ஹிலாரி வெற்றிபெற 1008 தேங்காய்களை உடைத்து இலங்கை தமிழர்கள் பிரார்த்தனை

ஹிலாரி வெற்றிபெற 1008 தேங்காய்களை உடைத்து இலங்கை தமிழர்கள் பிரார்த்தனை
ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் ஹிலாரி அதிபராக வேண்டும் என நவம்பர் 8-ஆம் தேதி 1000 தேங்காய்களை உடைத்து இலங்கைத் தமிழர்கள் பிரார்த்தனையில் ஈடுபடவுள்ளனர்.

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 8-ம் தேதி நடைபெறுகிறது. இதனை அடுத்து அமெரிக்க தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

இந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் பிரசித்திப் பெற்ற கந்தசாமி கோயிலில் இலங்கையின் தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியைச் சார்ந்த உறுப்பினர்கள், ஹிலாரி வெற்றி பெற வேண்டி 1000 தேங்காய்களை உடைத்தும், 1008 மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்து பிரார்த்தனையில் ஈடுபடப்போவதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியைச் சேர்ந்த சிவாஜிலிங்கம் கூறும்போது, "வருகின்ற நவம்பர் 8-ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி வெற்றி பெற வேண்டி 1000 தேங்காய் உடைக்கப்படவுள்ளன. இலங்கைத் தமிழர்களாகிய நாங்கள் ஹிலாரியின் வெற்றியை எதிர்பார்க்கிறோம்.

ஹிலாரியின் வெற்றி இலங்கையில் சிறுப்பான்மையினராக உள்ள தமிழ் மக்களுக்கு மிக முக்கியமானது. இலங்கையில் நிலவும் அரசியல் பிரச்சனைகளுக்கு அமெரிக்காவின் தலையீடு முக்கியம்" என்று கூறினார்.

முன்னதாக, இலங்கையில் 2009 ஆம் ஆண்டு நடந்த போருக்குப் பிறகு இலங்கையின் வடக்குப் பகுதியில் ராணுவத்தைக் குறைக்க வேண்டும் என்ற இலங்கைத் தமிழர்களின் கோரிக்கை நீண்ட காலமாக இலங்கை அரசால் ஏற்றுக் கொள்ளப்படாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
https://goo.gl/PXuDXq






03 Aug 2018

1 டிரில்லியன் அமெரிக்க டாலர் வியாபார உலகில் புதிய உச்சம் தொட்டு சாதித்த ஆப்பிள்

11 Jul 2018

மருந்தில் வி‌ஷம் கலந்து 20 நோயாளிகளை கொன்ற செவிலியர்.

10 Jul 2018

தாய்லாந்து குகையிலிருந்து 13 பேரும் பத்திரமாக மீட்பு

06 Jul 2018

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசிய இலங்கை பெண் அமைச்சர் ராஜினாமா

02 Jul 2018

குகைக்குள் சிக்கிய கால்பந்து அணி சிறுவர்கள் 9 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு

24 Jun 2018

சவுதி அரேபியாவில் கார் ஓட்ட பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியது

19 Jun 2018

காரில் மேக்-அப் போட்டுக் கொண்டே சென்ற பெண்ணுக்கு நடந்த விபரிதம்

18 Jun 2018

டொனால்டு டிரம்பின் திட்டத்திற்கு அவருடைய மனைவி மெலானியா எதிர்ப்பு

29 May 2018

முன்னாள் காதலர்களுக்கு ஆந்தராக்ஸ் பவுடர் மிரட்டல் விடுத்த பெண்ணுக்கு 2 ஆண்டு தண்டனை

20 Apr 2018

டைம் இதழ் வெளியிட்ட செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலில் வீராட் கோலி - தீபிகா படுகோனே