tamilkurinji logo
 

”வெறுப்பதற்காக யாரும் பிறக்கவில்லை” சாதனை படைத்த ஒபாமாவின் டுவிட்டர் கருத்து ,Obama's tweet about Charlottesville is now the most liked tweet evernews , indianews , tamilnews, indianews, tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

Obama's,tweet,about,Charlottesville,is,now,the,most,liked,tweet,evernews,,,indianews,,,tamilnews,,indianews,,,tamilseithigal,,indiaseithigal,,tamilcinemanews,,,seithigal,செய்திகள்,,தமிழ்செய்திகள்,,தமிழ்


செய்திகள் >>> உலகம்

”வெறுப்பதற்காக யாரும் பிறக்கவில்லை” சாதனை படைத்த ஒபாமாவின் டுவிட்டர் கருத்து

First Published : Wednesday , 16th August 2017 07:39:58 PM
Last Updated : Wednesday , 16th August 2017 07:39:58 PM


”வெறுப்பதற்காக யாரும் பிறக்கவில்லை”  சாதனை படைத்த ஒபாமாவின் டுவிட்டர் கருத்து   ,Obama's tweet about Charlottesville is now the most liked tweet evernews , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

நிறம், மதம் காரணம் காட்டி மற்றவரை வெறுப்பதற்காக யாரும் பிறக்கவில்லை என டுவிட்டரில் ஒபாமா வெளியிட்டுள்ள கருத்து டுவிட்டர் வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளது.

அமெரிக்காவில் 19–ம் நூற்றாண்டில் நடந்த உள்நாட்டுப்போரில் கூட்டாட்சி ராணுவ தளபதியாக இருந்தவர் ஜெனரல் ராபர்ட் லீ. இவருடைய நினைவாக வெர்ஜீனியா மாகாணம், சர்லோட்டஸ்வில்லே நகரில் வைக்கப்பட்டிருந்த சிலையை அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்காவில் வாழும் மேலாதிக்க வெள்ளை இனத்தவர், சர்லோட்டஸ்வில்லே நகரில்  ஒரு கண்டன பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

இதற்கு எதிராக ஒரு தரப்பினர் செயல்பட்டனர். அவர்கள் பேரணிக்கு எதிர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்கள் மீது ஒருவர் காரை வேகமாக ஓட்டி வந்து மோதினார். இதில் 32 வயதான ஒரு பெண் உயிரிழந்தார். 19 பேர் படுகாயம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து அந்த காரின் டிரைவர் கைது செய்யப்பட்டார். அவர் எதற்காக கூட்டத்தினர் மீது காரை வேகமாக ஓட்டி வந்து மோதினார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கலவரத்தில் பலியான பெண்ணுக்கு இரங்கல் தெரிவித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அனைவரும் அமெரிக்கர்களாக ஒன்றிணைய வேண்டும் என்றும் யாரையும் இனங்கண்டு வெறுக்க வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா டுவிட்டரில் ஒரு கருத்தை பதிவு செய்து இருந்தார்.

அதில் நிறம், மதத்தை காரணம் காட்டி மற்றவரை வெறுப்பதற்காக யாரும் பிறக்கவில்லை என குறிப்பிட்டார். மேலும் பல இனத்தை சேர்ந்த குழந்தைகள் ஒன்றுகூடி விளையாடுவதை ஜன்னல் வழியாக ஒபாமா பார்த்து சரிப்பது போன்ற புகைப்படத்தையும் பதிவிட்டார்.

ஒபாமா வெளியிட்டுள்ள இந்த டுவீட் சில மணி நேரங்களில் அவருடைய கருத்துக்கு சுமார் 12 லட்சம் பேர் ரிடுவீட் செய்து இருந்தனர். திங்கள் கிழமை காலை 10 மணி நிலவரப்படி சுமார் 30 லட்சம் பேர் அவரது கருத்துக்கு லைக் செய்து வரவேற்பு தெரிவித்தனர்.  ஒபாமாவின் இந்த டுவீட் டுவிட்டர் வரலாற்றிலேயே அதிகம் லைக் செய்யப்பட்டு 5-வது டுவீட்டாக புதிய சாதனை படைத்துள்ளது.


”வெறுப்பதற்காக யாரும் பிறக்கவில்லை”  சாதனை படைத்த ஒபாமாவின் டுவிட்டர் கருத்து   ,Obama's tweet about Charlottesville is now the most liked tweet evernews , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
”வெறுப்பதற்காக யாரும் பிறக்கவில்லை”  சாதனை படைத்த ஒபாமாவின் டுவிட்டர் கருத்து   ,Obama's tweet about Charlottesville is now the most liked tweet evernews , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
”வெறுப்பதற்காக யாரும் பிறக்கவில்லை”  சாதனை படைத்த ஒபாமாவின் டுவிட்டர் கருத்து   ,Obama's tweet about Charlottesville is now the most liked tweet evernews , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in