உடலுக்கு அஞசலி செலுத்தினர். தொடர்ந்து  இறுதி ஊர்வலம் நடைபெற்றது. ரசிகர்கள், பொதுமக்கள் சாலையின் இருபுறமும் திரண்டு நின்று  இறுதி ஊர்வலத்தில் தங்கள் சோகத்தை வெளிப்படுத்தினர் .

இதைத்தொடர்ந்து, மும்பை வில்லேபார்லே மேற்கு பவன்ஹன்ஸ் அருகே உள்ள மயானத்தில் ஸ்ரீதேவியின் உடல்  தகனம் செய்யப்பட்டது.
https://goo.gl/iCRF5H


18 Dec 2018

ஐபிஎல் ஏலம் : அதிக விலை போன இந்திய பந்து வீச்சாளர்கள்

14 Dec 2018

4 வது மாடியில் இருந்து குதித்து பிரபல டிவி தொகுப்பாளினி தற்கொலை

13 Dec 2018

தெலங்கானா முதல்வராக தொடர்ந்து 2-வது முறையாக சந்திரசேகர் ராவ் பதவி ஏற்றார்

11 Dec 2018

பா.ஜனதா 5 ஆண்டுகளாக எதையும் செய்யவில்லை என்பதை மக்கள் உறுதியளித்துள்ளனர் -சந்திரபாபு நாயுடு

11 Dec 2018

பா.ஜ.க. செல்வாக்கு இழந்து விட்டதையே 5 மாநில தேர்தல் முடிவுகள் காட்டுகிறது - ரஜினி

10 Dec 2018

பா.ஜனதாவை வீழ்த்த 14 கட்சி கூட்டணி- டெல்லியில் இன்று முக்கிய ஆலோசனை

10 Dec 2018

நாடு முழுவதும் செங்கல் மூலம் கட்டிடம் கட்டத் தடை: மத்திய அரசு திட்டம்

16 Oct 2018

நாளை நடைதிறப்பு - சபரிமலை கோவிலில் பலத்த பாதுகாப்பு

11 Oct 2018

மசூதியில் பெண்களை தொழுகைக்கு அனுமதிக்க வேண்டும்: கேரள முஸ்லிம் பெண்கள் கூட்டமைப்பு

10 Oct 2018

சிறுமி பலாத்காரம் “என்னுடைய மகனை தூக்கிலிடுங்கள், மற்றவர்களை தாக்காதீர்கள்