‘சென்செக்ஸ்’ 265 புள்ளிகள் அதிகரிப்பு மீண்டும் 19,000 புள்ளிகளை கடந்தது

‘சென்செக்ஸ்’ 265 புள்ளிகள் அதிகரிப்பு மீண்டும் 19,000 புள்ளிகளை கடந்தது
பாரத ரிசர்வ் வங்கி இம்மாதம் வெளியிடும் பணக்கொள்கை ஆய்வு அறிக்கையில் முக்கிய கடன்களுக்கான வட்டியை குறைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து செவ்வாய்க்கிழமை அன்று பங்கு வியாபாரம் மிகவும் நன்றாக இருந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் ‘சென்செக்ஸ்’ மூன்று மாதங்களில் இல்லாத அளவிற்கு 265 புள்ளிகள் அதிகரித்தது.

நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும் வகையில் மேலும் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார். இதனையடுத்து முதலீட்டாளர்கள் பங்குகளை அதிக அளவில் வாங்கினர். மேலும் ஐரோப்பா மற்றும் இதர ஆசிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நன்றாக இருந்தது. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.

ஆசிய–ஜப்பான் பிராந்தியத்தில், செயல்திறனுடன் ஒப்பிடும்போது பங்குகள் விலை குறைவாக உள்ள நான்கு நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும் என கிரெடிட் சூயிஸ் தர நிர்ணய அமைப்பு தெரிவித்தது. இதனால் இந்திய பங்குச் சந்தைகளில் அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு அதிகரித்துள்ளது.

நேற்று நடைபெற்ற வர்த்தகத்தில், வங்கி, ரியல் எஸ்டேட், உலோகம், மோட்டார் வாககம், ஐ.டி. உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின.

‘சென்செக்ஸ்’ கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள் 25 நிறுவனங்களின் பங்கு விலை அதிகரித்தது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு குறித்த தரத்தை மார்கன் ஸ்டான்லி நிறுவனம் உயர்த்தியதையடுத்து இந்நிறுவன பங்கின் விலை 1.69 சதவீதம் உயர்ந்தது. இன்ஃபோசிஸ் பங்கின் விலை 0.62 சதவீதமும், ஐசிஐசிஐ வங்கி பங்கின் விலை 3.36 சதவீதமும் அதிகரித்தது. ‘சென்செக்ஸ்’ கணக்கிடுவதில் இந்த மூன்று நிறுவனங்களின் பங்களிப்பு மட்டும் 20 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.

நிஃப்டி

வர்த்தகம் முடியும்போது ‘சென்செக்ஸ்’ 265.21 புள்ளிகள் அதிகரித்து 19,143.17 புள்ளிகளில் நிலைகொண்டது. அதிகபட்சமாக 19,164.04 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 18,943.62 புள்ளிகளுக்கும் சென்றது.

தேசிய பங்குச் சந்தையிலும் வர்த்தகம் நன்றாக இருந்தது. இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் ‘நிஃப்டி’ 85.75 புள்ளிகள் அதிகரித்து 5,784.25 புள்ளிகளில் நிலைபெற்றது.
https://goo.gl/hi7hDy






10 May 2017

எஸ்பிஐ வங்கியில் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் குறைப்பு

10 May 2017

ரயில் டிக்கெட்டுகள் கேஷ் ஆன் டெலிவரி - ஐஆர்சிடிசி அறிவிப்பு

09 May 2017

ஜிஎஸ்டி பதிவு முறை விரைவில் தொடங்கும் -மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு

27 May 2015

மார்ட்மொபியை வாங்கியது ஸ்நாப்டீல்

02 Mar 2015

முதல்முறையாக 9 ஆயிரம் புள்ளிகளை தொட்டது 'நிப்டி'

04 Nov 2014

புதிய உச்சத்தை எட்டியது சென்செக்ஸ்; 28 ஆயிரம் புள்ளிகளை தொட்டது

26 Oct 2014

தொடர்ந்து 6-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வு

21 Sep 2014

தங்கம் விலை சரிவு - ஒரே மாதத்தில் சவரனுக்கு 1352 ரூபாய் குறைந்தது

25 May 2014

வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது

24 Apr 2014

23 ஆயிரத்தை நெருங்கும் சென்செக்ஸ்: தொடர்ந்து நான்காவது நாளாக புதிய உச்சத்தை தொடும் பங்குச்சந்தைகள்