‘சென்செக்ஸ்’ 137 புள்ளிகள் உயர்வு

 ‘சென்செக்ஸ்’ 137 புள்ளிகள் உயர்வு
பாராளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வு அறிக்கையில், வரும் 2013–14–ஆம் நிதி ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டீ.பி) வளர்ச்சி 6.1–6.7 சதவீதமாக உயரும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. பணவீக்கம் மற்றும் நிதி பற்றாக்குறை ஓரளவிற்கு குறையும் என முன்னறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, புதன்கிழமை அன்று பங்கு வியாபாரத்தில் விறுவிறுப்பு ஏற்பட்டது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் ‘சென்செக்ஸ்’ 137 புள்ளிகள் அதிகரித்தது.

இன்று (வியாழக்கிழமை) தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டில் நிதி மற்றும் நடப்பு கணக்கு பற்றாக்குறைகளை கட்டுப்படுத்தும் வகையில் அறிவிப்புகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொருளாதார வலிமையில் உலக அளவில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவில் ஜனவரி மாதத்தில் வீடுகள் விற்பனை 4½ ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளதாக செய்தி வெளியானது. இதனையடுத்து, அமெரிக்கா மற்றும் இதர ஆசிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நன்றாக இருந்தது. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.

‘சென்செக்ஸ்’ கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள் பார்தி ஏர்டெல், எல் & டி, மகிந்திரா & மகிந்திரா, ஓ.என்.ஜி.சி., பஜாஜ் ஆட்டோ, பீ.எச்.இ.எல்., டாட்டா ஸ்டீல், என்.டி.பி.சி., ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க், ஜிந்தால் ஸ்டீல் உள்ளிட்ட 22 நிறுவனங்களின் பங்கு விலை உயர்ந்தது. அதேசமயம், கெயில் இந்தியா, இன்ஃபோசிஸ் உள்ளிட்ட எட்டு நிறுவனங்களின் பங்கு விலை குறைந்தது.

வர்த்தகம் முடியும்போது ‘சென்செக்ஸ்’ 137.27 புள்ளிகள் உயர்ந்து 19,152.41 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 19,213.02 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 18,997.82 புள்ளிகள் வரையிலும் சென்றது.

நிப்டி

தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் ‘நிஃப்டி’ 35.55 புள்ளிகள் உயர்ந்து 5,796.90 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 5,818.20 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 5,749.70 புள்ளிகளுக்கும் சென்றது.
https://goo.gl/2Si2Ak


10 May 2017

எஸ்பிஐ வங்கியில் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் குறைப்பு

10 May 2017

ரயில் டிக்கெட்டுகள் கேஷ் ஆன் டெலிவரி - ஐஆர்சிடிசி அறிவிப்பு

09 May 2017

ஜிஎஸ்டி பதிவு முறை விரைவில் தொடங்கும் -மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு

27 May 2015

மார்ட்மொபியை வாங்கியது ஸ்நாப்டீல்

02 Mar 2015

முதல்முறையாக 9 ஆயிரம் புள்ளிகளை தொட்டது 'நிப்டி'

04 Nov 2014

புதிய உச்சத்தை எட்டியது சென்செக்ஸ்; 28 ஆயிரம் புள்ளிகளை தொட்டது

26 Oct 2014

தொடர்ந்து 6-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வு

21 Sep 2014

தங்கம் விலை சரிவு - ஒரே மாதத்தில் சவரனுக்கு 1352 ரூபாய் குறைந்தது

25 May 2014

வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது

24 Apr 2014

23 ஆயிரத்தை நெருங்கும் சென்செக்ஸ்: தொடர்ந்து நான்காவது நாளாக புதிய உச்சத்தை தொடும் பங்குச்சந்தைகள்